நாளுக்கு நாள்
நம்ம மன்மோகன்ஜியோட கேரக்டரும் சரி ரோலும் சரி வடிவேலு பாணில போய்க்கினே இருக்கு!
ராஜ்ய சாபாவில்
நேற்று தமிழக எம்பிக்கள் கடுமையாக ஐ.நா சபையின் இலங்கைக்கு எதிரான தீர்மானம்
குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கை நோக்கி கேள்விமேல் கேள்வி கேட்டனர். எதற்குமே
திருவாளர் பதிலளிக்கவில்லை. எங்கேயோ, யாரோ பேசுவது போல காது இரண்டையும் பொத்திக்கொண்டு
உட்கார்ந்திருந்தார்.
மைத்ரேயன்
"தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா, இல்லையா???" என்று பிரதமரின்
முகத்துக்கு நேராகவே கேட்டார். அதற்கும் வழக்கம் போல காதையும் வாயையும் சாத்திக்கொண்டு
மெளனம் காத்தார் திருவாளர் மன்மோகன். இப்போ இதை வடிவேலு ஸ்டைலில் பதில்
சொல்லியிருந்தால்? (பேசறதே பெரிய விஷயம்! இதுல பதிலு
வேறையாம்ல)
மைத்ரேயன் : ஐ.நா சபைல இலங்கைக்கு எதிரா தீர்மானம் கொண்டுவர்றாங்களே?
மன்மோகன் : என்ன தீர்மானம்?
மைத்ரேயன் : இலங்கை ராணுவம் 2009ம் வருஷ இறுதி போரில 40,000க்கும் மேற்பட்ட
அப்பாவி தமிழர்களை கொன்னு
போட்டாங்களே?
மன்மோகன் : என்ன கொன்னுபோட்டாங்க?
மைத்ரேயன்
அருகிலிருந்த இன்னொரு எம்பியிடம் : யோவ் நான் கரெக்டா பேசுரனா?
அந்த எம்பி : கரெக்ட்
மைத்ரேயன் : கடைசியா கேட்கிறேன் தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா, இல்லையா???
மன்மோகன் : என்ன தீர்மானம்?
மைத்ரேயன் : உன்னை மாதிரி _______________ கிட்டேயெல்லாம் கேள்வி கேட்டேன் பாரு!
(கோபத்துடன் கிளம்பி
சென்றுவிட்டார்)
சும்ம்மா
இருப்பது எப்படி!
மன்மோகனைப்
பார்த்து ஒருத்தர் அதாங்க நம்ம சு.சாமி "சும்மாவே இருக்கீங்களே இதெல்லாம் ஒரு
பொழப்பா?" அப்படின்னு கேட்டுட்டார்!
மன்மோகன்: தம்பி
சும்மா இருக்கிறது சும்மா இல்லை!
சு.சாமி : சும்மா
இருக்கிறது என்னய்யா பெரிய விஷயம்? ஆமா ஜி ஊழல்
நடந்துச்சே அப்ப நீங்க என்ன பண்ணுனீங்க?
மன்மோகன் : அது தொலைதொடர்புத்துறையைதான்
கேட்க வேண்டும்! எங்கிட்ட
சொல்லவே இல்லை!
சு.சாமி : காமன்வெல்த்
ஊழல் நடந்துச்சே அப்ப நீங்க என்ன பண்ணுனீங்க?
மன்மோகன் : அது
விளையாட்டுத்துறையைதான் கேட்க வேண்டும்! எனக்குத் தெரியாது!
சு.சாமி : சாட்டிலைட்
ஊழல் ஊழல் நடந்துச்சே அப்ப நீங்க என்ன பண்ணுனீங்க?
மன்மோகன் : எனக்குத்
தெரியாம அவிங்களே பண்ணிட்டாங்க! எனக்குத் தெரியாது!
சு.சாமி : சுவிஸ்
வங்கி பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர்றது என்ன ஆச்சு?
மன்மோகன் : ......................(மௌனம்)
சு.சாமி : நீங்க
உண்மைலுமே பிரதமர்தானா?
மன்மோகன் : .........................(மௌனம்)
ஆஹா - சும்மா
இருக்கிறது சும்மா இல்லை!
இதை படிச்சிட்டு ஒரு நண்பர் சொன்னார், “வாயில்லாத
புள்ள பூச்சின்னா எப்பிடி வேணும்னாலும் கலாய்ப்பியா?”
இன்னும்
கலாய்ப்பம்! - வடிவேலு VS சிங்கமுத்து
Tweet |
செம காமெடி நானும் கம்பனி கொடுக்கிறேன்.
ReplyDeleteஉங்க கம்பனிய எனக்கு கொடுத்திட்டு நீங்க இன்னா பண்ணுவீங்க?
Delete