Blogger Widgets

வடிவேலு VS சிங்கமுத்து


மதுரையிலிருந்து சென்னைக்குச் செல்லும் பேருந்து, வழியில் சென்னைக்கு அருகே காலை உணவிற்காக நிறுத்தப்படுகிறது. அருகிலிருந்த ஹோட்டலுக்குச் செல்கிறார் வடிவேலு. அங்கு டிஷர்ட் அணிந்து டையுடன் “வாங்க சார்! வாங்க” என்கிறார் சர்வர் சிங்கமுத்து.

சிங்கமுத்து : சார் என்ன சாப்புடுறீங்க??

வடிவேலு : (ஒரு டைப்பா இருக்கானே) முதல்ல மெனு கொடு.

சிங்கமுத்து : தொட்டுக்கரதுக்கு என்ன வேணும்?

வடிவேலு : ஷிட்!

சிங்கமுத்து: அதெல்லாம் இங்க கிடைக்காது.

வடிவேலு : (ஆஹா காலையிலேயே ஆரம்பிச்சுட்டானே - எங்ககிட்டயேவா என நினைத்துக்கொண்டு) யோவ் உங்க ஊர்ல இதைதான் சாப்புடுவீங்களா?? சரி ஒரு பிளேட் இட்லி வடை, ஒரு தோசை, ஒரு காப்பி கொண்டு வா, அப்புறம் 20இட்லி, 25தோசை 2லிட்டர் பெப்சி ஒரு 10 பார்சல் பண்ணி சீக்கிரம் கொண்டு வா.

சிங்கமுத்து: ஒ! அப்படியா சங்கதி! (கல்யாணத்துக்கு வாங்கிட்டு போறானோ??)




(அனைத்தையும் சாப்பிட்டுவிட்டு பார்சலை வாங்கிக்கொண்டு கிளம்புகிறார் வடிவேலு)


சிங்கமுத்து : சார் சார் பில்லை வாங்காம போறீங்களே?? இந்தாங்க பில்!


வடிவேலு : இதை நான் ஆர்டர் பண்ணவே இல்லியே!


சிங்கமுத்து: என்னது ஆர்டர் பண்ணலயா? சார் எதோ மொதல்ல தெரியாம பேசிட்டேன், என்னோட சம்பளத்துல புடிச்சுருவாங்க சார்!


வடிவேலு : இதுக்குத்தான்! வர்றவன் யாரு? எப்படிப்பட்ட ரவுடின்னு தெரியாம விளாண்டா இப்படித்தான்!!! பஸ்சு கிளம்பிடுச்சு. போலாம் ரைட்!!


சிங்கமுத்து : அவனேதான் இவன். அவனேதான் இவன்! டேய் எனக்கு இந்த வேலையும் வேணாம், ஒன்னும் வேணாம். நான் கிளம்புறேன் மதுரைக்கு!! இவன் இருக்கிற ஊர்ல நான் இருக்க மாட்டேன்! 


வடிவேலு ரோலில் மன்மோகன் சிங் - (படித்துவிட்டு கெக்கபெக்கே என்று சிரிக்கக் கூடாது)


0 COMMENTS:

Post a Comment