சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் அப்போதுதான் குற்றங்கள் குறையும்!

  சுதந்திரம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதல்ல, பிறருக்கு பாதிப்பில்லாத வகையில் எதையும் செய்யலாம் என்பதே!

பெரும்பாலான தவறுகள் நிகழ பயமின்மையே காரணம்! 


இஸ்லாமிய சட்டம் என்றில்லை, சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும், லஞ்சங்கள் ஒழிக்கப்பட வேண்டும், நீதித்துறை உடனே நீதி வழங்கவேண்டும் அப்போதுதான் குற்றங்கள் குறையும்!


பிணத்தை எரித்துவிடுங்கள், அவைகளாவது கற்பழிப்பிலிருந்து தப்பிக்கட்டும்!

  இந்தியாவில் ஒவ்வொரு 54 நிமிடக்களுக்கு ஒருமுறை கற்பழிப்பு முயற்சி நடக்கிறது. 1 மணி 42 நிமிடக்களுக்கு ஒருமுறை வரதட்சனைக்கொடுமையால் ஒரு பெண் உயிரிழக்கிறாள்.

காட்சி 1 : மும்பை, மே-மாதம்.

  14 வயதுச்சிறுமியை அவள் தங்கியிருந்த வீட்டிற்கு அருகிலிருந்த 5 பேர் கடத்தக் கொண்டுபோய் கணக்கெடுக்க முடியாத அளவிற்கு சுமார் ஐந்து மாதங்களாகக் கற்பழித்திருக்கின்றனர். இரண்டு மாதம் ஆனவுடன் அவள்மீதிருந்த ஆசை தீர்ந்துபோய் “சோறு யார் போடுவதென்ற சண்டை வந்திருக்கின்றது. ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வெறும் ஒரே ஒரு வடா பாவ் கொடுத்திருக்கின்றனர்.

  ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஒரு பூங்காவில் வீசிவிட்டனர். அவளை ஆபரேசன் செய்தபோது உடலிலிருந்து எடுக்கப்பட்டவை என்னென்ன தெரியுமா? பேப்பர், மண், கற்கள் (பசியினால் வேறுவழியில்லாமல் அதையும் தின்றிருக்கும் அந்த சிறுமியைப் பற்றி நினைத்துக்கூட நம்மால் பார்க்க இயலவில்லை). கடந்த நவம்பர் 14 உடன் தன் மூச்சை நிறுத்திக் கொண்டாள.


உலகம் அழிகிறது? தப்பிக்க யோசனைகள் – யாருக்கும் சொல்ல வேண்டாம்!


 மாயன் காலண்டர்ல டிசம்பர்-21 உடன் தேதி முடிவடைவதால் உலகம் அழியப்போவது உறுதி. இதை எப்படித் தடுக்க? நம்மால முடியாதது எதுவுமே இல்லை!


உலகம் அழிவதைத் தடுக்க!

 • காலண்டர்ல டிசம்பர் 21-க்கு பிறகு நிறைய தேதி கொண்ட பக்கங்களை ஒட்டிவிடலாம்! அழியப்போற உலகம் ஏமாந்திடும்.

 • உலகம் அழியும்போது பெரிய பென்சிலை வைத்து அழிய அழிய கூடவே வரைந்துவிடலாம்! அப்புறம் உலகம் அழியவே அழியாது.


தமிழ் தத்துவங்கள்


 • தமிழ் எண்முறையிலிருந்து தெலுங்கு தோன்றியிருக்கலாம் ஒன்று(ஊ), இரண்டு(ஊ), மூன்று(ஊ) பத்து(ஊ) நூறு(ஊ), எண்ணூறு(ஊ) (1-899 வரை)

 • குழந்தைகளுக்கு அன்னா சொல்லித்தான் தமிழ் மொழி கற்றுத்தருகிறோம் இக்கன்னா, இங்ஙன்னா, இச்சன்னா..

 • தமிழ் எழுத்துகளில் பெரிய எழுத்து, சின்ன எழுத்து என்று வேறுபாடில்லை; எழுத்துகளில்கூட பிரிவினையை விரும்பாதவர்கள் தமிழர்கள்!

