Blogger Widgets

இந்தியா என்றொரு பச்சைத்துரோகி! வெட்கம் கெட்ட தமிழர்கள்!

  ஐ.நா. மனித உரிமை மாநாட்டில், அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கொண்டுவர உள்ள இலங்கை போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை எதிர்க்கப் போவதாக இந்தியா கூறியுள்ளது! இதை ஆதரிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஏற்கனேவே கோரிக்கை விடுத்திருந்தார். (ஒருவேளை ஜி-க்கு தமிழ்நாடு இந்தியாவின் மாநிலம் என்பது மறந்துவிட்டதோ என்னவோ? அல்லது தமிழ்நாட்டில் இருப்போர் எல்லாம் இந்தியர்கள் இல்லையா?)

  ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் இந்தியப் பிரதிநிதி,  இந்திய அரசின் நிலைப்பாட்டை விளக்கி வாசித்த அறிக்கையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்த ஒரு நாட்டையும் குறிவைத்து தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடாது என்றும், அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றுவது பயன் தரத்தக்க பேச்சுவார்த்தைக்கும் இணக்கமான அணுகுமுறைகளுக்கும் எதிரானதாக அமைந்துவிடும் அதற்கு பதிலாக உலக அளவில் மனித உரிமை சூழல் குறித்து வரும் அக்டோபரில் ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தில் நடைபெறவுள்ள பொதுவான விவாதத்தில் இலங்கையைப் பற்றியும் விவாதிக்கலாம் என்று கூறியுள்ளார். இதை இணைய தளத்திலும் வெளியிட்டுள்ளது! இது இலங்கை போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை எதிர்க்க போவதற்கான முதல் அறிகுறி!


  விவாதிப்பதற்கு மட்டும்தான் ஐ.நா என்றால் அப்பறம் எதுக்குடா ஐ.நா?  நீங்களே உட்கார்ந்து விவாதித்துவிட்டு ராஜபக்சே ஒரு தெய்வம் என்று சொல்லிவிடுங்களேன்!

  பள்ளிக்குச் சென்ற உம்முடைய குழந்தைகளின் மீது குண்டுமழை பொழிந்து அவர்களின் ரத்த சதையைக் காணும்போது சொல்வாயா உட்கார்ந்து விவாதிக்கலாம் என்று?  உங்க வீட்டில் இருக்கிற ஒவ்வொருவரையும் பதினைந்து பேர் சேர்ந்து நிர்வாணப்படுத்தி, கற்பழித்து,  சராமாரியாகச் சுட்டுக் கொன்றபின் சொல்லுவாயா?  உட்கார்ந்து விவாதிக்கலாம் என்று?


  விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி கொடுத்து வளர்த்ததும் இந்தியாதான், அவர்களை அழிக்க அமைதிப்படையை அனுப்பியதும் இந்தியாதான், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி கொடுத்து, ராடார் கொடுத்து, ஆயுதம் கொடுத்ததும் இந்தியாதான்! 2009ஆம் ஆண்டில் நடந்த ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தில் இலங்கைக்கு எதிராக வந்த தீர்மானத்தை எதிர்த்து இலங்கையைக் காப்பாற்றியதும் இந்தியாதான்! இப்போதும் இலங்கையைக் காப்பாற்றத் துடிப்பதும் இந்தியாதான்!


  இவர்கள் தேவைப்படும்போதெல்லாம் உபயோகித்துக் கொள்ளவும், கொல்லவும் தமிழர்கள் இவர்களின் கொத்தடிமைகளா??? தமிழர்களாகிய நாம் இப்படி இவர்கள் ஒவ்வொருமுறை துரோகம் செய்யும்போதும் ஒருமுறையேனும் போராட்டம் நடத்தியதுண்டா? (என்னையும் சேர்த்துதான்!)


  தமிழ் இனத்தைப் போல வெட்கம் கெட்ட, சொரணையற்றவர்களை இதுவரை நான் கண்டதே இல்லை. தினம்தினம் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்படும்போது உறங்கிக் கொண்டிருந்த, இருக்கும் இந்தியக் கடற்படை - ஒரு மலையாளி கொல்லப்பட்டவுடன் வீரத்துடன் சென்று அந்த இத்தாலியர்களை பிடித்தது ஏன்? கேரளா மாநிலம் கொடுக்கும் நிற்பந்தம்தான் காரணம்!


