Blogger Widgets

சைக்கோ தொடர்கதை பகுதி 3

   தலையெல்லாம் ஒரே வலி, எழுந்து பார்த்தால் மணி மதியம் 3. மற்றவர்கள் எல்லோரும் படுக்கையில் அட்டையாய்க் கிடந்தனர். வாரவிடுமுறை வெள்ளி என்பதாலும், குடித்த போதையில் யாருமே சாப்பிடக்கூட போகலை. எழுந்துபோய் முகம் கழுவி தண்ணீரைக் குடித்துக்கொண்டேன். ஏழைகளுக்கும் போதைகளுக்கும் ஒரே தீர்வு.

  பொய் பொய்யா சொல்லி திரும்பவும் சைனாவிலிருந்து அந்த டையை ஆர்டர் செய்து வாங்கிவிட்டேன். இருந்தாலும் என் மனம் அடங்கவில்லை, திரும்பவும் தேட ஆரம்பித்தேன். எல்லாவற்றையும் குப்பைக்கூளமாக்கி வெளியில் எடுத்துப் போட்டேன். ட்ராயரை முழுவதும் வெளியில் எடுத்தவுடன் மடிமேல் வந்து விழுந்தது டை.

  “ங்கோ_” கெட்டவார்த்தையை உதிர்த்துக்கொண்டே அதை எடுத்துப் பார்த்தேன் அதே டை. நான் நிறைய பேப்பர்களை வைப்பதால் ட்ராயரின் மறுபக்கத்தில் உட்புறமாக விழுந்திருக்கிறது. அடப்பாவமே? இதுக்காடா ஒருவாரமா அட்வைஸ் வாங்கினேன்? அட்வைஸ் பண்ணினதைக்கூட மன்னித்துவிடலாம், ஆனா சரக்கடிச்சிட்டு ஒரு நைட் எல்லாம் அட்வைஸ் பண்ணினான் பாரு!!! ஆஆஆ!

  அடுத்த வியாழன் இரவு ஆபீசில் ஒரு ஹிந்திகார பெண்ணும், அவளின் நண்பர்களும், பிரசாந்தும் பீச்சுக்கு போவதாய் பிளான் பண்ணினார்கள். எல்லோரிடமும் சொல்லிவிட்டு இரவு கிளம்பினான், அந்தப்பெண் அவனை பிக் அப் செய்துகொண்டாள். பிரசாந்த் எப்போ ரூமுக்கு வந்தான் என்றெல்லாம் தெரியவில்லை, காலையில் ரூமில் இருந்தான். நேற்று இரவு என்ன நடந்தது என்றெல்லாம் எதுவும் கேட்கவில்லை. ஏன்னா அந்தப் பெண் பற்றி ஏற்கனவே தெரியும், "LET'S ENJOY" என்பது அவள் கொள்கை.


  வெள்ளி, வாரவிடுமுறை. அன்று இரவு பெங்களூரிலிருந்து CORPORATE COMMUNICATION போஸ்டுக்கு தனபாலன் வருவதாய்த் தகவல். சார்லஸ் என்னை சந்தித்த மாதிரியே அவரையும் இந்தியாவில் சந்தித்திருக்கிறார். வரும்போதே RED LABEL விஸ்கி 2 பாட்டில்கள் டியூட்டி ப்ரீயிலிருந்து வாங்கிவர சார்லஸ் ஆர்டர் கொடுத்துவிட்டிருந்தார். சார்லஸ் வீட்டிலிருந்து சில துணிகளையும் தூக்கிக்கொண்டு வந்திருந்தார்.

  தனபாலன் வந்தவுடன் பரஸ்பரம் அறிமுகம் முடிந்தவுடன் சரக்கடிக்க ஆரம்பித்தோம். ரெண்டு ரவுண்டுதான் போயிருக்கும், சார்லஸ் ஆரம்பித்தார்.

Prasanth, Shall I ask some questions which I don’t like to ask but better to clarify?”  

“Yaa”

“We all are staying together, eating together as a family, right?”

“Right”

“Then one girl asked you to come to beach yesterday evening then suddenly you have planned and gone with her alone, Do you think this is right?”

  குடித்த விஸ்கியை அப்படியே கிளாசில் துப்பிவிட்டேன். ஆஹா! கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான்யா! எப்புடி எல்லாம் யோசிக்கிறான்யா? கேனைத்தனங்களுக்கு பதில் சொல்லலாம், ஆனால் குருட்டுத்தனங்களுக்கு? நான் எழுந்து பால்கனிக்குப் போய்விட்டேன், போதையில் இருப்போரை சாமாளிக்கும் ஒரே வழி, ஓடிவிடுவது – எனக்கோ கால் வந்த கலை!

  பிரசாந்த் வேறுவழியில்லாமல் பதிலளித்துக் கொண்டிருந்தான், மேனேஜர் கேட்டால் சொல்லித்தானே ஆகவேண்டும்? மற்றவராய் இருந்தால் ஒரே பதில் போடா மயிரு.

“No, Charles. It is not like that. She asked me to come, she would have asked all of us to come then I could have called all”

“No. then you should have replied her without my friends I can not come”

குமார் வழக்கம்போல சார்லஸ் சொல்லுவதற்கெல்லாம் ஆமாம் ஆமாம் என தலையாட்டிக்கொண்டிருந்தார். இல்லை என்று சொன்னால்தான் கேட்பதில்லையே?

தனபாலன் குறுக்கிட்டார், “சார்லஸ், அந்தப்பொண்ணு கூப்பிட்டிருக்கு அவன் போயிருக்கான் இதிலென்ன இருக்கு?”

This is my department issue, mind your business” இந்த பதிலை சார்லசிடமிருந்து யாருமே எதிர்பார்க்கவில்லை. 


    அப்பொழுதுதான் தனபாலன் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார். இன்னும் ஆபீசைக்கூட பார்க்கவில்லை. இந்தப் பக்கிக்காக சரக்கும், இவன் வீட்டுக்குப்போய் துணியெல்லாம் மூட்டைகட்டிக்கொண்டு வந்திருந்தார்.

    நான் பால்கனியில் வெளியில் நின்றுகொண்டு உள்ளுக்குள் சிரித்தேன் “இன்னிக்கு ரெண்டு ஆடுகளா?”


0 COMMENTS:

Post a Comment