Blogger Widgets

காதல் கவிதைகள் - பிரிவு

பிரிவை நினைத்தேன்
உயிர் வலித்தது,
அவளை நினைத்தேன்
வலிக்கு ஆறுதல்!





நான் கனவுகளை விரும்புகிறேன்
அவைகள் எவ்வாறாயினும்!.
கனவில்தான்
என் காதலி
என்னைக் காதலிக்கிறாள்!




எனது காதல்
உன்னை நினைப்பதற்காக அல்ல;
என்னை மறப்பதற்காக!






18 COMMENTS:

  1. பிரிவு கவிதை நல்லா இருந்தது சகோ, இரண்டாம் கவிதையும் கடைசி ஒன்றும் எனக்கு ரொம்ப பிடிச்சது...

    கவிதைகளும், கனவுகளுக்கும் காதலுக்கு ஆறுதலான விஷயம்..

    ReplyDelete
    Replies
    1. //பிரிவு கவிதை நல்லா இருந்தது சகோ, இரண்டாம் கவிதையும் கடைசி ஒன்றும் எனக்கு ரொம்ப பிடிச்சது...
      ///மொத்தமா எழுதினதே அம்புட்டுதேன்!

      Delete
    2. /மொத்தமா எழுதினதே அம்புட்டுதேன்! அய் அப்போ முதல் ஒன்று

      Delete
    3. ///அப்போ முதல் ஒன்று/// அது கவிதையா? அப்ப சரி:)

      Delete
  2. ஓ... இது தான் காதலின் வலியா?
    இனித்தது.

    ReplyDelete
    Replies
    1. என் சோகத்துல ஊரே சிரிக்குது!!!

      Delete
  3. பிரிவு யாராலும் தாங்க முடியாத ஒன்று
    மிக அருமையான கவிதை......

    ReplyDelete
    Replies
    1. //பிரிவு யாராலும் தாங்க முடியாத ஒன்று// ஏன்னா எடை கொஞ்சம் கூட! அதான்!

      Delete
  4. எனது காதல்
    உன்னை நினைப்பதற்காக அல்ல;
    என்னை மறப்பதற்காக!//
    ரசித்த வரிகள். ஆகா அப்படின்னா எல்லொரும் காதலிக்க ஆரம்பிச்சிட்டா கள்ளுக்கடை டாஸ்மார்க் எல்லவற்றையும் மூடிடலாம்

    ReplyDelete
    Replies
    1. டாஸ்மாக் வர்ற பாதிபேர் காதல் தோல்விதான்! - அங்கே கொஞ்ச நேரம் பக்கத்தில இருக்கிறவங்க பேசுறதை கேட்டுப்பாருங்க! அந்த காமெடி எங்கயும் கிடைக்காது!

      Delete
  5. காதல் தோத்துப்போனாலும் அவங்களை நினச்சிட்டே இருப்பீங்கன்னு சொல்றீங்க போல.நம்புறோம் !

    ReplyDelete
    Replies
    1. இப்படி நம்பி நம்பித்தான் நானும் ஏமாந்தேன்! :(

      Delete
    2. அன்பு...கவிதைப் பக்கம் வரமாட்டீங்களோ.வாங்கோ !

      Delete
  6. கதளிக்களைன்னாலும் கத்ளிக்கறதா நினச்சி கவிதை எழுதறது ஒரு சுகம்தான்

    ReplyDelete
    Replies
    1. சாரி பாஸ் - எனக்கு கன்னடம் தெரியாது

      Delete
  7. சரிதான்..உங்களுக்காக என் சார்பில் ஒரு கவிதை..

    மடக்கி மடக்கி
    எழுதுவதெல்லாம்
    கவிதை என்றால்
    எனக்கு பிடித்த
    முதல் கவிதை
    உன் வீட்டு முகவரி!
    :)

    ReplyDelete
    Replies
    1. மடக்கி மடக்கி அடிக்கும்போது தோனின கவிதையோ? இல்லை முகவரி தெரியாத அளவுக்கு மொத்தும்போது தோனினதா?

      Delete