கேட்டுக்கோங்க மக்களே! வீடு, கம்பனி இதையெல்லாம் ஒரே நாளில்
முன்னேற்றுவது என்பது சாதாரண விசயமில்லை – ஆனால் கீழ்காணும் அறிவுரைகளை
பின்பற்றினால் உடனே ஒரே நாளில் முன்னேறிவிடலாம்.
- முதலில் கடிகாரத்தை 10 நிமிடம் அதிகப்படுத்தி வைக்கவும். இதனால் நம் கம்பேனி மற்ற கம்பனிகளைவிட பத்து நிமிடம் முன்னாடி போய்க்கொண்டிருக்கும்! (எப்பிடி உடனே முன்னேற்றி விட்டோமா??)
- கிழக்கு பார்த்து இருக்கும் கதவை இடித்துவிட்டு, தெற்கு பார்த்த மாதிரி வைக்கவும் (எப்பிடி பூகோள ரீதியா முன்னேறிடுச்சா?)
- எல்லோரையும் டை கட்டிவிட்டு வேலைக்கு வரச்சொல்லவும்! (ஏன்னா டை கட்டுறவன் எல்லாம் நன்றாக வேலை செய்வான்!)
- அலுவலக கண்ணாடிகளை ஸ்டிக்கர் கொண்டு மறைத்திடவும்! (அப்பறம் எதுக்கு கண்ணாடின்னு கேட்கப்பிடாது). இப்ப உங்களை யாராவது பார்க்க வேண்டுமென்றால் கண்ணாடிக்கு மிக அருகில் வந்துதானே பார்க்க முடியும்! அப்படின்னா நீங்க அவங்களை விட்டு தூரமா முன்னேறிட்டிங்கன்னு அர்த்தம்!
- வடகிழக்கு மூலையில் இருக்கும் கழிவறையை இடித்துவிட்டு தென்மேற்கு மூலையில் வைக்கவும் (வெளிய போறதுதானே எந்தப்பக்கம் போனாத்தான் என்ன? என்றெல்லாம் பேசக்கூடாது!)
- வீட்டின் உட்பகுதியில் உயரத்தை கூட்டவும். உயரமா வாழ்ந்தாத்தான் சீக்கிரமா உயர முடியும்!
- அமரும் அலுவலக டேபிளை யாருக்கும் தெரியாதவாறு, உங்களை மறைத்தவாறு மாற்றிவிடவும்! (உங்கள் வளர்ச்சி யாருக்கும் தெரியாது, தடுக்க முடியாதில்லையா?)
- இதையெல்லாம் நகைச்சுவை என்று கருதுபவர்களுக்கு! நூற்றில் என்பது சதவிகிதம் வீடு, கம்பெனிகள் இதில் குறைந்தபட்சம் ஏதாவது இரண்டையாவது கடைபிடிக்கிறார்கள்!
இப்ப உங்களுக்கும் முன்னேற ஆசை வந்திடுச்சா? பயன்படுத்திக்கொள்ளுங்கள்!
Tweet |
காலண்டர்ல சித்திரைல இருந்து பங்குனி வரைக்கும் தேடிட்டன், ஆனா நீங்க சொன்ன இந்த பிரமாதம் மட்டும் என்னான்னு தெரியல! காலண்டர்லயே இல்லையாம்!
ReplyDeleteஅப்பாடி...புல்லரிக்குதுங்கோ.உடம்பெல்லாம் மூளை உங்களுக்கு !
ReplyDeleteவளர்ர குயந்தை எப்பவுமீ அறிவா இக்கும்!
Delete:-)
ReplyDelete