இதெல்லாம் தெரிந்துதான் பாரதி அன்றே சொன்னார் - "தமிழ் இனி மெல்லச் சாகும்"
ஆனா அதுக்கு அவரையே ஊறுகாயாக்கனுமா?        (படம் நன்றி - ) 


ரஜினி ஜோக்ஸ் - பிறந்தநாள் ஸ்பெஷல்

ரஜினி பிறந்த நாளான இன்று 12-12-12 சில ரஜினி ஜோக்ஸ்.!

 • ரஜினி  புட்பால் விளையாடும்போது சைடுல உதைக்கிறதுக்குப் பதிலா மேல உதைச்சதுதான் நிலா! கோல் ஆகமா மேல போனதுதான் வெள்ளி!

 • முதன்முதலா பூமில பகல் மட்டும்தான் இருந்துச்சு, ஒரு நாள் அசதில ரஜினி கண்ணமூடி தூங்கிட்டார் - அன்றிலிருந்துதான் இரவு/பகல் ஆரம்பிச்சுது

 • ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில வழக்கம்போல ரஜினிதான் மொதல்ல வந்தார். ஆச்சரியம் என்னன்னா லைட்டே அவருக்கு பின்னாடிதான் வந்தது.

 • ரஜினி கார்ல போகும்போது முன்னாடிபோன பஸ்ல மோதிட்டார். அந்த பஸ் முன்னாடி இருந்த இன்னொரு பஸ்ல மோதி இப்படியே லைனா இருந்த 10 பஸ்களும் மோதி நின்னுச்சு. அப்படி உண்டானதுதான் ரயில்!


இதயம் நனையட்டுமே? - இயற்கை கவிதைகள்

வழியெல்லாம் மழை,
குடையுடன் நான்
இதயம் நனைந்துவிட்டது!
துப்பாக்கி - கோட்டை விடப்பட்ட லாஜிக்குகள்!

  துப்பாக்கி படம் ரிலீஸ் ஆகி வசூலில் பட்டையைக் கிளப்புவது நம்ம எல்லோருக்கும் தெரியும். ஏற்கனவே துப்பாக்கி பட விமர்சனம் கொடுத்திருந்தோம். இப்போ அதில் கோட்டைவிடப்பட்ட லாஜிக்குகளைப் பார்ப்போம்.


 • விஜய் வீட்டிலிருந்து தப்பிக்கும் தீவிரவாதியைப்பற்றி தன் 12 நண்பர்களுடன் விவரிக்கும் விஜய் தமிழில் விவரிக்கிறார். வட இந்தியர் மற்றும் சிங்குகளுக்கெல்லாம் எப்படித் தமிழ் தெரியும்? (வேறு இடங்களில் ஆங்கிலம்/ஹிந்தி கொடுத்துததுபோலவே இங்கும் கொடுத்திருக்கலாம்)


 • படத்தின் முக்கிய இடமான விஜயும் அவரது 12 நண்பர்களும் தீவிரவாதிகளைக் கொல்ல பிரிவது அப்பட்டமான லாஜிக் மீறல். விஜயின் கூற்றுப்படி ஒருவன் இன்னொருவனை சந்திப்பான் அப்போது 12 பேர் 6,6 பேராக பிரிந்து இருவரையும் பின்தொடர வேண்டும். (1:12) பிறகு (1:6) (1:6) பின் (1:3) (1:3) (1:3)(1:3) இதற்குமேல் அவர்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் எப்படி தொடர முடியும்? அப்படித் தொடரும்போது ஒருவர் ஒரு தீவிரவாதியையும், மற்ற இரண்டுபேர் இன்னொரு தீவிரவாதியையும் தொடர்கிறார்கள். 2 பேர் தொடரும் தீவிரவாதி யாரையும் சந்திக்காமல் ஒருவர் மட்டுமே தொடரும் அந்த ஒரு தீவிரவாதி இன்னொரு தீவிரவாதியைச் சந்தித்தால் பின் தொடர ஆளில்லையே?மொத்தம் 4 குரூப்பில் எப்படியும் இது மாறிப்போய்விடுமே? (நமக்கு கடைசியாக 1:1 வர வேண்டும். 8 இடத்தில் பாம் வைப்பதாகக் கொண்டிருந்தால் மட்டுமே இது சரியாக வரும்)ஏ ஜோக்ஸ் தத்துவங்கள் 4

 • நான் என்ன கலர் சேலை கட்டிக்கொண்டு வரட்டும்என்றதற்கு "எனக்கு நிறமில்லாத சேலைதான் பிடிக்கும்" என்றால் அடிக்க வருகிறாள் தோழி!

