சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் அப்போதுதான் குற்றங்கள் குறையும்!

  சுதந்திரம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதல்ல, பிறருக்கு பாதிப்பில்லாத வகையில் எதையும் செய்யலாம் என்பதே!

பெரும்பாலான தவறுகள் நிகழ பயமின்மையே காரணம்! 


இஸ்லாமிய சட்டம் என்றில்லை, சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும், லஞ்சங்கள் ஒழிக்கப்பட வேண்டும், நீதித்துறை உடனே நீதி வழங்கவேண்டும் அப்போதுதான் குற்றங்கள் குறையும்!


பிணத்தை எரித்துவிடுங்கள், அவைகளாவது கற்பழிப்பிலிருந்து தப்பிக்கட்டும்!

  இந்தியாவில் ஒவ்வொரு 54 நிமிடக்களுக்கு ஒருமுறை கற்பழிப்பு முயற்சி நடக்கிறது. 1 மணி 42 நிமிடக்களுக்கு ஒருமுறை வரதட்சனைக்கொடுமையால் ஒரு பெண் உயிரிழக்கிறாள்.

காட்சி 1 : மும்பை, மே-மாதம்.

  14 வயதுச்சிறுமியை அவள் தங்கியிருந்த வீட்டிற்கு அருகிலிருந்த 5 பேர் கடத்தக் கொண்டுபோய் கணக்கெடுக்க முடியாத அளவிற்கு சுமார் ஐந்து மாதங்களாகக் கற்பழித்திருக்கின்றனர். இரண்டு மாதம் ஆனவுடன் அவள்மீதிருந்த ஆசை தீர்ந்துபோய் “சோறு யார் போடுவதென்ற சண்டை வந்திருக்கின்றது. ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வெறும் ஒரே ஒரு வடா பாவ் கொடுத்திருக்கின்றனர்.

  ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஒரு பூங்காவில் வீசிவிட்டனர். அவளை ஆபரேசன் செய்தபோது உடலிலிருந்து எடுக்கப்பட்டவை என்னென்ன தெரியுமா? பேப்பர், மண், கற்கள் (பசியினால் வேறுவழியில்லாமல் அதையும் தின்றிருக்கும் அந்த சிறுமியைப் பற்றி நினைத்துக்கூட நம்மால் பார்க்க இயலவில்லை). கடந்த நவம்பர் 14 உடன் தன் மூச்சை நிறுத்திக் கொண்டாள.


உலகம் அழிகிறது? தப்பிக்க யோசனைகள் – யாருக்கும் சொல்ல வேண்டாம்!


 மாயன் காலண்டர்ல டிசம்பர்-21 உடன் தேதி முடிவடைவதால் உலகம் அழியப்போவது உறுதி. இதை எப்படித் தடுக்க? நம்மால முடியாதது எதுவுமே இல்லை!


உலகம் அழிவதைத் தடுக்க!

  • காலண்டர்ல டிசம்பர் 21-க்கு பிறகு நிறைய தேதி கொண்ட பக்கங்களை ஒட்டிவிடலாம்! அழியப்போற உலகம் ஏமாந்திடும்.

  • உலகம் அழியும்போது பெரிய பென்சிலை வைத்து அழிய அழிய கூடவே வரைந்துவிடலாம்! அப்புறம் உலகம் அழியவே அழியாது.


தமிழ் தத்துவங்கள்


  • தமிழ் எண்முறையிலிருந்து தெலுங்கு தோன்றியிருக்கலாம் ஒன்று(ஊ), இரண்டு(ஊ), மூன்று(ஊ) பத்து(ஊ) நூறு(ஊ), எண்ணூறு(ஊ) (1-899 வரை)

  • குழந்தைகளுக்கு அன்னா சொல்லித்தான் தமிழ் மொழி கற்றுத்தருகிறோம் இக்கன்னா, இங்ஙன்னா, இச்சன்னா..

  • தமிழ் எழுத்துகளில் பெரிய எழுத்து, சின்ன எழுத்து என்று வேறுபாடில்லை; எழுத்துகளில்கூட பிரிவினையை விரும்பாதவர்கள் தமிழர்கள்!

இதெல்லாம் தெரிந்துதான் பாரதி அன்றே சொன்னார் - "தமிழ் இனி மெல்லச் சாகும்"
ஆனா அதுக்கு அவரையே ஊறுகாயாக்கனுமா?        (படம் நன்றி - ) 


ரஜினி ஜோக்ஸ் - பிறந்தநாள் ஸ்பெஷல்

ரஜினி பிறந்த நாளான இன்று 12-12-12 சில ரஜினி ஜோக்ஸ்.!

  • ரஜினி  புட்பால் விளையாடும்போது சைடுல உதைக்கிறதுக்குப் பதிலா மேல உதைச்சதுதான் நிலா! கோல் ஆகமா மேல போனதுதான் வெள்ளி!

  • முதன்முதலா பூமில பகல் மட்டும்தான் இருந்துச்சு, ஒரு நாள் அசதில ரஜினி கண்ணமூடி தூங்கிட்டார் - அன்றிலிருந்துதான் இரவு/பகல் ஆரம்பிச்சுது

  • ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில வழக்கம்போல ரஜினிதான் மொதல்ல வந்தார். ஆச்சரியம் என்னன்னா லைட்டே அவருக்கு பின்னாடிதான் வந்தது.

  • ரஜினி கார்ல போகும்போது முன்னாடிபோன பஸ்ல மோதிட்டார். அந்த பஸ் முன்னாடி இருந்த இன்னொரு பஸ்ல மோதி இப்படியே லைனா இருந்த 10 பஸ்களும் மோதி நின்னுச்சு. அப்படி உண்டானதுதான் ரயில்!


இதயம் நனையட்டுமே? - இயற்கை கவிதைகள்

வழியெல்லாம் மழை,
குடையுடன் நான்
இதயம் நனைந்துவிட்டது!