எதை எதையோ
சாதித்துவிடுகிறாய் நீ!
உன் ஒரே ஒரு அழுகையால்!
உன் அழுகையை ரசிப்பதற்கேனும்
அழவிடலாம் கொஞ்சநேரம்!
இப்பூவுலகில் உன்னைப் பார்த்தவுடன்
முடிவெடுத்துவிட்டேன்,
இனி வாழப்போவது இந்தப் பூவுக்காகத்தான்!
எல்லா மொழிகளையும் மறந்துவிடுகிறேன்
உன் மழலை மொழியின் சில வார்த்தைகளில்!
தத்தி தத்தி விழுகிறாய்,
விழுந்த பின் சிரிக்கிறாய்,
பின் எழுகிறாய்!
உன்னிடமிருந்து உணர்ந்துகொண்டேன்,
விழுதலிலும், எழுதலிலும் இல்லை
சோகமும், சந்தோசமும்
Tweet |
குழந்தைகளின் அலாதியான உலகத்தை படம் பிடித்திருக்கிற உங்கள் வரிகள் அழகானவை.
ReplyDeleteபடம் பிடிச்சது நானில்லை! :)
Deleteஉங்கள் வரிகள் அழகானவை./// லதா fontக்குதான் நன்றி சொல்லணும்!
//விழுதலிலும், எழுதலிலும் இல்லை
ReplyDeleteசோகமும், சந்தோசமும்
எல்லாம் அவரவர் மனதினில்!//
அழகான அர்த்தமுள்ள வார்த்தைகள்..
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.in/
குழந்தைகள் உலகத்தில்,பொறாமை இல்லை,விரோதம் இல்லை,இழிவான எண்ணங்கள் இல்லை,,
ReplyDeleteஅவர்களின் உலகமே வித்தியாசமானது
என்ன வார்த்தைக்கு ஒருமுறை குழந்தை குழந்தைன்னு சொன்னதுக்கு ரொம்ம்ம்ம்ப நன்றிங்க்ணா!
Deleteகுழந்தைகளின் என்றால் பேயும் மனமிரங்கும்.
ReplyDeleteஅவர்களில் குறும்புக்கு நிகர் யாதொன்றும் இல்லை
என்னை பேயின்னு சொல்ல வர்ற அதானே?
Deleteகவிதைக்கு ஒரு கவிதை.அழகோ அழகு !
ReplyDelete