சைக்கோ தொடர்கதை பகுதி 3

   தலையெல்லாம் ஒரே வலி, எழுந்து பார்த்தால் மணி மதியம் 3. மற்றவர்கள் எல்லோரும் படுக்கையில் அட்டையாய்க் கிடந்தனர். வாரவிடுமுறை வெள்ளி என்பதாலும், குடித்த போதையில் யாருமே சாப்பிடக்கூட போகலை. எழுந்துபோய் முகம் கழுவி தண்ணீரைக் குடித்துக்கொண்டேன். ஏழைகளுக்கும் போதைகளுக்கும் ஒரே தீர்வு.

  பொய் பொய்யா சொல்லி திரும்பவும் சைனாவிலிருந்து அந்த டையை ஆர்டர் செய்து வாங்கிவிட்டேன். இருந்தாலும் என் மனம் அடங்கவில்லை, திரும்பவும் தேட ஆரம்பித்தேன். எல்லாவற்றையும் குப்பைக்கூளமாக்கி வெளியில் எடுத்துப் போட்டேன். ட்ராயரை முழுவதும் வெளியில் எடுத்தவுடன் மடிமேல் வந்து விழுந்தது டை.

  “ங்கோ_” கெட்டவார்த்தையை உதிர்த்துக்கொண்டே அதை எடுத்துப் பார்த்தேன் அதே டை. நான் நிறைய பேப்பர்களை வைப்பதால் ட்ராயரின் மறுபக்கத்தில் உட்புறமாக விழுந்திருக்கிறது. அடப்பாவமே? இதுக்காடா ஒருவாரமா அட்வைஸ் வாங்கினேன்? அட்வைஸ் பண்ணினதைக்கூட மன்னித்துவிடலாம், ஆனா சரக்கடிச்சிட்டு ஒரு நைட் எல்லாம் அட்வைஸ் பண்ணினான் பாரு!!! ஆஆஆ!

  அடுத்த வியாழன் இரவு ஆபீசில் ஒரு ஹிந்திகார பெண்ணும், அவளின் நண்பர்களும், பிரசாந்தும் பீச்சுக்கு போவதாய் பிளான் பண்ணினார்கள். எல்லோரிடமும் சொல்லிவிட்டு இரவு கிளம்பினான், அந்தப்பெண் அவனை பிக் அப் செய்துகொண்டாள். பிரசாந்த் எப்போ ரூமுக்கு வந்தான் என்றெல்லாம் தெரியவில்லை, காலையில் ரூமில் இருந்தான். நேற்று இரவு என்ன நடந்தது என்றெல்லாம் எதுவும் கேட்கவில்லை. ஏன்னா அந்தப் பெண் பற்றி ஏற்கனவே தெரியும், "LET'S ENJOY" என்பது அவள் கொள்கை.



சில குண்டுவெடிப்புகள் சில உண்மைகள்!


  கடந்த சில குண்டுவெடிப்புகளின்போது நாட்டில் நடந்த பிரச்சினைகள் ஒரு அலசல்.


செப், 7, 2011 – டெல்லி ஹைகோர்ட் வளாகத்தில் குண்டுவெடிப்பு 11 பேர் மரணம், 76 பேர் காயம். 

நாடே 2G ஊழல் அதிர்ச்சியில் இருந்த சமயம். ராஜா, கனிமொழி கைது, அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் என்று இந்தியாவே களேபரத்தில் இருந்த சமயம். ஆகஸ்ட் மாதம் 2G ஊழலை எதிர்த்து, வலுவான லோக்பால் சட்டத்தை வலியுறுத்தி அன்னா ஹசாரே ஆகஸ்ட் 16 முதல் 12 நாட்கள் சாகும்வரை தொடர் உண்ணாவிரதம், மொத்த இந்தியாவும் இதற்கு ஆதரவு தெரிவித்து ஒவ்வொரு மாநிலத்திலும் போராட்டங்கள் நடைபெற்றது. ஆகஸ்ட் 28-ல் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். இந்தத் தொடர் உண்ணாவிரதத்தால் ஆட்சி கவிழும் சூழல் இருந்தது.

