TAMIL NEWS - செய்திகள்

இந்தியா, இலங்கை, சினிமா, உலகச் செய்திகள் உடனுக்குடன்!துபாய் சுற்றுலா - 1

   துபாயில் இப்போது குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. நம் ஊட்டியைப்போல் குளிர் அடிக்கிறது. சுற்றுலா வருவதற்கு டிசம்பர் முதல் பிப்ரவரி வரை உகர்ந்த சமயம். சில இடங்களை இங்கு பார்ப்போம்.

தேரா படகு சவாரி (DEIRA BOAT)

   படகில் செல்வதென்பது மிகச் சிறந்த ஓர் அனுபவம். நீங்கள் படகில் செல்லச் செல்ல பறவைகள் பறந்து வந்து நீரில் அமர்வதைப் பார்க்க பார்க்க உங்கள் கண்கள் பூரித்துவிடும். (இங்கே இருப்பவர்களுக்கு கோடை காலத்திற்கு பிறகு நவம்பர் தொடக்கத்தில்தான் பறவைகள் கண்ணுக்கே தென்படும்!). அனைத்து படகுகளும் தற்காப்பு உடைகளைக் கொண்டிருக்கின்றன. இறங்கும்வேளையில் உங்களுக்கு உதவ ஒருவர் காத்துக் கொண்டிருப்பார். நெடுந்தூரம் செல்ல வாட்டர்பஸ்சும் உண்டு. இவை அனைத்தும் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றன..


ஜுமேரா கடற்கரை (JUMEIRA BEACH)

   துபாய் முழுவதும் கடற்கரைகளால் சூழப்பட்டுள்ளது.. ஜுமேரா சாலை நெடுங்கிலும் நீண்ட கடற்கரை உள்ளதுஇந்த நீண்ட கடற்கரை தனியார் கட்டிடங்களால் சிறுசிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.. கடற்கரைகள் முழுவதும் மென்மையான வெள்ளை மணல்களைக் கொண்டிருக்கிது.. கடற்கரைகள் இந்த மூன்று மாதங்களிலும் ஐரோப்பியர்களால் நிரம்பி வழியும். (நீ எதுக்கு அலையுறேன்னு நேக்கு தெரியும்!)


மாவீரர்நாள் அறிக்கை 2011


      தேச விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காகத் தம்முயிரை அர்ப்பணித்தவர்களின் புனித நாள் காலச்சுழற்சியில் கலைந்துபோகாத, கனவுகளின் மெய்களாக எம் இதயங்களில் வாழும் தெய்வங்களை வணங்கும் திருநாள்.

தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/08/11 
தமிழீழ விடுதலைப் புலிகள், 
தமிழீழம். 
27/11/ 2011.
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே!
இன்று மாவீரர் நாள்.
தேச விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காகத் தம்முயிரை அர்ப்பணித்தவர்களின் புனித நாள்.
காலச்சுழற்சியில் கலைந்துபோகாத, கனவுகளின் மெய்களாக எம் இதயங்களில் வாழும் தெய்வங்களை வணங்கும் திருநாள்.
தேவதையின் காவலர்களாக, சத்தியத்தின் மறைபொருளாக வாழ்ந்து வரலாறாகிவிட்ட எங்கள் மாவீரர்களைப் போற்றும் புனிதநாளே இந்த மாவீரர் நாளாகும்.
எமது மாவீரர்களின் சாவு சாதாரண ஒரு நிகழ்வுடன் முடிந்துவிடவில்லை. அவர்கள் இலட்சியத்திற்காக இறவாவரம் பெற்ற வீரமறவர்களாக வாழ்கின்றார்கள். எமது விடுதலைப்போராட்டத்தின் பெரும் சக்தியாகத் திகழ்கின்றார்கள். கொடிய எதிரிகளினது வல்வளைப்பினையும் கூட்டுச்சதிகளையும் எதிர்த்த பேராயுதங்களாக இருக்கின்றார்கள். எம்மினத்தின் இருப்பிற்கும் எமது இலட்சியப் பயணத்திற்கும் இயங்கு பொருளாக எம்முள்ளே வாழ்கின்றார்கள்.
இலட்சியத்தால் ஒன்றுபட்டு, இனமானத்தால் உந்தப்பட்டு, உலகெலாம் பரவி வாழும் தமிழர்களாகிய நாம் இந்நாளில் எங்கள் சத்தியவேள்வியின் நாயகர்களைத் தலைவணங்கிப் பூசிக்கின்றோம்.
எமது வீரமறவர்களை வணங்குகின்ற இப்புனித நாளில் அவர்களைப் பெற்றெடுத்து தாய்நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காக உவந்தளித்த பெற்றோர்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் எங்கள் மனங்களில் நிறுத்திப் போற்றுகின்றோம்.
தமிழர் தாயகத்தில் எமது காவல் தெய்வங்களை நினைவுகூரும் நிகழ்வுகள் எவையும் வெளிப்படையாக நடாத்த முடியாத சூழ்நிலையே நிலவி வருகின்றது. மாவீரர் துயிலுமில்லங்களைத் துடைத்தழித்து, மக்களை இரும்புப்பிடிக்குள் வைத்திருப்பதனூடாக மாவீரர் நினைவுளை அழித்துவிட முடியுமென்று சிங்கள தேசம் கனவு காண்கின்றது. தாயகத்தில் மாவீரர் நாளை நினைவுகூர முடியாவிட்டாலும் தமிழர்கள் வாழும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழகத்திலும் பேரெழுச்சியுடன் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும் எமது மக்களின் விடுதலை உணர்வை யாராலும் அழித்துவிட முடியாது என்பதை இந்நிகழ்வுகள் கட்டியங்கூறி நிற்கின்றன..


சக்கை போடு போடுகிறது - Why this Kolaveri


    யூடியுபில் வெளியிடப்பட்ட வெறும் ஒன்பதே நாட்களில் 41 லட்சம் பார்வைகளைத் தாண்டி சக்கை போடு போடுகிறது தனுஷ் பாடிய "WHY THIS KOLAVERI" பாடல். யூடியுப் வரலாற்றிலேயே குறுகிய காலத்தில் ஒரு இந்தியப் பாடல் இவ்வளவு முறை பார்க்கப்பட்டது இந்த ஒரே பாடல்தான். இது "3" என்ற திரைப்படத்தில் அமைத்துள்ள பாடல். இன்னும் பத்து நாட்களுள்ளுள் இரண்டு கோடி பார்வைகளைத் தாண்டும் என்பதில் ஐயமில்லை. இந்தியாவில் முதன்முதலாக ஒரு தமிழ் படத்தின் பாடல் அனைத்து மொழிகளின் டிவி, ரேடியோக்களில் ஒளிபரப்பவது இதுவே முதல்முறை. பிக் எப்.எம் மற்றும் ரேடியோ மிர்ச்சியின் அனைத்து ரேடியோக்களும் தொடர்ந்து ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டன.


    துபாயின் இன்றைய HOT SONG இதுதான். அனைத்து ஹிந்தி ரேடியோக்களும் இதைத் தொடர்ந்து ஒளிபரப்புகின்றன.

பாடியவர் : தனுஷ்
இசை : அனிருத் ரவிசந்தர் (21 வயது)
படம் : 3


சமீபத்தில் திரைத்துறையில் தமிழை வளர்க்க முடியவில்லையே என வருத்தப்பட்டிருந்தார் கமல்ஹாசன்.
அதற்கு, ஆர்வமிருத்தால் திரையிலும் தமிழை வளர்க்கலாம் என பதிலளித்திருந்தார் கவிஞர் வைரமுத்து.

நல்லா வளத்துராங்கைய்யா டமிலை!


உடைகள் வாங்கும்போது கவனிக்க

    எப்போதும் உடைகள் வாங்கும்போது விலையைத்தவிர வேறு எதையும் நாம் பார்ப்பதில்லை (நானுந்தேன்). ஆனால் விலையைவிட இன்னொன்று முக்கியமானதுஅது அந்த உடை எங்கு தயாரிக்கப்பட்டதுஅதை எப்படித் துவைப்பது. (எனக்கு இந்த கவலையே வேண்டாம் - துவைப்பதே இல்லையே!)