 • நாம ரெண்டுபேரும் ஏன் முதலிரவு மாதிரியே ரெண்டாவது இரவுமூன்றாவது இரவு... என கொண்டாடிக்கொண்டே இருக்கக்கூடாது?
 
 • பேச்சிலராய் இருப்பது சேமிப்பு - நிறைய விஷயங்களில்!
 
 • பூனம் பாண்டே என்ற பெயரை பூனம் துண்டே என மாற்றிக்கொள்ள பரிந்துரைக்கிறேன்! - அதுலதானே அதிக நேரம் இருக்குது!          
 


கல்விமுறை – உருவாகும் எந்திரங்கள்! மனதைத் திற!

  எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இந்தியா மேப் வரைந்துகொண்டிருந்தார். அதை இரண்டு பகுதிகளாகப் பிரித்து வர்ணம் அடிக்க வேண்டும். எப்படிப் பிரிப்பது என்று கேட்டார்.

“மொத்த நீளம் எவ்வளவு என்று அள” என்றேன்.

“30 CM”

“30 CM-ல் பாதி எவ்வளவு?

திரு திருவென முழித்து “20 CM”

“நல்லா யோசிச்சு சொல்லு”

8 CM அண்ணா” என்றது.

நீயே அதை வரைந்துகொள் என்று கிளம்பிவிட்டேன்.


  இத்தனைக்கும் அந்தச்சிறுமி பள்ளியில் 4-வது ரேங். 120 பேர் படிக்கும் எட்டாம் வகுப்பில் 4-வது ரேங் எடுத்த ஒருவருக்கு 30ல் பாதி எவ்வளவு என்று தெரியவில்லை என்றால் மற்ற 116 பேரின் நிலைமை? எந்திரம் போல் புத்தகத்தில் இருப்பதை மனனம் செய்து பரீட்சைத் தாளில் கிறுக்கி மார்க் வாங்குவதே கல்வியா?துப்பாக்கி சினிமா விமர்சனம்

  இது விஜய் படமா? படம் தொடங்கின உடனே நமக்கு இந்த சந்தேகம் வந்திடும். ஒரு ஓபனிங் சாங் இல்லை, யார் அடுத்த ரஜினின்னு தீர்மானிக்கிற பஞ்ச் டையலாக் இல்லை, வழக்கமா வந்து செத்துப்போற தங்கச்சி சென்டிமென்ட் இல்லை.

   படத்தின் பிளஸ் விஜயின் நடிப்பு, போக்கிரிக்குப் பிறகு நல்ல ஆக்சன் கதையுடன் ஒரு படம். மிகப்பெரிய பிளஸ் பரபரப்பான திரைக்கதையும், ஒளிப்பதிவும்தான்.மொக்கை தத்துவங்கள்

 • உங்களிடம் உள்ள டிகிரியை வைத்துக்கொண்டு ஒரு ஃபில்டர் காபிகூட போட முடியாது!
 
 • பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள்! இல்லாதததைத் தேடுவதே இவங்களுக்கு பொழப்பா போச்சு!
 
 • எல்லாமே காதல்தான்னா என் நண்பன் ஒரு பொண்ண விரும்புகிறான்; அவ புருஷன் அதை கள்ளக்காதல்னு சொல்லுறான்! அவனுக்கு தெரியாது போல...
 
 • நன்றியும் மன்னிப்பும் நட்பிற்கு தேவையில்லை - சரக்கு மட்டும் போதும் :-)

 • பஞ்சு போல் இருப்பதால்தானோ பஞ்சாபி என்ற பெயர் வந்திருக்கும்?
 


