முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்!

  அது என்னவோ இந்த முட்டாள்கள் தினத்தில் APRIL FOOL செய்வதில் நமக்கெல்லாம் அவ்வளவு ஆனந்தம்! கீழே உள்ளவற்றைப் படித்துவிட்டு பின்னர் கூறவும் யார் முட்டாளென்று!
  • ஆளுர அரசாங்கம் மோசமமென்று கூறி, பேய் வேண்டாமென்று பிசாசைத் தேர்ந்தெடுப்போம், பின் ஐந்து வருடம் கழித்து, பிசாசு வேண்டாமென்று பேயைத் தேர்ந்தெடுப்போம். பின்னர் மறுபடியும் அதான்!

  • யார் வந்தாலும் ஒன்றும் நமக்கு செய்யப்போவதில்லை என்று தெரிந்தும் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை முட்டாள் என்று மை வைத்துவிட்டு வருவோம்! இருக்கும் MLA, MPக்களில் எவ்வளவு பேர் படித்தவர், எவ்வளவு பேர் கோடீஸ்வரர், எவ்வளவு பேர் ரவுடி என்று பாருங்கள், வித்தியாசம் புரியும்!

  • நாட்டுக்கு எவன் நல்லது செய்வான் என்று ஓட்டுபோடுவதெல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன், இப்பவெல்லாம் எவ்வளவு இலவசம், குவாட்டர், கோழி பிரியாணி! அல்லது என் சாதி, மதம், இனம்!


தன்னம்பிக்கை மந்திரம்!

வானம் ஆழமானது
நீ
நினைத்தால்!


வானம் ஆழமானது
நீ
உயர்ந்து நின்றால்!எனக்கு மிகவும் பிடித்த ஒரு கவிதை


காதல் தத்துவம்!

  • உன்னை என் மனதிலிருந்து வெளியேற்றப் போகிறேன்! ஆனால் நீ எப்படி என் மனதினுள் வந்தாய் என்று மட்டும் சொல்லிவிடு!!

  • நான் கொடுத்த முத்தங்களை எல்லாம் திருப்பிக் கேட்கப்போகிறேன்! திணறத்தான் போகிறாய் நீ! ஒரு மாதமாவது வேண்டுமே!! :)

  • உடை உடுத்தி கேட்கிறாய் எப்படியென்று? எப்படிச்சொல்வேன், அது இல்லாமலிருந்தால் நீ இன்னும் அழகு!!


கிரிக்கெட் நகைச்சுவை

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் என அனைத்து தொடர்களையும் இந்திய அணி இழந்தபின்,

ரெயினா - உன்னை அனுஷ்கா சர்மாவா நினைச்சுக்கறேன்!
ஜடேஜா - இந்த ரணகலத்திலேயும் உனக்கொரு கிளுகிளுப்பு கேக்குது?காதல் கவிதைகள் - பிரிவு

பிரிவை நினைத்தேன்
உயிர் வலித்தது,
அவளை நினைத்தேன்
வலிக்கு ஆறுதல்!

நான் கனவுகளை விரும்புகிறேன்
அவைகள் எவ்வாறாயினும்!.
கனவில்தான்
என் காதலி
என்னைக் காதலிக்கிறாள்!
எனது காதல்
உன்னை நினைப்பதற்காக அல்ல;
என்னை மறப்பதற்காக!


கலைஞர் சாதனை - அமெரிக்காவைக் காப்பாற்றினார்!

  3 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்த  உயர்திரு, மேன்மைமிகு, தலைவர், கலைஞர் கருணாநிதி அவர்கள் இப்போது உண்ணாவிரதம் இருக்காமலே தனது உண்ணாவிரதத்தை முடித்த புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்!

கடந்த 2009 ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போருக்காக 3 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து 2 லட்சம் தமிழர்கள் உயிரைக் காப்பாற்றினார்!

இப்போதோ அதையும் விஞ்சி ஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று கூறி உண்ணாவிரதம் அறிவித்தார். பிரதமரும் அந்த தீர்மானம் என்னவென்று தெரியவில்லை ஆனாலும் ஆதரிப்போம் என்று கூறியுள்ளார். (இதுக்கும் தெரியலதான்!) இதனால் அறிவித்த உண்ணாவிரத பந்தலுக்குக் கூட செல்லாமல் உண்ணாவிரத்தத்தை முடித்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்!


இதன்மூலம் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து அமெரிக்காவையே காப்பாற்றியுள்ளார்!