அதை பற்றி இங்கு பார்ப்போம்.
    ஒவ்வொரு ஆடையும் உள்ளும் அதனுடைய தயாரிக்கப்பட்ட இடமும், அதன் நூலின் வகைகளான பருத்தி (காட்டன்) அல்லது பாலியஸ்டர் இன்னபிற நூலின் வகைகளும் குறிக்கப்பட்டிருக்கும்.அவள் பெயர், அவள் கைகள், அவள் பாதம்


அவள்  பெயர்

மூன்றே எழுத்துக்களில்
முடிந்துவிடும் - என்
முச்சங்கம் முழுவதும்
முழுமையாய்...
அவள் கைகள்

அதை பார்த்துத்
தெரிந்துகொண்டேன்
தேவதைக்கு
இறக்கை
இருக்குமென்று...
அவள் பாதம்

ஒரு அதிசயம்
,
பூவின் கீழே எப்படி
மென்மையான அரும்புகள்???


பாரதி

ரதி மீது
பா புனைந்த
ரதி
பாரதி!


காமிடி கலாட்டா

காதல் கல்யாணத்திற்கும், பொருத்தம் பார்த்து நடத்துற கல்யாணத்திற்கும் என்ன ஒற்றுமை? 
நீ போய் கிணத்தில் விழுந்தாலும், இல்ல நாலு பேரு சேர்ந்து உன்னைத் தள்ளிவிட்டாலும் மரணம் உனக்குத்தான்!

எனக்கு நிலா மாதிரி பொண்ணு வேணும்! 
அவ்வளவு அழகாகவா?? 
சே! சே! நைட் வரணும், காலைல போயிடனும்! (நேக்கு பிடித்தது)


  ஒவ்வொரு பாடத்தையும் தனித்தனி லெக்சுரர் நடத்திட்டு நம்மள மட்டும் எல்லாத்தையும் படிக்க சொல்லுறாங்க!


  மன்னரின் தேருக்குப் பின்னால் ஒரு குதிரை வருகிறதே என்ன அது? 
  அது ஸ்டெப்னி குதிரை.


   அம்ம்மா நான் பிறப்பதற்கு முன்னாடி எங்க இருந்தேன்? 
   இதோ இந்த வயிற்றிக்குள்தான் இருந்தாய்! 
   இவ்வளவு பெரிய நான் எப்படி இந்த வயிற்றிக்குள் போனேன்?


   உன் வாசம்


   மண்வாசத்தையும்,
   மலர்வாசத்தையும்,
   உன் வாசத்தால்தான்
   உணர்ந்து கொண்டேன்!
   தினமலரும் கருகிய செடியும்!


       தாய்க்கும் தாரத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்களை என்ன செய்வது??? பன்னிகளையும் மனிதர்களையும் பிரித்தறியத் தெரியாதவர்களை என்ன செய்வது???

   நேற்று தினமலரில் ஒரு கட்டுரை. (சிறப்பு நிருபர் என்ற பெயரில் வழக்கமாய் எழுதும் ஒரு சிரப்பு நிருபர்) எழுதிய கட்டுரை. (Click here  to see)

      தொடக்கம் முதலே தினமலர் திமுகவையும் கலைஞரையும், கனிமொழியையும் விமர்சித்து வருகிறது. ஆனால் அதிமுகவைப் பற்றி ஒரு விமர்சனமும் இருக்காது. விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இருந்தவரை விமர்சிக்காத இது, கூட்டணி முறிந்தவுடன் கிழி, கிழியென கிழித்தது. அதுவும் 2G-வழக்கில் சிறையில் உள்ள கனிமொழியைப் பற்றி பக்கம் பக்கமாய் எழுத்திலும், கார்டூனிலும் வரைந்து குதூகலமடைந்தது. விமர்சனம் செய்யலாமென்றாலும் கனிமொழியைப் பற்றி மட்டுமே விமர்சிக்கும் இது, அம்மாவைப் பற்றி ஒரு எழுத்துகூட விமர்சித்து வராது, ஏன் பெங்களூரு நீதிமன்றத்திற்கு பத்து வருடம் தாமதித்து சென்று வந்ததைக்கூட மொத்த செலவு இத்தனை லட்சம் எனப் பெருமையாய் எழுதினார்கள். இதுதான் உண்மையின் உரைகல்லாம். (இதற்கு நேர்மாறாய் திமுக ஆட்சியின்போது முரசொலியைவிட கலைஞரை புகழ் பாடியது தினத்தந்தி என்பது வேறு விஷயம்)