நேற்று விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி

  வித்யா ராணி... 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி 'ஜெயசிக்குறு எதிர் சமர்' என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர்.
ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன 'சோதியா படையணி'யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர்.
ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற வீராங்கனைகளுக்கு இணையாகத் தமிழ் ஈழத்தில் ஒரு காலம் புகழப்பட்ட வித்யா ராணி... கால வெள்ளச் சுழலில் இன்று ஒரு பாலியல் தொழிலாளி.
உங்களிடம் கருணை தேடியோ, பரிதாபம் ஈனவோ வித்யா ராணி இங்கு பேசவில்லை... 'இதுதானடா தமிழா... இலங்கையில் இப்போதைய நிலைமை!' என்று சில உண்மைகளை முகத்தில் அறையவே இந்தப் பேட்டிக்குச் சம்மதித்தார்.
எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை. 1995 ஜூலை மாதம் நாம் இடம்பெயர்ந்து நவாலியில் உள்ள தேவாலயத்தில் தஞ்சம் புகுந்து இருந்தோம். நவாலியை அண்மித்த பிரதேசங்களில் இருந்து சுமார் 500 பேரளவில் அங்கு தஞ்சம் புகுந்திருந்தோம்.


யாரேனும் ஞாபகப்படுத்திவிடுகின்றனர் - உன்னை!

குறுகுறு பார்வை
மறைக்க முயலும் தெற்றுப்பல்
தலைமுடி கோதும் விரல்கள் 
என உன் சாயலில் 
ஏதேனும் யாரேனும் 
ஞாபகப்படுத்திவிடுகின்றனர் - உன்னை! டான்ஸ்பார்களில் செக்ஸ் தொல்லை! - அதிர்ச்சி ரிபோர்ட்

   "பார்கேர்ள் இதான் என் பேரு. என் தோழியின் வார்த்தையில் "செக்ஸி ஃபிகர்". பெரும்பாலானோரின் செல்போன்களில் இந்த பெயரில் என் போன் நம்பர் இருக்கும். நீங்க ஹோட்டல் டான்ஸ்பார்களுக்கு போகும்போதெல்லாம் என்ன நினைப்பீங்க?  3-4 டோக்கன் கொடுத்து, வேண்டிய பாடல்களைப் போட்டு, நிறையா குடிப்பீங்க. என்னைப்பார்த்து ஃபிகர் சூப்பரா இருக்குள்ள? பேசிப் பார்ப்போமான்னு நினைப்பீங்க. ஆனால் நிஜம் வேறு, என் உலகம் வேறு.

    எங்கள் ஹோட்டலில்கூட ஐரோப்பியன் பார் இருக்கு. ஆனா அவுங்களுக்கு சுதந்திரம் இருக்கு. வேண்டிய இடங்களுக்கு போகலாம். ஐரோப்பா, ரஷ்யா, அமெரிக்கா பெண்கள் சுதந்திரம் இல்லாமல் வரமாட்டாங்க. அவுங்களே ட்ரூப் வச்சு இசை நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். ஆனால் வளரும் நாடுகளான இந்தியா, பங்களாதேஷ், நேபாள், இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வரும் எங்களுக்கே இந்தக்கொடுமைகள் நிகழ்கிறது. வளரும் நாடு என்று எதை சொல்கிறார்கள் என்று இன்னும் புரியவில்லை.

   ஒரு கன்சல்டன்ட் மூலம் பலரை புக் செய்து, விசா கொடுத்து அழைத்து வருவர். அவ்வாறு வந்த நானும் என் தோழிகளும் ஹோட்டலின் டான்ஸ் பாரில் நடனமாடிக் கொண்டிருக்கிறோம்.

   டான்ஸ் ஆடத்தெரியுமா? என்பதெல்லாம் தேவையே இல்லை. டிரெஸ்ஸை குறைச்சுக்கனும், குனிந்து, நிமிர்ந்து செக்ஸியான அசைவுகள் கொடுக்க வேண்டும். இந்த மொக்கையான நடனத்திற்கு யாராவது வளையல், கிரவுன் அல்லது மாலை போடுவாங்க. பின் அவர்களைப் பார்த்தே டான்ஸ் ஆடனும். அவர்களை மீண்டும் மீண்டும் டோக்கன் கொடுக்கத் தூண்டனும். மொத்தத்தில் அவுங்க பர்ஸை காலி பண்ணனும். ஆடும்போது நினைச்சுக்குவேன் "இந்த பக்கிகளெல்லாம் வளைகாப்பின்போது பொண்டாட்டிக்கு இவ்வளவு வளையல் போட்டிருக்குமா?"ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி?