ஆகஸ்ட் 1, 2012 -  புனேயில் ஐந்து இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு ( ஐந்து இடங்களிலுமே ஆட்கள் இல்லை )
ஜூலை 29-ல் ஊழலைக் கண்டித்து திரும்பவும் உண்ணாவிரதம் தொடங்கினார் அன்னா ஹசாரே. டெல்லியில் பவர்கட், மின்சார மெட்ரோ ரயில் நிறுத்தம் இவை இரண்டும் ஒரு வாரம் நீடித்தது. இதே போல அஸ்ஸாம் கலவரம் ஜூலை 20 முதல் 10 நாட்கள் நீடித்தது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்தனர். பலர் கொல்லப்பட்டனர்.


பிட்டு படங்களில் ரசிக்க வேண்டியவை!


  படுமொக்கை படங்களைக் கொடுத்திட்டு பீத்திக்கிற நடிகர்/இயக்குனர்கள் மத்தில சமூகத்தை உயர்த்தும் பிட்டு படங்களை எடுத்துவிட்டு சத்தமில்லாமல் இருக்கும் நடிகர்/ இயக்குனர்களைக் கவுரவிக்கவே இந்தப் பதிவு.

  • பிட்டு படம் ஆரம்பிச்ச காலத்திலிருந்தே 100 வருசமா அதே கதையை திரும்ப திரும்ப எடுத்தாலும் என் கதை அதை நீ எப்படித் திருடலாம்ன்னு ஒரு பிட்டுபட டைரக்டராச்சும் சொல்லிருக்கானாயா? இல்லே கேஸ்தான் போட்டிருக்கானா? அந்த நன்றி உணர்ச்சி இருக்கா உங்களுக்கெல்லாம்? ஒரு படத்தை காப்பி பண்ணினதுக்குப் போய் டிவில அழுறாங்க, கண்ணீர் விடுறாங்க, கேஸ் போடுறாங்க. இல்ல நான் கேட்குறேன் படத்தை வேறு ஆளை வச்சுதானே எடுத்தான்? உன் படத்தை அப்படியேவாயா ரிலீஸ் பண்ணான்? இதுக்கு போய் கூவிகிட்டு.

  • அதே கதையை 100 வருசமா பார்த்தாலும் ஒரு ரசிகானாச்சும் சலிப்படைச்சிருக்கானா? கிடையாது. 70 வயசாகியும் இன்னும் பார்த்துக்கிட்டுருக்காங்கய்யா சில ரசிகர்கள். ஆனா எதாச்சும் நடிகர் ஒரு படம் பழைய படம் மாதிரி பண்ணாகூட எப்பிடி கழுவி கழுவி ஊத்துறீங்க? இதெல்லாம் மனசை உறுத்தல?


குழந்தை தத்துவங்கள்!


  • ஒரு குழந்தை போதும் உலகை மறக்க, ஒரு குழந்தை போதும் உலகை மறக்காமலிருக்க!

  • அம்மா கைபிடித்து நடக்கும் எந்தக்குழந்தையும் சாலையைக் கவனிப்பதில்லை - அம்மா பார்த்துக்கொள்வாள் என்று அதற்குத் தெரியும்.

  • பிறக்கும்போது எல்லோரும் குழந்தையாகவே பிறக்கின்றோம், பின்னர்தான் இந்தியனாவதும், இந்துவாவதும், முஸ்லிமாவதும்!

  • நாயைக் கூப்பிடுவது "டாமிஜிம்மிமணி". மகனை "டேய் நாயே இங்க வாடா" :-)

  • நீரழகுநிலவழகுமுகமழகு கூடவே உந்தன் மழலை பேரழகு!


காதல் கவிதைகள்!

நிலாப்பெண்ணுக்கு - தொகுதி 3

என்னை மறக்கடித்தவளே!
என்னை மறந்தாலும்
உன்என்னை மறந்துவிடாதே!

கண்களால் நான் சொல்வது
காதல் காதல் என்றறிந்தும்
உணர்வின்றி உணர்ச்சியின்றி
ஒன்றும் அறியாதவளாய்ப் போகையில்
எப்படிச் சொல்வேன்? – நான்
உன்னைக் காதலிக்கிறேன் என்று.