      இன்றுள்ள தமிழ் இணைய தளங்களில் மிகச் சிறப்பாய் இருப்பது தினமலர்தான். அதிக இணையதள வாசகர்கள் கொண்டதும் அதுதான். ஆனால் முதலில் இருந்தே புலிகளை மிகக் கடுமையாக விமர்சித்து வருவதும் இந்த பத்திரிகைதான். விமர்சனங்கள் தவறில்லை என்றாலும் சில உள்நோக்கத்துடன் எழுதப்படும் கட்டுரைகள் மக்களின் மனதில் விஷத்தையே வளர்க்கும்.


   நாட்டின் No.1 முட்டாள் யார்?

   நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

   “நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

   “ஆம் மன்னா!”

   “அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

   அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னரயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.   இலங்கையில் படம்காட்ட மாட்டாங்களாம்!

       சமீபத்தில் இயக்குனர் சசிக்குமார் ஒரு பேட்டியில் - தமிழ்ப் படங்களுக்கு இலங்கை அரசு தடை விதிப்பதும், தணிக்கை செய்வதும் தொடர்கிறது. இலங்கையில் எனது படத்தை திரையிட அனுமதி தரமாட்டேன். இதற்கு சில தயாரிப்பாளர்களும், இந்து மக்கள் கட்சியும் ஆதரவு தெரிவித்திருந்தது.


       தீபாவளிக்கு வெளியான 7ஆம் அறிவு படத்தில் தமிழர்களுக்கு ஆதரவான வசனங்கள் நீக்கப்பட்டன. இலங்கையின் இத்தகைய நடவடிக்கைகளுக்குத்தான் இயக்குனர் சசிகுமார் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

   வசனம் : 
   “வீரத்திற்கும் துரோகத்திற்கும் வித்தியாசம் தெரிஞ்சிக்கோ, ஒரு நாட்டின்மீது ஒன்பது நாடுகள் சேர்ந்து போர் செஞ்சா அது வீரமல்ல; துரோகம்” – இந்த வசனம் நீக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

       ஏன் இந்த வசனத்தில் துரோக நாடுகளின் பெயர் போட்டு இந்தியா என்று சொல்லியிருந்தால் இந்தியாவில் தணிக்கை செய்யாமல் இருந்திருப்பார்களா என்ன?? (ஏன் அதை முருகதாஸ் செய்யவில்லை??)

       ஒரு அரசாங்கம் குறித்து யார் என்ன (தவறாக) சொன்னாலும் அது உண்மையாகவே இருந்தாலும் அதைத் தணிக்கை செய்வது இயல்பு.


   நானும் கடவுளும்!   எனக்கும் கடவுளுக்கும்
   ஒரு ஒற்றுமை,
   எனக்குப் பிடிப்பதெல்லாம்
   அவனுக்கும் பிடித்துவிடும் -
   உடனே எடுத்துக்கொள்வான்!
   சமீபத்தில் ரசித்தது -

   காதலன்: ஒரு முத்தம் கொடேன்?
   காதலி: சீ போ...

   காதலன்: ப்ளீஸ்! ப்ளீஸ்! ஒன்னே ஒன்னு!

   காதலி: நான் மாட்டேன்பா...
   காதலன்: (சிறிது நேரம் கழித்து) நான் உன்கிட்டே என்ன கேட்டேன்னு ஞாபகம் இருக்குதா?
   காதலி: ஒரு முத்தம் கொடேன்
   காதலன்: OK...ம்ம்ம்மா...


   (குறிப்பு – இது அனுபவமல்ல! அனுபவமல்ல!)