  நிறைய பெண்களுக்கு இதெல்லாம் தெரியாம இருக்கலாம், தெரிந்த சிலர் மட்டும்தான் இதையெல்லாம் உபயோக்கின்றனர். எனவே நாட்டிற்கும், வீட்டிற்கும் உபயோகப்படும்வகையில் அனைத்து ஆண்களையும் பிடித்து ஜெயிலில் போட இதோ வழிகள். பிடிங்க சார் அவனை பிடிச்சி ஜெயில்ல போடுங்க சார்.! 


 • "என்னை கனவில ராக்கிங் பண்ணினான்"னு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கேஸ் போடலாம்.

 • "என் ட்விட்டர் ஐடியை பிளாக் பண்ணினான்"னு கேஸ் போடலாம். நான் ஒயிட்டா இருக்கும்போது இவன் எப்படி என் ட்விட்டர் ஐடியை பிளாக் பண்ணலாம்னு கேட்கலாம்

 • புது நம்பர்ல அவன் போனுக்கு மிஸ்டு கால் கொடுத்துவிட்டு திருப்பி அவன் கூப்பிட்டா "எனக்கு அடிக்கடி கால் பண்ணுறான்"னு கேஸ் போடலாம். நீங்க பண்ற மிஸ்டு கால் ரெகார்ட் ஆகாது ஆனா அவன் கூப்பிட்டா ரெகார்ட் பண்ணிக்கலாமே?

 • "பேசாம இருக்கிறான்"னு கேஸ் போடலாம். நான் எவ்வளவு பேசியும், ட்விட்டர் FBல மென்சன் பண்ணியும் அவன் பேசவே இல்லை. இதனால் நான் மிகுந்த மன உளைச்சலும் வேதனையும் அடைந்தேன்னு கேஸ் போடலாம்.

 • 4 வருசத்திற்கு முன்னாடி என்கூட சண்டை போட்டான்னு கேஸ் போடலாம். சண்டையின்போது மிகவும் வக்கிரமமா, ஆபாசமா என்னைப் பார்த்து "ஹா ஹா"என்று சிரித்தான். எனவே இந்த மனிதத்தன்மையற்ற செயலைக்கண்டித்து ஆபாச தடுப்புப் பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கலாம்.


கடவுள்ஒவ்வொருமுறை உன்னிடம் வரும்போதும்,
ஒவ்வொருமுறை உன்னை வேண்டும்போதும்
வரம் கொடுக்கிறாயோ இல்லையோ,
மறக்காமல் கொடுத்துவிடுகிறாய்
ஒரு கை பிரசாதம்!


துபாய் இசை இன்பம் - பார்த்திபன் சொன்ன ஜோக்ஸ்

 துபாயில் அனுகிரஹா ஸ்டார்ஸ் வழங்கிய இசை இன்பம் நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் பாடகர்கள் மனோ, பென்னி, முகேஷ் மற்றும் பலருடன் சேது நிகழ்ச்சியை கலகலப்பாய்த் தொகுத்து வழங்கினார். வழக்கம்போல 15 நிமிடம் தாமதமாக நிகழ்ச்சியைத் தொடங்கினர். இந்தியனாச்சே! 

நடிகர் பார்த்திபன் சொன்ன ஜோக்ஸ் மட்டும் இங்கே.!