வடிவேலு ரோலில் மன்மோகன் சிங்!

  நாளுக்கு நாள் நம்ம மன்மோகன்ஜியோட கேரக்டரும் சரி ரோலும் சரி வடிவேலு பாணில போய்க்கினே இருக்கு!

  ராஜ்ய சாபாவில் நேற்று தமிழக எம்பிக்கள் கடுமையாக ஐ.நா சபையின் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கை நோக்கி கேள்விமேல் கேள்வி கேட்டனர். எதற்குமே திருவாளர் பதிலளிக்கவில்லை. எங்கேயோ, யாரோ பேசுவது போல காது இரண்டையும் பொத்திக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.


  மைத்ரேயன் "தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா, இல்லையா???" என்று பிரதமரின் முகத்துக்கு நேராகவே கேட்டார். அதற்கும் வழக்கம் போல காதையும் வாயையும் சாத்திக்கொண்டு மெளனம் காத்தார் திருவாளர் மன்மோகன். இப்போ இதை வடிவேலு ஸ்டைலில் பதில் சொல்லியிருந்தால்? (பேசறதே பெரிய விஷயம்! இதுல பதிலு வேறையாம்ல)


என் குட்டி செல்லம்! குழந்தைக்கு ஒரு கவிதை!

எதை எதையோ
சாதித்துவிடுகிறாய் நீ!
உன் ஒரே ஒரு அழுகையால்!


உன் அழுகையை ரசிப்பதற்கேனும்
அழவிடலாம் கொஞ்சநேரம்!


சைக்கோ தொடர்கதை பகுதி 2

 ஒரு வாரம்தான் நன்றாக ஓடியிருக்கும். எங்கள் டீமுக்கு குமார் என்று புதியவர் ஒருவர் சென்னையிலிருந்து வந்திருந்தார். இப்பொழுது எங்கள் டீமில் மொத்தம் நான்கு பேர். நான், சார்லஸ், குமார் மற்றும் பிரசாந்த்.

 அடுத்த நாளே பிரச்சினையும் ஆரம்பித்துவிட்டது. தவறு என்னுடையதுதான்! என்னவென்றால் சீனாவிலிருந்து வாங்கிய ஒரு SAMPLE டையை TIE (மதிப்பு ஒரு டாலர்!) என்னிடம் கொடுத்தார். நான் அதை என்னுடைய டிராயரில் போட்டு வைத்தேன். ஒரு இரண்டு நாள் கழித்து அதைக் கேட்டார், நான் டிராயரை திறந்து பார்த்தால் அதை காணவில்லை. 

 நானும் தேடாத இடமில்லை. பார்க்காத இடமுமில்லை, ஆனால் அதைக் காணவில்லை. (அய்யா என் கிணத்தைக் காணலை – என்பதுபோல்!) 

  நான் சொன்னேன், “அந்த கொரியர் கிடைக்கவில்லை என்று சீனாவில் சொல்லி திரும்ப வாங்கிக் கொள்ளலாம்! (இது வழக்கமாக சொல்லுவதுதான்)”


  “எப்படி அதை சொல்லுவது? இப்படி இதைக்கூட தொலைத்தால் மற்றதையெல்லாம்??” ஒரு அரை மணி நேரம் அட்வைஸ்! (எனக்கு அட்வைஸ் செய்யும் எந்த பக்கியையும் பிடிக்காது, ஏனென்றால் அட்வைஸ் செய்யும் யாரும் அதைக் கடைபிடிப்பதில்லை!)


எம் கண்களிலிருந்து ரத்தம்! பாலச்சந்திரன் படுகொலை

  சேனல் 4 வெளியிட்ட வீடியோவைப் பார்த்தவுடன் கண்களில் ரத்தம்தான் வருகிறது! வேறென்ன செய்யமுடியும நம்மால்? செய்ய வேண்டிய நேரத்தில் விட்டுவிட்டு!

  அடேய் சிங்கள வெறி நாய்களே! நீங்கள் போரிட விரும்பினால் போராளிகளுடன் போரிட்டிருக்க வேண்டும், அதை விட்டுவிட்டு போயும்போயும் ஒரு பதினான்கு வயதுச்சிறுவன் கண்முன்னே நிர்வாணப்படுத்தி பலரைச் சுட்டுக் கொன்றுவிட்டு பின்பு அந்தச் சிறுவனையும் துப்பாக்கியால் ஐந்துமுறை......(எனக்கு இதற்குமேல் எழுதத் தெரியவில்லை)

 “என்னை விட்டுட்டு போயிட்டியே” கதறி அழுபவர்களின் அழுகைக் குரல் இன்னும் நம் காதுகளில் ஒலிக்கிறது! இன்னும் இதுபோல் எத்தனை பேரைக் கொன்றார்களோ?