  இன்னும் வெட்கமே இல்லாமல் அடுத்த தேர்தலில் என்ன இலவசம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களே, உங்களுக்கு இலவசமாகக் கொடுக்கும் ஒவ்வொரு பொருளிலும், உங்களிடமிருந்து சுரண்டப்பட்ட உங்களின் ரத்தமும் உடனிருக்கிறது!

  தமிழர்கள் கொத்துக் கொத்தாய் மடியும்போதும், கையின்றி காலின்றி சித்திரவதையை அனுபவித்த போதும், இன்றும் கடிதங்களையே எழுதிக் கொண்டிருக்கும் எல்லா தமிழக அரசியல்வாதிகளுக்கும் ஒரு கேள்வி - உங்கள் கடிதங்களை படித்து ஒருமுறையேனும் பதில் வந்துள்ளதா? அல்லது கடித்தத்தையும் நீங்கள் தமிழில் எழுதுவதால் மத்தியில் உள்ளவர்களுக்குப் புரிவதில்லையா?


  இந்தியன் என்பதில் வெட்கப்படுகிறேன்!


UPDATE : அடுத்ததோர் உதாரணம் - இந்தியா கொலைகாரர்களுடன் எதுக்கிந்த நாறப்பொழப்பு?


16 COMMENTS:

  1. அரசின் உள்துறை,வெளியுறவுக்கொள்கை(மயிர்) எல்லாம் யாருக்காக உருவாக்கப்படுகிறது ....இங்கு தமிழகம் மொத்தமும் இந்தா தீர்மானத்தை(சட்டமன்றமும்,முதல்வரும் ,கலைஞரும்) ஆதரிக்கும் போது மத்திய அரசு எந்த மாநில மக்களுக்காக தீர்மானத்தை எதிர்க்கிறது மத்திய அரசு ...எந்த மாநில மக்கள் எதிர்க்க வலியுறுத்தியுள்ளனர்.. ...நான் தமிழன் இந்தியன் இல்லை ....

    ReplyDelete
    Replies
    1. எனக்குள்ள இருக்கிற அதே வெறி உனக்குள்ளேயும் இருக்குது!

      Delete
    2. enntha oru naadum than arukil ulla ayal naatukuthaan uthavi pannuvaarkal ,mearkathiya naadukalai pohl theevira vathikal kaiel aayuthankalai kothuthu oru naattai naasam pannathu inthia ,,, ivankalai alikamaal vittu irunthaal tamil nattaium alithu vittu irupaankal

      Delete
  2. தமிழ் இனத்தைப் போல வெட்கம் கெட்ட, சொரணையற்றவர்களை இதுவரை நான் கண்டதே இல்லை. தினம்தினம் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்படும்போது உறங்கிக் கொண்டிருந்த, இருக்கும் இந்தியக் கடற்படை - ஒரு மலையாளி கொல்லப்பட்டவுடன் வீரத்துடன் சென்று அந்த இத்தாலியர்களை பிடித்தது ஏன்? கேரளா மாநிலம் கொடுக்கும் நிற்பந்தம்தான் காரணம்!
    இது நியாயமான கருத்து

    ReplyDelete
    Replies
    1. இது நியாயமான கருத்து// அப்ப மத்ததெல்லாம்??

      Delete
  3. தமிழக மக்களுக்கு இருக்கும் அக்கறை தமிழக/இந்திய அரசியலுக்கு இல்லை.மனிதாபிமானமற்று கண்ணை மூடிக்கிடக்கிறார்கள்.கொன்று குவித்ததை அதன் சரி பிழைகளைத் தெரிந்தும்....இன்றும்கூட என்ன நடக்கிறது என்று கண்டுகொண்டும் விடுங்கள்.மனம் அலுத்துவிட்டது.நல்லதே நடக்கும் என்று எங்களை நாங்களே நம்புவதைத் தவிர வேறு வழியில்லை தோழரே !

