கேடி பில்லா கில்லாடி ரங்கா - விமர்சனம் (Kedi Billa Killadi Ranga)

  OKOK படத்திற்கு பின் வந்திருக்கும் ஒரு முழுநீள நகைச்சுவைப் படம். விமல், சிவகார்த்திகேயன் நடிப்பு மனதில் ஒன்றவில்லை. சிலசமயம் "அது இது எது" செட்டுக்குள் இருப்பதுபோலவே ஒரு பீலிங். இவர்கள் சீரியஸான சண்டை போடுவதுகூட நமக்கு காமெடியாகவே இருக்கின்றது. சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களிலாவது கொஞ்சம் கதையுள்ள, நடிக்க வாய்ப்புள்ள படங்களைத் தேர்வு செய்வது நல்லது. இல்லையென்றால் விமல் நிலைமைதான் அவருக்கும்.

  படத்திற்கு போகும்முன்னரே சொன்னேன் "பரோட்டா சூரியின் நடிப்பு நல்லா இருக்குமென்று". நடந்ததும் அதுவேதான். வடிவேல் இல்லாத இந்த தருணத்தில் ஒரு கிராமத்து வெள்ளந்தியான காமெடி வைப்பதற்கு சூரிதான் மிகச்சிறந்த ஒரே சாய்ஸ்.கிரிஸ் கெயிலாக மாறிய ஜெ! அத்தனையும் சிக்ஸர்!


பந்து கமெண்டரி:

  "இலங்கையில் இறுதிப்போரின்போது இலங்கை அரசு ராணுவத்தைப் பயன்படுத்தி, பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருந்த தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகின்றனர். இதையெல்லாம் கண்டித்து மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் உண்ணாவிரதம், தீக்குளிப்பு போன்ற போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். எனவே ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள், இலங்கையின் நடுவர்கள், களப் பணியாளர்கள் என யாரும் தமிழகத்தில் விளையாட அனுமதிக்கக் கூடாது" என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பினார்.

எடுக்கப்பட்ட ரன்கள்:

  1. IPL தொடங்கும் இந்த சமயத்தில் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வாய்ப்பே இல்லை. ஜெ. என்ன சொன்னாலும் கேட்டுத்தான் ஆக வேண்டும். அதே போல IPL நிர்வாகம் இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட மாட்டார்கள் என ஒத்துக்கொண்டது. நமக்கு பணந்தான் முக்கியம்! நாய் வித்தகாசு குரைக்கவா போகுது?

  2. சென்னை அணி இரண்டு இலங்கை வீரர்களைப் மொத்த தொடருக்கும் புறக்கணித்தது எதிர்பார்த்ததுதான். அதனால் பெரிய இழப்பில்லை. ஆனால் அணிக்கு ரசிகர் ஆதரவு முக்கியந்தானே? சீனிவாசன் வாயாலயே சீனி விக்கிற ஆளாச்சே?


புல்லரிக்க வைத்த விளம்பரங்கள்!

  விளம்பரம் என்றால் எதோ அந்தகாலத்து தூர்தர்சன் விளம்பரங்களைப் பார்த்து வியந்துகொண்டிருந்த??? (எப்படா முடியும்னு) இப்பொழுதெல்லாம் எப்பொழுது விளம்பரம் வருமென்று தேட ஆரம்பித்து விடுகின்றோம்! கார்பரேட் உலகில் போட்டிகளினால் வந்த நன்மை இதுமட்டும்தான்!


                                            


தமிழக பட்ஜெட்டும் எங்க வீட்டு மாட்டுகன்னும்!

  நேற்று சட்டசபையில் தொடங்கிய தமிழக பட்ஜெட்டில் ""அம்மா அம்மா, அம்மா அம்மா" என்று தொடங்கிய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையிடையே மானே தேனே என, புரட்சித்தலைவி, ஒப்பற்ற தலைவி, தானைத் தலைவி, வீரத்தமிழ் வடிவம், நம்பிக்கை நட்சத்திரம், பாரத்த்தாயின் தவப்புதல்வி, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா என "அம்மா அம்மா பட்ஜெட்" வாசித்தார்.

  இவையெல்லாம் வாசித்து திரும்ப புகழ்வதற்கு வார்த்தை இல்லாதபோது அதுக்கு பத்து கோடி, இதுக்கு நூறு கோடி என அறிவித்தார். பிறகு திரும்பவும் அம்மா அம்மா என முடித்துக்கொண்டார்.


இது எங்க வீட்டில:

"சும்மா கத்துதுபாரு! போய் மாட்டுக்கு தண்ணி வையி போ!" என்றாள் அம்மா.

"அம்மா, இங்கில்லம்மா, டி.வில ஏதோ பட்ஜெட் வாசிக்கிறாங்கலாமா!!"


இறுதிப்போரும் கருணாநிதியும்!

  ஈழப் போரை இலங்கையும், இந்தியாவும் இணைந்து நடத்தியதை அறிவோம். தமிழகமும் நடத்தியதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அன்றைய முதல்வர் திரு.கருணாநிதி, சிங்களப் படையின் தமிழகப் பிரிவு பிரிகேடியராகத்தான் நடந்து கொண்டார். 

  எக்காரணத்தை முன்னிட்டும் தமிழகத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. மாவீரன் முத்துக்குமார் இறுதி நிகழ்வில் கூடிய கூட்டம் வரலாற்றில் குறிக்கத்தக்கது. ஆயினும், அச்செய்தி ஊடகங்களில் பெரிதாக வெளிவராமல் தடுக்கப்பட்டது. 