LKG பையன் 1 : டேய் என்னை ஒரு சப்ப பிகர் அடிச்சிட்டாடா
LKG பையன் 2 : மிஸ்கிட்டே கம்பிளைன்ட் செய்ய வேண்டியதுதானே?
LKG பையன் 1 :அடிச்சதே அந்த மிஸ்தாண்டாஆடு, கோழியை உண்போம் - தாவரங்களைப் பாதுகாப்போம்! GO GREEN

 எது சைவம்? எது அசைவம்? இதிலேயே நிறைய குழப்பங்கள் இருக்கு. நாம் இதுவரைக்கும் நம்பிக்கொண்டிருப்பது வலியை உணரும் அனைத்து உயிரினங்களும் அசைவம் - அவற்றைக் கொல்லக்கூடாது, அது பாவம்! உதாரணம் கோழி, ஆடு, மாடு, மனிதன்.  வலியை உணராத, சத்தம் போடத்தெரியாத தாவரங்கள் அனைத்தும் சைவம். அவைகளை மட்டுமே நாம் சாப்பிட வேண்டும். சரியா?

 இப்போ நான் கேட்கும் கேள்வி என்னவென்றால் கோழியைக் கொல்வது பாவம், நெல் நாற்றைக் கொல்வது பாவமில்லையா? எப்படி உயிரினங்களில் ஒன்றைக் கொல்வது பாவமாகவும், இன்னொன்றைக் கொல்வது பாவமில்லாமலும் போகும்?என்ன சொல்வேன்? வார்த்தையின்றி நிலவன்பன்!

அருகில் வந்தவள்
அணைத்துக் கொண்டாள்,
முன்னே வந்தவள்
முத்தமிட்டுச் சொன்னாள்
“பிரிந்துவிடுவோமா?”


கைகள் துடிக்க,
இதயம் துடிக்காமல்
இன்னும் ஞாபகங்களில்,
பிரியும் வேளையில்
உன் கண்ணாடிக்குக் கொடுத்த
கடைசி முத்தம்!


காய்ந்துபோன இதழுக்கு
இன்னும் ஈரம் கொடுத்துக்கொண்டிருக்கின்றன
கண்ணீர்த் துளிகள்!


இன்னும் ஏதேதோ ஞாபகங்கள்
எதற்குமே வார்த்தையில்லை
எதிலுமே கோர்வையில்லை
ஏனெனில் என்னுடன் நீயில்லை!


சேலையை கசக்குவது இன்னும் அழகு!

அவள் : உனக்கு என்ன கலர் சாரி பிடிக்கும்? நான் அதை நாளைக்கி கட்டிக்கிட்டு வர்றேன்.

அவன் : எனக்கு கலரே இல்லாம சாரி கட்டினாதான் பிடிக்கும்.

அவள் : ச்சீ நாயே! நீ ரொம்ப மோசம்.
அவள் : எனக்கு தம் அடிச்சா பிடிக்காது

அவன் : எனக்கும்தான் பிடிக்காது

அவள் : அப்புறம் ஏன் நீ தம் அடிக்கிற?

அவன் : நான் சொன்னது மத்தவங்க தம் அடிச்சா பிடிக்காது.

தூரத்துத் தெருநாய்கள்!

  இரவிலும் அகோரமாய் ஒலிக்கிறது எங்கோ தூரத்திலிருக்கும் வெறிப்பிடித்த தெருநாய்களின் சப்தம். அந்தச் சப்தம் காதினுள் படும்போதே குலையெல்லாம் நடுங்கும், கைகள் உதறும். சுவற்றோரமாய் ஒண்டிக்கொள்கிறேன் நான்.

  தனக்குப் பசி என்றால் யாரையும் கடிக்கும். தன் குடும்பத்திற்கு பசி என்றால் ஊரையே கொளுத்தும். தன் இச்சைக்குத் தன்னைத்தானே கற்பழித்துக்கொள்ளும். ஊரில் இருந்த எல்லோரையும் கடித்து வெறியேற்றிச் சாகடித்ததோடல்லாமல் அருகில் மிச்சமிருப்போரையும் தேடி அலைகின்றன.

  இந்த நாய்களிடமிருந்து தப்பித்து எப்படியோ ஊர் கடந்து வந்துவிட்டோம். ஆனாலும் இன்னும் என் காதுகளில் அதன் கொக்கரிப்புச் சத்தம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ரத்தம் சொட்டும் அதன் கோரப்பற்களின் வெறித்தனம் இன்னும் என் கண்களைவிட்டு அகலவில்லை.
தத்துவங்கள் - ஜோக்ஸ், வாழ்க்கை, சிறை, வரலாறு


 • ஹிந்தி சினிமாகாரர்கள் எல்லா படங்களிலும் "சோனியே" "சோனியே" என்று பாட்டெழுதியே சோனியா காந்தியை பிரபலமாக்கிவிட்டனர்.

