Blogger Widgets

கலைஞர் சாதனை - அமெரிக்காவைக் காப்பாற்றினார்!

  3 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்த  உயர்திரு, மேன்மைமிகு, தலைவர், கலைஞர் கருணாநிதி அவர்கள் இப்போது உண்ணாவிரதம் இருக்காமலே தனது உண்ணாவிரதத்தை முடித்த புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்!

கடந்த 2009 ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போருக்காக 3 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து 2 லட்சம் தமிழர்கள் உயிரைக் காப்பாற்றினார்!

இப்போதோ அதையும் விஞ்சி ஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று கூறி உண்ணாவிரதம் அறிவித்தார். பிரதமரும் அந்த தீர்மானம் என்னவென்று தெரியவில்லை ஆனாலும் ஆதரிப்போம் என்று கூறியுள்ளார். (இதுக்கும் தெரியலதான்!) இதனால் அறிவித்த உண்ணாவிரத பந்தலுக்குக் கூட செல்லாமல் உண்ணாவிரத்தத்தை முடித்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்!


இதன்மூலம் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து அமெரிக்காவையே காப்பாற்றியுள்ளார்!



இது பற்றி கலைஞர் அவர்கள் அவர் பெருமையுடன் தெரிவித்ததாவது (கேள்வி பதில் ரெண்டுமே அவரேதான்!)

  “இலங்கை  ராணுவத்தால் நமது இலங்கைத் தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட போது- மத்திய அரசு அதிலே தாமதமின்றித் தலையிட்டு போர் நிறுத்தம் செய்திட வேண்டுமென்று கேட்டு நான் விடியற்காலை 5.45 மணியளவில் -கட்சிக்காரர்களோ, உதவியாளர்களோ கூட உடன் வராத நிலையில்- தனியாக அண்ணா நினைவிடம் சென்று உண்ணாவிரதம் தொடங்கியதை பின்னர் அங்கே வந்த செய்தியாளர்கள் எல்லாம் அறிவார்கள்.
கலைஞர் சாதனையை கலைஞரே முறியடித்தார் 
அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி 27-4-2009 அன்று விடுத்த அறிக்கையில், “போர் நடவடிக்கைகள் முற்றுப்பெற்று விட்டதென்றும், கனரகத் துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான்வழித் தாக்கிடும் போர் ஆயுதங்கள் போன்றவை பயன்படுத்தக் கூடாது என்று ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது." என்று தெரிவித்ததையொட்டித்தான் அன்று பிற்பகலில் எனது உண்ணாவிரதத்தைத் திரும்பப் பெற்றேன்.
   
ஜெயலலிதா கூற்றுப்படியே  நானாவது என்னுடைய இந்த வயதில் அந்த அளவிற்கு உண்ணாவிரதம் இருந்தேன்! (காலைல 5.45ல இருந்து, 9.45வரை இருந்த உண்ணாவிரதம்!)

இலங்கைத் தமிழர்களுக்காக அதைக் கூட செய்ய முன்வராத, “போர் என்றால் அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்என்று அறிக்கை விட்டு விட்டு, பிரதமருக்கு கடிதம் எழுதுவதையே வாடிக்கையாகக் கொண்டு திசை திருப்பும் ஜெயலலிதா, நான் ஏதோ மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகம் நடத்தியதாகத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்.

இப்போதும் அமெரிக்க தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க முன் வரவில்லை என்றால், தி.மு. கழகத்தினர் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம் இருப்பார்கள் என்றும், அதிலே நானும் பங்கேற்பேன் என்றும் அறிவித்தேன். இதற்குபோய் பிரதமரே கருணாநிதியின் நாடகத்திற்கு துணை போகின்ற அளவிற்கு நடந்து கொள்கிறார் என்று அறிக்கை விடுகிறார் ஜெயலலிதா!

இந்த புதிய சாதனையைப் பாராட்டி திரையுலகம் சார்பில் "பச்சைத் தமிழனுக்குப் பாராட்டு விழா" நடத்துமாறு பரிந்துரைக்கிறேன்!


8 COMMENTS:

  1. இந்த புதிய சாதனையைப் பாராட்டி திரையுலகம் சார்பில் "பச்சைத் தமிழனுக்குப் பாராட்டு விழா" நடத்துமாறு பரிந்துரைக்கிறேன்!

    //ஹா ஹா ரொம்ப நக்கலு தான்

    ReplyDelete
    Replies
    1. பாராட்டு விழா நடத்த சொன்னதைப்போய் நக்கல் என்று சொல்வதை நான் மென்மையாகக் கண்டிக்கிறேன் :)

      Delete
  2. சும்மா இருக்கிற மனுசனைத் தூண்டிவிடுறமாதிரி இருக்கு பதிவு.இந்தப் பதிவைக் கலைஞர் பாக்காமல் ஒளிச்சு வையுங்கோ நிலவன்பன் !

    ReplyDelete
  3. அன்று உண்ணாவிரதம் இன்னும் கொஞ்சம் கூட நீண்டிருக்கும்..மனைவி-துணைவி இடையே நடந்து வரும் பனிப்போர் முற்றுவதை தடுக்க தலைவர் வீட்டுக்கு போகவேண்டியதாயிற்று! எப்படி பார்த்தாலும் தலைவர் தான் போரின் தீவரத்தை அறிந்தவர்.

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் மனைவியும் துணைவியும் என்ன ஒரு தமிழ் பண்பாடு

      Delete
    2. அவ்வ்வ்வ்...

      Delete
  4. வெட்ககேடான விஷயம் இந்தியா செய்திருக்க வேண்டும் அதுவும் தமிழ் நாடு கொண்டுவந்திருக்க வேண்டும் ஓட்டளிக்க கெஞ்சி கேட்கவேண்டிய கேவலம் உலகில் இப்படி எங்கும் நடக்காது

    ReplyDelete