அரசியல்வாதி? அரசியல்வியாதி?

  ஒரு குழந்தைக்கு தனது எழுபதாவது பிறந்த நாளில் (எதுக்கு பொறந்த?) கத்தியால் கேக் ஊட்டிவிடும் எடியூரப்பா! சுற்றி இருப்போரின் முக பாவனைகளைப் பாருங்களேன்? இவர்கள் எல்லாம் அரசியல்வாதிகளா? இல்லை அரசியல்வியாதிகளா?

எழுபதாவது பிறந்த நாளில் எடியூரப்பா!! 
வருடத்தின் முதல் மின்தடை! இதை பார்த்தாவது திருந்துங்கடா

  இந்தியாவில உள்ள எல்லா அரசியல் வியாதிகளுக்கும் ஒரு கேள்வி ! கீழ உள்ளது இன்னான்னு படிக்க தெரியுமா?

  இத பார்த்ததும் நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்! கடந்த ஒரு வருசத்துல வர்ற முதல் மின்தடை, அதுவும் பராமரிப்பு பணிகளுக்காக!


  மின் தடைக்கு பத்து நாள் முன்னாடியே அறிவிப்பு கொடுத்து, எப்ப போகும், எப்ப வரும்னும் சொல்லியிருக்காங்க, அதுமட்டுமில்லாம ஏரியா முழுவதும் அனைத்து பில்டிங்களிலும் ஒட்டியிருக்காங்க! (பர்துபாய், துபாய், ஐக்கிய அரபு நாடுகள்)

  நிர்வாகம் எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்!


ஒரே நாளில் பணக்காரனாக! வீடு, கம்பேனியை ஒரே நாளில் முன்னேற்ற!

  கேட்டுக்கோங்க மக்களே! வீடு, கம்பனி இதையெல்லாம் ஒரே நாளில் முன்னேற்றுவது என்பது சாதாரண விசயமில்லை – ஆனால் கீழ்காணும் அறிவுரைகளை பின்பற்றினால் உடனே ஒரே நாளில் முன்னேறிவிடலாம்.

  • முதலில் கடிகாரத்தை 10 நிமிடம் அதிகப்படுத்தி வைக்கவும். இதனால் நம் கம்பேனி மற்ற கம்பனிகளைவிட பத்து நிமிடம் முன்னாடி போய்க்கொண்டிருக்கும்! (எப்பிடி உடனே முன்னேற்றி விட்டோமா??)


  • கிழக்கு பார்த்து இருக்கும் கதவை இடித்துவிட்டு, தெற்கு பார்த்த மாதிரி வைக்கவும் (எப்பிடி பூகோள ரீதியா முன்னேறிடுச்சா?)


  • எல்லோரையும் டை கட்டிவிட்டு வேலைக்கு வரச்சொல்லவும்! (ஏன்னா டை கட்டுறவன் எல்லாம் நன்றாக வேலை செய்வான்!)


மனைவி சண்டையும் ஒரு பீரும்!

(ஒரு டாஸ்மாக் பாரில்)


தம்பி!! ஒரு பீர்!”

“என்ன அண்ணே! இன்னைக்கி ரொம்ப சோகமா இருக்கீங்க?? மூஞ்சி டல்லா இருக்கு?”

“அதை விடுப்பா! பீரை எடுத்திட்டு வா!”

“பரவா இல்லை, சொல்லுங்கண்ணே!!”

“அது வந்து, ஒண்ணுமில்லை, எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துடுச்சு, ஒரு மாசம் என்னோட பேசமட்டேன்னு சொல்லிட்டா”

“போங்கண்ணே! சந்தோசமான விசயத்திற்கு போய் இம்புட்டு கவலைப்படுறீங்களே?”

“அடேய்! இன்னைக்குத்தான் அந்த மாசத்தோட கடைசி நாள்!”

(சரக்கில் ஒரு நண்பன் உளறிய கதை!)


கண்கள் செய்த கற்பழிப்பு!

கண்கள் செய்த
கற்பழிப்பால்
கரு உண்டானது
முகத்தில்!

