Blogger Widgets

சைக்கோ தொடர்கதை பகுதி 2

 ஒரு வாரம்தான் நன்றாக ஓடியிருக்கும். எங்கள் டீமுக்கு குமார் என்று புதியவர் ஒருவர் சென்னையிலிருந்து வந்திருந்தார். இப்பொழுது எங்கள் டீமில் மொத்தம் நான்கு பேர். நான், சார்லஸ், குமார் மற்றும் பிரசாந்த்.

 அடுத்த நாளே பிரச்சினையும் ஆரம்பித்துவிட்டது. தவறு என்னுடையதுதான்! என்னவென்றால் சீனாவிலிருந்து வாங்கிய ஒரு SAMPLE டையை TIE (மதிப்பு ஒரு டாலர்!) என்னிடம் கொடுத்தார். நான் அதை என்னுடைய டிராயரில் போட்டு வைத்தேன். ஒரு இரண்டு நாள் கழித்து அதைக் கேட்டார், நான் டிராயரை திறந்து பார்த்தால் அதை காணவில்லை. 

 நானும் தேடாத இடமில்லை. பார்க்காத இடமுமில்லை, ஆனால் அதைக் காணவில்லை. (அய்யா என் கிணத்தைக் காணலை – என்பதுபோல்!) 

  நான் சொன்னேன், “அந்த கொரியர் கிடைக்கவில்லை என்று சீனாவில் சொல்லி திரும்ப வாங்கிக் கொள்ளலாம்! (இது வழக்கமாக சொல்லுவதுதான்)”


  “எப்படி அதை சொல்லுவது? இப்படி இதைக்கூட தொலைத்தால் மற்றதையெல்லாம்??” ஒரு அரை மணி நேரம் அட்வைஸ்! (எனக்கு அட்வைஸ் செய்யும் எந்த பக்கியையும் பிடிக்காது, ஏனென்றால் அட்வைஸ் செய்யும் யாரும் அதைக் கடைபிடிப்பதில்லை!)
  இந்தக் கூத்துக்கிடையில் அன்று இரவு சரக்கடிக்க KARAMA ஹோட்டல் சென்றோம் (துபாயில் பிரபலமான ஒரு PUB). பீர் மட்டும்தான் சாப்பிட்டோம். ஒரு மணி நேரம் கடந்திருக்கும், பேச்சு அந்த டையைப் பற்றி மாறியது. திரும்ப ஒரு இரண்டு மணிநேரம் அட்வைஸ். எனக்கு அடித்த சரக்கெல்லாம் வெளியே வரும் போலிருந்தது. அவ்வளவு எரிச்சல். சரக்கடித்துவிட்டு அலுவலகத்தை பற்றி பேசினால்?

  அப்போதே முடிவெடுத்துவிட்டேன், “இவனுடன் சேர்ந்து சரக்கடிக்கும் கடைசி தருணமிது!”

  மணி 12.00PM, பிறகு அங்குள்ள ரஷ்யன் கிளப்பிற்கு சென்றோம். அவர்களே பாடிக்கொண்டிருந்தார்கள். ஒன்றும் விளங்கலை! ஒவ்வொரு பிகரும் அம்புட்டு அழகு! கொள்ளை அழகு! வெள்ளை வெளேர்னு மினி ஸ்கர்ட்ல! என்னைக் கையைப் பிடித்து இழுத்தால்கூட நான் அப்போது வரும் நிலையில் இல்லை. (பிறகு கிடைக்கவா போகிறது?).

கராமா - ஹோட்டல்
  மணி 2.30AM, அங்கு ஆர்டர் செய்த பீரும் தீர்ந்துவிட்டது. சார்லசும், குமாரும் கிளம்ப சொன்னார்கள். நாங்கள்தான் வரும் நிலையில் இல்லையே?

  “எப்பவோ வாங்க” என்று சொல்லிவிட்டு அவர்கள் மட்டும் டாக்ஸி பிடித்து கெஸ்ட் ஹவுஸிற்கு சென்றனர்.

  மணி 3.00AM, அடுத்தடுத்த பாடல்களை??? ரசித்துக் கொண்டிருக்கும்போது, என் செல்போன் ரிங்கியது,

“தம்பி! ரூம் சாவி எங்கடா?”

பக்கிகள் பிகரை ரசித்துவிட்டு போதையில் சாவியைக் கூட வாங்காமல் போயிருக்கிறது! நானும், பிரசந்தும் விழுந்து விழுந்து சிரித்தோம்! பப்பில் இருந்தவர்கள் எங்களை விநோதமாக பார்த்தனர், டாக்ஸி பிடித்து வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்!


0 COMMENTS:

Post a Comment