 • வரலாறுல இடம் பெறனும்னா பெருசா ஏதாவது செய்யனும். காந்தி, தெரசா, மண்டேலா மாதிரியோ இல்லேன்னா ராஜா, பின்லேடன் மாதிரியோ செய்யனும்

 • எல்லோரும் உண்மையையே பேசுகிறோம் வாய் திறக்காதவரை!

 • தவறி விழும்போது மட்டுமே சிலருக்கு வாயிலிருந்து வருகிறது - "அம்மா"

 • சிறைக்குத் திரும்பிவிட ஆசை! மீண்டும் தாயின் கருவறைக்குள்!


காதல் கவிதை - காதலர் ஸ்பெஷல்

குறுகுறு பார்வை,
தலைமுடி கோதும் விரல்கள்
என உன் சாயலில்
ஏதேனும்
யாரேனும்
ஞாபகப்படுத்திவிடுகின்றனர்
உன்னை!
உனது வளையல்
உனது கொலுசு
உனது கம்மல்
உனது தாவணி
எனது இதயம்.


தமிழ் எங்கள் உயிர் - தமிழின் சிறப்புகள்


 • மொழியை உயிராய் மதிப்பவர்கள் தமிழர்கள். வேறு மொழிகளில் இல்லாத பெருமை தமிழுக்கு உண்டு. வேறு எந்த மொழிகளிலும் மொழியைத் தன் பெயராய் வைத்துக்கொள்வதில்லை. ஆனால் தமிழர்கள் – தமிழ்ச்செல்வன், தமிழரசி, தமிழ்ச்செல்வி, தமிழாயினி, தமிழன்பன், தமிழரசன், தமிழ், தமிழ் நிலா, தமிழச்சி...

 • தமிழின் நேர் வாக்கியத்தில் எந்தச் சொல்லை எங்கு மாற்றினாலும் அதன் அர்த்தம் மாறாது. இது தமிழுக்கே உண்டான சிறப்பு. உதாரணம் (ராமன் ராவணனைக் கொன்றான்) இந்த வாக்கியத்தில் எந்தச் சொல்லை எங்கு மாற்றினாலும் அர்த்தம் மாறுவதில்லை. RAMA KILLS RAVANA இதில் சொல்லை மாற்றினால் அர்த்தமே மாறிவிடும். இந்த சிறப்பு வேறு மொழிகளில் கிடையாது.


 • தமிழ் சொற்கள் அனைத்தும் தொண்டை மற்றும் நாவினால் பேசப்படுபவை. வயிற்றிலிருந்து கத்தும் சொற்கள் இல்லை – உதாரணம் : வயிற்றிலிருந்து கத்தும் ஹிந்தி எழுத்துக்கள் (ஜ், ஹா, gha, kha) போன்றவை கிடையாது. இங்குதான் மொழியின் இனிமை அடங்கி இருக்கிறது. பேசும்போதே கத்துவதெல்லாம் இல்லாமல் மென்மையாக பேசி இனித்தால்தான் அது இனிய மொழியாகும். (ஆனால் இந்த வயிற்றிலிருந்து கத்தும் எழுத்துக்கள் தமிழில் இல்லை என குறைகூறும் மூடர்களும் இங்குதான் இருக்கிறார்கள்.)


தாண்டவம் சினிமா விமர்சனம் – விக்ரம், அனுஷ்கா மற்றும் பலர்.


  முதலில் தமிழ் இயக்குனர்கள், நடிகர்கள் மற்ற கலைஞர்கள் எல்லோருக்கும் ஒருமுறை சுத்திப்போட வேண்டும். இப்போதெல்லாம் ஒவ்வொரு படமும் சிறப்பாகக்கொடுத்து மோசம் என்று சொல்வதே அரிதாகிவிட்டது.