இந்தியா என்றொரு பச்சைத்துரோகி! வெட்கம் கெட்ட தமிழர்கள்!

  ஐ.நா. மனித உரிமை மாநாட்டில், அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கொண்டுவர உள்ள இலங்கை போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை எதிர்க்கப் போவதாக இந்தியா கூறியுள்ளது! இதை ஆதரிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஏற்கனேவே கோரிக்கை விடுத்திருந்தார். (ஒருவேளை ஜி-க்கு தமிழ்நாடு இந்தியாவின் மாநிலம் என்பது மறந்துவிட்டதோ என்னவோ? அல்லது தமிழ்நாட்டில் இருப்போர் எல்லாம் இந்தியர்கள் இல்லையா?)

  ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் இந்தியப் பிரதிநிதி,  இந்திய அரசின் நிலைப்பாட்டை விளக்கி வாசித்த அறிக்கையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்த ஒரு நாட்டையும் குறிவைத்து தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடாது என்றும், அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றுவது பயன் தரத்தக்க பேச்சுவார்த்தைக்கும் இணக்கமான அணுகுமுறைகளுக்கும் எதிரானதாக அமைந்துவிடும் அதற்கு பதிலாக உலக அளவில் மனித உரிமை சூழல் குறித்து வரும் அக்டோபரில் ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தில் நடைபெறவுள்ள பொதுவான விவாதத்தில் இலங்கையைப் பற்றியும் விவாதிக்கலாம் என்று கூறியுள்ளார். இதை இணைய தளத்திலும் வெளியிட்டுள்ளது! இது இலங்கை போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை எதிர்க்க போவதற்கான முதல் அறிகுறி!


காதல் எப்படி இருக்கிறது? போட்டி முடிவுகள்!


  முதல்ல ஒட்டு போட்ட அனைவருக்கும் நன்றி! இப்படிப்பட்ட ஒரு முடிவை நிச்சயம் எதிர்பார்க்கவே இல்லை, ஏன்னா முதலில் வந்திருப்பது நாம் எதிர்பார்த்தது அல்ல! வெற்றி என்பதுதான் முதலில் வரும் என்று நினைத்தேன்! சரி முடிவுகளை பார்ப்பம்! மொத்தம் பதிவான ஓட்டுக்கள் – 168.

1. அவளு(னு)க்கு வேறொருவருடன் கல்யாணமாய்டிச்சி – 49 ஓட்டுக்கள் (29%)

  அடப்பாவிகளா ஊருக்குள்ள நிறைய பேர் இப்பிடிதேன் திரியறானுகளா? விளங்கிடும்! அவிங்களுக்கு கல்யாணமானாலும் இன்னும் அது என் ஆளுன்னு ஊருக்குள்ள சொல்லிக்கிட்டு திரியுற? வெக்கமா இல்லை உனக்கு? (எப்படி பார்த்தாலும் ஓட்டுல நாங்கதான் ஜெயிச்சம்னு சந்தோசப்படக்கூடாது!)

2. வெற்றி! வெற்றி! வெற்றி! – 44 ஓட்டுக்கள் (26%)

  வாழ்த்துக்கள்! காதல் வெற்றி பெற்றால் மட்டும் போதாது – நீங்கள் இல்லற வாழ்க்கையிலும் வெற்றி பெற்றால்தான் உங்களது ஓட்டு முழுமையாக செல்லுபடியாகும்! (ம்கூம்!!! கள்ளாட்டம் ஆடுற நீ அப்படின்னு சொல்லுற உன் வாய்ஸ நான் கேட்ச் பண்ணிட்டேன்)

3. ஊரே சிரிப்பா சிரிக்குது – 28 ஓட்டுக்கள் (16%)

  அதெப்படி மச்சி ஊரே சேர்ந்து கேவலமா சிரிக்கும்போதும் கொஞ்சம் கூட சொரணையே இல்லாம இருக்கிற? ஊரு பூரா சிரிக்க நண்பர்களும் ஒரு காரணமா இருப்பாங்க! ஏன்னா உங்க காதலை டமாரம் அடிப்பதே அவனுகளுக்கு வேலையா போச்சு! இப்பிடி ஊரே சிரிக்கும்போதும் “என் அஞ்சல மச்சி அவ“ அப்பிடின்னு சொல்லுற உன் தன்னம்பிக்கைய பாராட்டுறேன்!