துபாயில்
இப்போது குளிர்காலம்
ஆரம்பித்துவிட்டது.
நம்
ஊட்டியைப்போல் குளிர்
அடிக்கிறது.
சுற்றுலா
வருவதற்கு டிசம்பர் முதல்
பிப்ரவரி வரை உகர்ந்த சமயம்.
சில
இடங்களை இங்கு பார்ப்போம்.
ஜுமேரா கடற்கரை (JUMEIRA BEACH)
தேரா
படகு சவாரி (DEIRA
BOAT)
படகில்
செல்வதென்பது மிகச் சிறந்த
ஓர் அனுபவம்.
நீங்கள்
படகில் செல்லச் செல்ல பறவைகள்
பறந்து வந்து நீரில் அமர்வதைப்
பார்க்க பார்க்க உங்கள் கண்கள்
பூரித்துவிடும்.
(இங்கே
இருப்பவர்களுக்கு கோடை
காலத்திற்கு பிறகு நவம்பர்
தொடக்கத்தில்தான் பறவைகள்
கண்ணுக்கே தென்படும்!).
அனைத்து
படகுகளும் தற்காப்பு உடைகளைக்
கொண்டிருக்கின்றன.
இறங்கும்வேளையில்
உங்களுக்கு உதவ ஒருவர் காத்துக்
கொண்டிருப்பார்.
நெடுந்தூரம்
செல்ல வாட்டர்பஸ்சும் உண்டு.
இவை
அனைத்தும் அரசாங்கத்தால்
நடத்தப்படுகின்றன..
ஜுமேரா கடற்கரை (JUMEIRA BEACH)
துபாய் முழுவதும் கடற்கரைகளால் சூழப்பட்டுள்ளது.. ஜுமேரா சாலை நெடுங்கிலும் நீண்ட கடற்கரை உள்ளது, இந்த நீண்ட கடற்கரை தனியார் கட்டிடங்களால் சிறுசிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.. கடற்கரைகள் முழுவதும் மென்மையான வெள்ளை மணல்களைக் கொண்டிருக்கிது.. கடற்கரைகள் இந்த மூன்று மாதங்களிலும் ஐரோப்பியர்களால் நிரம்பி வழியும். (நீ எதுக்கு அலையுறேன்னு நேக்கு தெரியும்!)
புர்ஜ்
கலிஃபா
(BURJ
KALIFA)
உலகின்
மிக உயரமான கட்டிடம்.
உயரம்
830
மீட்டர்.
(மேலிருந்து
விழுந்தால் தரை அடைவதற்குள்
நாம் இறந்து விடுவோம்.)
இந்த
கட்டிடத்தைக் கட்டியதால்
ஒரு பொருளாதார நெருக்கடியே
வந்தது.
மொத்த
மாடிகளின் எண்ணிக்கை 163.
ஒவ்வொரு
இரவும் இசை நீரூற்று (Musical
Water Fountain) நிகழ்ச்சி
நடக்கும்..
இதை
இலவசமாகக் கண்டுகளிக்கலாம்..
( இலவசம்னா
ஆட்சியையே மாத்துறவங்க நம்ம!
இதைப்
பார்க்கமாட்டமா என்ன?
)
துபாய்
மால் (DUBAI
MALL)
உலகின்
மிகப் பெரிய வணிக வளாகம்.
புர்ஜ்
கலிஃபாவிற்கு
அருகாமையில் உள்ளது.
இதனுள்
உள்ள நீர்வாழ் கண்காட்சியகம்
பிரசித்தி பெற்றது.
உலகிலுள்ள
பெரும்பாலான நிறுவனங்களின்
கடைகள் இங்கு உள்ளது..
உலக
தீவுகள்,
பாம்
தீவுகள் (WORLDMAP
ISLANDS, PALM ISLANDS)
மனிதால்
கட்டப்பட்ட கட்டிடங்களைப்
பார்க்க இங்கு வந்தால் போதும்!
அனைத்து
கட்டிடக் கலை நிபுணர்களும்
ஒருமுறையாவது இங்கு வர வேண்டும்
(
நிபுணர்கள்
சரி!
நீ
அங்க என்ன பண்ணுறே?)
உலக
தீவுகள் -
ஒரு
உலக வரைபடத்தை,
துபாய்
கடற்கரையில் நான்கு கிலோமீட்டர்
சுற்றளவில் கட்டப்பட்ட 300
தீவுகளில்
கட்டியுள்ளனர்..
இவை
அனைத்தும் செயற்கைத் தீவுகள்,
மனிதால்
உண்டாக்கப் பட்டவை.
பாம்
தீவுகள் -
பனை
மர வடிவிலான தீவுகள்.
இப்படி
வெறும் கட்டிடங்களையே சொன்னா
எப்படி?
அருங்காட்சியகம்,
பாலைவன
சபாரி,
டான்ஸ்
கிளப்,
விபசாரம்
-
அடுத்த
பதிவில்!
வரும்
வாரம் நிறைய கண்காட்சிகளும்
நடக்க இருக்கின்றன.
டிசம்பர்
2-இல்
அமீரகத்தின் நாற்பதாவது
தேசிய தினம்.
சிறந்த
ஏர்ஷோ நடக்க இருக்கறது..
டிசம்பர்
9-இல்
துபாயில் நம் ரஹ்மான் இசைநிகழ்ச்சி நடத்த இருக்கிறார்.
Tweet |
நீங்கள் படகில் செல்லச் செல்ல பறவைகள் பறந்து வந்து நீரில் அமர்வதைப் பார்க்க பார்க்க உங்கள் கண்கள் பூரித்துவிடும்.
ReplyDeleteபகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
நன்றி
DeleteTo be continued??!!
ReplyDeletesoon
DeleteTo be continued after 8 years??!!
ReplyDelete