   வங்கிக் கொள்ளை - நகைச்சுவை

         ஒருமுறை டெல்லியின் திகார் சிறையிலிருந்து தப்பித்த இரண்டு கொள்ளையர்கள் உடனடியாக ஒரு கொள்ளையை அதே இரவில் நடத்தத் திட்டமிட்டனர். அவர்கள் தயாரித்த திட்டப்படி அந்த வங்கிக்குச் சென்றபோது திடீரென தெரு விளக்குகள் அணைந்துவிட்டது. ஒருவழியாக தேடிக்கண்டுபிடித்து வங்கியை அடைந்தனர். வங்கியின் உள்ளே பாதுகாப்பு அமைப்பை செயலிழக்க வைத்தனர். கேமராவிற்குச் செல்லும் ஒயரைத் துண்டித்தனர்.


         பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடிக்க சேப்டி லாக்கரைத் தேடிக் கண்டுபிடித்தனர். அவர்கள் ஒரு பத்து சேப்டி லாக்கர் மட்டுமே இருக்கும் என நினைத்திருந்தனர். ஆனால் ஆயிரக்கணக்கான சிறிய சேப்டி லாக்கர்கள் இருந்தன. அவர்களுக்கு ஒரே சந்தோசம். “இதை மட்டும் கொள்ளையடித்தால்போதும் வாழ்நாள் முழுதும் வேறு எதுவும் தேவை இல்லை” என்றான் ஒருவன்.


   என் காதல்
   நான் காதலிப்பது
   உன்னையல்ல;
   உன்னிடத்திலிருக்கும் என்னை...


   எங்கே பாரதி? அழியும் படைப்புகள்!


         பாரதியும் தாகூரும் மகாகவிஞர்கள். ஆனால், தாகூருக்குக் கிடைத்த பெருமையும் அங்கீகாரமும் பாரதிக்குக் கிடைக்காமற் போனதற்கு என்ன காரணம்? இன்றுவரை பாரதியின் மொத்த படைப்புகள் ஆங்கிலத்தில் முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை.

        பாரதியின் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழகத்தைக் கடந்து இந்தியா முழுக்கவோ, உலகம் முழுக்கவோ இதுவரை செல்லவில்லை. தாகூருக்குக் கிடைத்த உயரம் அவர் உலக மொழிகளிலெல்லாம் மொழிபெயர்க்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டதுதான். பாரதிக்கு இதுவரை இப்பேறு கிடைக்கவில்லை.

        தமிழின் பெருமையை உணர்ந்த பிறநாட்டு அறிஞர்கள்தான் தமிழை உலக நாடுகளுக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஜி.யு. போப் திருக்குறளையும் திருவாசகத்தையும் மொழிபெயர்த்தார்.
    பைபிளுக்கு அடுத்து, காரல் மார்க்ஸின் மூலதனமும் மூன்றாவதாக திருக்குறளும் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டவை என்று கூறுவார்கள். அது உண்மையோ இல்லையோ, உலக மொழிகளுக்குக் கொண்டு செல்ல ஜி.யு. போப் என்ற கிறித்தவப் பாதிரியாரே காரணமாயிருந்தார்.
       
        பெஸ்கி என்ற வீரமாமுனிவர் திருக்குறளின் அறத்துப்பாலையும் பொருள்பாலையும் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். மாக்ஸ்முல்லர் இந்திய ஆய்வியலைத் தொடங்கிவைத்தார். ராபர்ட் கால்டுவெல் திருநெல்வேலி வரலாற்றையும் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தையும் ஆங்கிலத்தில் எழுதித் தமிழை உலக நாடுகளுக்குக் கொண்டு சென்றார்.

        இவர்கள் தொடங்கி தமிழின் செழுமை மேல் ஈர்க்கப்பட்ட ஏராளமான ஐரோப்பியர்கள் தமிழ் இலக்கியத்தை ஆங்கிலத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். இம்முயற்சிகளெல்லாம் 19-ம் நூற்றாண்டு வரை மட்டுமே தீவிரமாக நடைபெற்றன.