    ReplyDelete
    Replies
    1. நம்புவதைத் தவிர வேறு வழியில்லை தோழரே ! /// இப்படி நாம் நம்பி, நம்பிய பல துரோகிகளால்தான் இந்த நிலை! வெறும் நம்பிக்கைகளால் ஏதும் நடக்க போவதில்லை - நம்பிக்கை செயல்பாடுகளாய் மாற வேண்டும்! நன்றி!

      Delete
  4. விடுதலை புலிகள் தோற்றதை நம்ப மறுக்கும் உங்களை போல ஆட்கள் இலங்கை அரசை எப்படியாவதும் பழி வாங்க நினைக்கிறீர்கள். அது தான் உண்மை நிலை. அதற்க்காக மனித உரிமை படுகொலை என பொய் சாயம் பூசி வேடம் போடுகிறீர்கள்.

    தற்போது இலங்கையில் தமிழர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இணக்கமான சூழல் மெதுவாக மலருகிறது. உங்களை போல வெட்டி புரட்சி ஆட்களால் அது சீர்குலையாமல் இருக்க வேண்டும்.

    நிகழ்காலத்துக்கு வாருங்கள், இலங்கை படுகொலைக்களுக்கு விடுதலைபுலிகளும் ஒரு காரணம். அயல்நாட்டில் இருந்து புலிகளுக்கு பணம் கொடுத்து ஊக்குவித்து அப்பாவி சிறார்களை துப்பாக்கி தூக்க வைத்த புலம் பெயர் வெத்து வேட்டுகளையும் நீதி மன்றத்தில் நிறுத்துங்கள். ராஜபக்சேவை மட்டும் குற்றம் சொல்லி தங்களின் குற்றங்களை மறைத்து நாடகமாடும் ஆட்களையும் சேர்த்து விமர்சிப்போம்

    ReplyDelete
  5. பிரபாகரன் செய்யாத துரோகமா? பிரேமதசாவுடன் சேர்ந்துகொண்டு இந்தியாவின் முதுகில் குத்தவில்லையா?

    ReplyDelete
  6. உங்கள் திமிராலும் துரோக மனப்பான்மையினாலும்தான் அனைத்து நாடுகளின் ஆதரவையும் இழந்தீர்கள். பட்டபிறகும் புத்திவரவில்லையே.

    ReplyDelete
    Replies
    1. this is true.but tamil tigers are only arrows ,american CIA IS trigger.we are close with
      USA,but we fond to CLOSE tamils of srilanka.more over CHINA takes more friendship with srilanka ,it very very dangerous for our defence activities.please think twice and be wise.

      Delete
  7. then rajiv killing was what.. height of friendship

    ReplyDelete
  8. காங்கிரஸ் ஆட்சி செய்யாத அல்லது ஆட்சி செய்ய வாய்ப்பில்லாத மாநிலங்கள் இந்திய மாநிலங்கள் அல்ல என அவர்க்ளே முடிவெடுத்துவிட்டார்கள் போல தெரிகிறது. மேலும் ராஜீவ் கொலைக்குப் பிறகு காங்கிரஸ் தமிழகத்தைப் பார்க்கும் பார்வை மாறிப்போனதுதான் முற்றிலும் உண்மை. நம்மை இந்தியாவிலிருந்து முற்றிலும் விலக்கியது அன்றுதான்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி...

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  9. (ஒருவேளை ஜி-க்கு தமிழ்நாடு இந்தியாவின் மாநிலம் என்பது மறந்துவிட்டதோ என்னவோ? அல்லது தமிழ்நாட்டில் இருப்போர் எல்லாம் இந்தியர்கள் இல்லையா?)

    தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது..அந்த தமிழ்நாட்டில் குழப்பம் - பயங்கரவாதம் செய்தவன் விடுதலிப்புலிகள்தான்..சிங்களவன் இல்லை....

    ReplyDelete
  10. we have lost support of india even tamilnadu people because of rajive murder if you write you have to take all the history..
    like the selfish ponnambalam ramanathen he had his properties in colombo therefore when british asked to divide this into two parts but they have said no to protect there properties...
    our enymies are our great generation.

    ReplyDelete