  தாண்டவம் – முதல்பாதி விறுவிறுப்பு+கலகலப்பு. இரண்டாவது பாதி ஓகே. மொத்தத்தில் கண்டிப்பாக ஒருமுறை பார்க்கவேண்டிய படம்.


கதை:

  சர்ச்சில் பியானோ வாசிக்கும் கண்பார்வையற்ற விக்ரம், மற்ற நேரங்களில் எங்கோ போய் கொலை செய்துவிட்டு வருகிறார். அவர் போகும்போதெல்லாம் சந்தானம் டாக்ஸியில் போவதும் போலீஸ் சந்தானத்தை பிடித்து விசாரிப்பதும், சந்தானம் போலீஸ் ஆபீசர் நாசரை கலாய்ப்பதும் செம! மிஸ்.இங்கிலாந்து ஆக முயற்சிக்கும் எமி ஜாக்சன் சர்ச் வருகிறார். விக்ரமை காதலிக்கிறார். நான்காவது கொலையை செய்ய முயற்சிக்கும்போது போலீஸ் வந்துவிடுகிறது. – இடைவேளை!  பிளாஷ்பேக் - இந்தியாவின் ராணுவ ரகசியங்கள் அடங்கிய மாப்(வரைபடத்தாள்) ஒன்று பார்சலில் லண்டன் போகிறது. அதை வைத்து நாலே மணிநேரத்தில் குண்டு வெடிக்க வைக்க முடியுமென்பதால் அதைத்தேடி ரா ஏஜன்ட் சிவா (விக்ரம்) லண்டன் போகிறார். ஆனால் போன இடத்தில் விக்ரமின் நண்பரே (ரா ஏஜன்ட்) பணத்திற்காக வரைபடத்தாளை தீவிரவாதிகள் கைக்கு கொடுத்துவிடுகிறார். குண்டு வெடித்து விக்ரம் மனைவி அனுஷ்காவும், நண்பர் கென்னியும் இறந்துவிடுகிறார்கள். விக்ரமிற்கு கண்பார்வை போய்விடுகிறது. கண்பார்வை போனபின்பு இவர்களை எப்படி பலி வாங்குகிறார் என்பதே கதை.


சிங்கள மொழி முழுவதும் பரவியிருக்கும் தமிழ்

  சிங்கள மொழியின் மூலம் சமஸ்கிருதம் என்றாலும்கூட வடக்கு/கிழக்கு இலங்கையை ஆண்டவர்கள் தமிழ் மன்னர்கள் என்பதாலும் 2000 ஆண்டுகளாக இலங்கைத் தீவின் அரசாட்சி மொழிகளாக இரண்டும் இருப்பதாலும், பல வருடங்கள் பாண்டிய/சோழ பேரரசின் கீழ் இருந்ததாலும் பல தமிழ் வார்த்தைகள் அப்படியே சிங்களத்தில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது தமிழ் சொல்லின் கடைசி எழுத்தில் அ(யா) சேர்த்தால்போதும் - அது சிங்களம்.

தமிழ் - சிங்களம்

அம்மா- அம்மே (மலையாள அம்மேதான்!)
அக்கா - அக்கே
மச்சான் ௦- மஸ்சினா
அண்ணா- ஐயா
அப்பா - தாத்தா
ஆச்சி - ஆச்சி
மாமா - மாமா
இலக்கம் - இலக்கம
அங்கம் - அங்க
அங்கூரம் - அங்குர
அங்கம்/பிரிவு - அங்ஸய
வீதி -வீதி
இரட்டை - இரட்ட
வாகனம் - வாகனய
உதாரணம் - உதாரணய
முதலாளி - முதலாளிய
குடை - குடைய-
கடை -கடைய
அப்பம் - ஆப்ப
இடியப்பம் - இதியாப்ப
வடை - வடே
தினம் - தினய
காலம் - காலய
வருடம் - வர்ஸய
சரீரம் - சரீரய
இடம் - இடம
மூலஸ்தானம் - மூலஸ்தானய
ஸ்தானம் -ஸ்தானய
ஆகாரம் - ஆகாரய
நீர்/ஜலம் - ஜலய
சக்தி - சக்திய
உச்சம் - /உஸ
விசேடம் - விஷேச
கல் - கல்