   வடிவேலு VS சிங்கமுத்து


   மதுரையிலிருந்து சென்னைக்குச் செல்லும் பேருந்து, வழியில் சென்னைக்கு அருகே காலை உணவிற்காக நிறுத்தப்படுகிறது. அருகிலிருந்த ஹோட்டலுக்குச் செல்கிறார் வடிவேலு. அங்கு டிஷர்ட் அணிந்து டையுடன் “வாங்க சார்! வாங்க” என்கிறார் சர்வர் சிங்கமுத்து.

   சிங்கமுத்து : சார் என்ன சாப்புடுறீங்க??

   வடிவேலு : (ஒரு டைப்பா இருக்கானே) முதல்ல மெனு கொடு.

   சிங்கமுத்து : தொட்டுக்கரதுக்கு என்ன வேணும்?

   வடிவேலு : ஷிட்!

   சிங்கமுத்து: அதெல்லாம் இங்க கிடைக்காது.

   வடிவேலு : (ஆஹா காலையிலேயே ஆரம்பிச்சுட்டானே - எங்ககிட்டயேவா என நினைத்துக்கொண்டு) யோவ் உங்க ஊர்ல இதைதான் சாப்புடுவீங்களா?? சரி ஒரு பிளேட் இட்லி வடை, ஒரு தோசை, ஒரு காப்பி கொண்டு வா, அப்புறம் 20இட்லி, 25தோசை 2லிட்டர் பெப்சி ஒரு 10 பார்சல் பண்ணி சீக்கிரம் கொண்டு வா.

   சிங்கமுத்து: ஒ! அப்படியா சங்கதி! (கல்யாணத்துக்கு வாங்கிட்டு போறானோ??)   கனிமொழியின் ஜாமீன் நிராகரிப்பு


   மக்கள் பணத்தை தங்களது சொந்த காரியங்களுக்காக பயன்படுத்தியவர்களுக்கு, நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி கனிமொழி உள்ளிட்ட 8 பேரின் ஜாமீன் மனுக்களை நிராகரித்தார்  டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைனி.

   நவம்பர் 2-ம் தேதியோடு சிறையில் 9 மாதங்களைக் கடந்த ராசா இதுவரை ஒரு முறை கூட ஜாமீன் கோரவில்லை!

   மேற்கண்ட இரண்டும் தனித்தனி செய்திகள் - இதிலெல்லாம் அர்த்தம் காணப்படாது??


   நான் எதை ரசிப்பேன்?

   ஓவியக் கண்காட்சியில்
   ஒரு குழப்பம்-
   நான் எதை ரசிப்பேன்
   உன்னையா? ஓவியத்தையா?


   இணையதளம் விளம்பரங்களைத் தடுக்க – AdBlock


          சமீபத்தில் மைக்ரோசாப்டில் வேலை செய்யும் என்னுடைய நண்பரின் கணினியைப் பார்த்தேன், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் மொத்தம் 11 POP UP WINDOWS திறக்கப்பட்டிருந்தது.

     “நீ ADBLOCK உபயோகப்படுத்துவதில்லையா?” எனக் கேட்டேன்.

     “அப்படியென்றால்? என்றான்.(அடப்பாவி! ஒருவேளை மைக்ரோசாப்டில் வேலை செய்ய இதுதான் தகுதியோ???)

     இப்படித்தான் ஒருசில சாதாரண விசயங்களை தெரிந்துகொள்வதை விட்டுவிட்டு பேஸ்புக்கில் CITYVILLE விளையாண்டுகொண்டிக்கிறோம்; அருகில் இருக்கும் நண்பர்களை விட்டுவிட்டு பேஸ்புக்கில் தேடிக்கொண்டிருக்கிறோம்!

     நீங்கள் FIREFOX அல்லது GOOGLE CHROME ப்ரௌசர் உபயோகித்துக்கொண்டிருந்தால், அதில் ADBLOCK  பிளக்-இன்னை தரவிறக்கம் செய்யவும். (இணைய முகவரி கீழே! – காலுக்கு கீழே அல்ல!)   பயன்கள்:

   • இது உங்கள் கணினியில் வரும் அனைத்து விளம்பரங்களையும் தடுக்கும். அது படமானாலும் சரி, எழுத்து விளம்பரமானாலும் சரி.