விஸ்வரூபம் – ஏமாந்தது நானு! அமெரிக்காவே கொதித்தெழு!

 "தராசோட விலை ஐயாயிரமா? அடேய் மோசம் போய்ட்டோமேடா! மோசம் போய்ட்டோமேடா! எவ்வளவு நாளா வியாபாரம் பண்றோம் நம்மள ஏமாத்திட்டானடா!"

 என்னது என் டயலாக்கை எல்லாம் இவன் பேசிட்டு போறான்? என்று முஸ்லிம் தலைவர்களைப் பார்த்து அமெரிக்கா கேட்க வேண்டியது, ஆனா இவங்க முந்திகிட்டாங்க! உதாரணமாய் படத்தில் ஒரு வசனம்

 “நாம அல்லாவுக்காகப் போராடுறோம், அமெரிக்கா ஆயிலுக்காகப் போராடுறது!”  நியாயமா பார்த்தா இந்த வசனத்திற்கு அமெரிக்காவுலதான் தடை பண்ணியிருக்கோணம்! பயலுக அவசரத்துல இங்க பண்ணிட்டாள்!

நிறைய வசனங்களில் கமல் டச்!

 கமலை அடிக்கும்போது “கிருஷ்ணா” னு கத்துகிறார். “நீ முஸ்லிமா இருந்துகிட்டு கிருஷ்ணானு கத்துறே?” என்கிறான் தீவிரவாதி, அதற்கு கமல் “சரி அல்லா” என கத்துகிறார்.

 கமல் மற்றும் அவர் உதவியாளரால் தவறுதலாய் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது. அப்போது கமல், “நம்மை அல்லா மன்னிக்கவே மாட்டார்.”
அதற்கு உதவியாளர், “நம்மையில்ல; உன்னை!”



காதல் கவிதைகள்!

நிலாப்பெண்ணுக்கு - தொகுதி 2


அடிக்கடி மவுனங்களால்
மனதை
உறைய வைக்கிறாய்!


அடிக்கடி புன்னகையால்
மனதை
உரசிப் புண்ணாக்குகிறாய்!


நம் மனதின் தேசியகீதமே
மவுனம்தானோ?


தினம் ஒரு பூவைச் சூடுபவளே
என் மனதில் சூடிய
ஒரு பூவே
வாழ்நாள் முழுதும் மனம் வீசிக்கொண்டிருப்பது
உனக்கெப்படித் தெரியும்
அது நீயாய் இருந்தும்?


பேச்சில்லை நீ பேசும்போது
மூச்சில்லை நீ பார்க்கும்போது
நானேயில்லை நீ இல்லாதபோது.



காதல் கவிதைகள் நிலாப்பெண்ணுக்கு தொகுதி - 1

நிலாப்பெண்ணுக்கு - தொகுதி 1

நான் உறங்கிக்கொண்டிருக்கிறேன்
உன் உறங்காத கனவுகளோடு

நான் விழித்துக்கொண்டிருக்கிறேன்
உன்னைப்பற்றிய நினைவுகளோடு

பூக்களுக்கும் உனக்கும்
ஒரே ஒரு வித்தியாசம்தான்
நீ மட்டும்தான்
நடக்கும் பூ.


FAKE - அட எல்லாமே டூப்ளிகேட்

  இது எல்லாமே டூப்ளிகேட் அப்படின்னா எதை உண்மைன்னு நம்புறது ? நீங்கள் வாங்கும் பொருட்களில் பாதிக்கும் மேற்பட்டவை போலி என்று உங்களுக்குத் தெரியுமா? போலி பொருட்கள் உண்மையான பொருளைவிட நன்றாக பேக் செய்யப்பட்டு வரும் என்பது தெரியுமா? குழந்தைகளுக்கு இந்தப் பொருட்களை உபயோகப்படுத்துவது தீங்கானது என்று தெரியுமா?

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்தும் FAKE PRODUCTS.

பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் இடம் - DUBAI GLOBAL VILLAGE,

பொருளின் உண்மைத்தன்மையை அறிய துபாய் நண்பர்கள் www.consumerrights.ae இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்