  மாணவர் போராட்டங்கள் நாடெங்கும் நடந்தன. அவற்றின் தாக்கம் பொதுமக்களைத் தாக்கிவிடாமல், திரு.கருணாநிதி பல்வேறு நாடகங்களை நடத்தினார். திரு.கருணாநிதியின் முதுகுவலி, முல்லைத்தீவில் கொல்லப்பட்ட மக்களின் கதறலைக் காட்டிலும் வேதனைமிக்கதாக பெரிதுபடுத்தப்பட்டது. கொத்துக் குண்டுகள் வீசப்படுகின்றன என நாம் கதறியபோதெல்லாம், அவர் சகோதர யுத்தம் நடத்தியவர்கள்தானே விடுதலைப் புலிகள் என்று அறிக்கை மேல் அறிக்கையாக வாசித்தார். அந்த நாட்களில் அவரால் ஏவப்பட்ட ஒடுக்குமுறைகள் இன்னும் கூட முழுமையாக வெளிவரவில்லை.


அந்த ஒடுக்குமுறைகளுக்கு நான் ஒரு சாட்சி.எப்பத்தான் முடியும் இந்த இலங்கை நாடகம்?

  2009 மட்டுமல்ல 2013லும் நாடகம் போடவேண்டுமென்றால் அரசியல்வாதிகள் இலங்கைப் பிரச்சினையை எடுத்துக்கொள்கிறார்கள். 


  கொழும்புவில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அதி நவீன அலுவலகம் கட்ட இலங்கை அரசுடன் ஒப்பந்தம். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தலைவராக இலங்கை வீரர் ஒருவர் செயல்படுவார்.

  அதாவது பேரன் ராஜபக்சே அரசுடன் வர்த்தகம் புரிவார், தாத்தா ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க நம் நாட்டு அரசுடன் நாடகம் போடுவார்.


எழும் மாணவர் சக்தி - மனதைத் திற!

  மாணவர்கள் என்றால் நடிகர்களுக்கு பாலாபிசேகம் செய்வார்கள், பஸ்டே என்ற பெயரில் கலவரம் நடக்கும், பக்கத்துக் கல்லூரியில்போய் கலவரம் செய்வார்கள், எதிர்காலத்தை பற்றிய எந்த தெளிவும் இருக்காது என்று மட்டும் எண்ணிக் கொண்டிருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள்.

  இந்தித் தடுப்புப் போராட்டம் வெற்றிபெற ஒரே காரணம் மாணவர்கள் மட்டும்தான் என்பதை யாருமே மறுக்க இயலாது. ஆனால் இலங்கை இறுதிப்போரின்போது தொடங்கிய மாணவர் போராட்டம் அப்போதைய அரசால் தடுக்கப்பட்டுவிட்டது. சகோதர்கள் கொத்துக்கொத்தாய்ச் சாகும்போது தாய்த் தமிழ்நாடு வேடிக்கை பார்த்தது என்ற குற்ற உணர்ச்சி பல நாட்களாய் இருந்தது. தமிழ் இளைய சமுதாயம் வெறும் கேளிக்கைகளில் மூழ்கிவிடுமோ என்ற அச்சம் பல நாட்களாகவே இருந்தது.

  ஆனால் இப்போது மாணவர்கள் தொடர்ச்சியாய் இலங்கைப் பிரச்னைக்கு எதிராக தமிழகம் முழுவதும் கட்சி, இனம், மதம், சாதி சார்பின்றி அனைத்துக் கல்லூரி மாணவர்களும் "மாணவர் சக்தி" என்ற ஒரே ஆயுதத்துடன் போராடுவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் ரத்தம் தமிழரின் ரத்தம் என ஒவ்வொரு மாணவரும் இறங்கியிருப்பது பாராட்டுக்குரியது.

  தலைவனில்லை, கட்சியில்லை ஆனால் லட்சியம் மட்டும் கொண்டு தவறென்றால் ஒன்றாய்க்கூடி அதை எதிர்க்கும் மாணவர்கள் நம் சமுதாயத்தில் இருப்பதற்கு நம் ஒவ்வொருவருக்கும் பெருமை.

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களுடன் சிலம்பரசன்.

தொடங்கிய போராட்டம்:

  சென்னை லயோலா கல்லூரில் இலங்கை இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை, தமிழீழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடங்கிய 8 மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தின் நான்காம் நாளான 11/03/13 அதிகாலை 2 மணிக்கு போலீஸார் கட்டாயமாக அங்கிருந்து அவர்களை வெளியேற்றினர். பின்னர் மாலையில் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். ஆனால் அவர்கள் தொடங்கிய போராட்டம் தமிழ்நாடு முழுதும் பற்றிக்கொண்டது.


  இன்று போராட்டம் நடத்தாத மாவட்டங்களே இல்லை என்னும் அளவுக்கு சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி ஏன் பண்டிச்சேரியிலும்கூட மாணவர் போராட்டத்தால் அதிர்ந்துவருகிறது.


ஃப்ரீ ஃபிளைட் டிக்கெட் வேணுமா? போலீசைக் கூப்பிடுங்க!

  53 வயதான பாகிஸ்தானி ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக துபாயில் பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் பல நாட்களாக வேலைக்குச் செல்லாததால் நிறுவனம் அவரை வேலையிலிருந்து தூக்கிவிட்டது. வேலையிழந்து வேறு வேலைக்கு முயற்சித்து வேலை எதுவும் கிடைக்கவில்லை. விசாவும் முடிந்துவிட்டதால் துபாயில் தங்கியிருப்பது சட்டவிரோதம். பாகிஸ்தானுக்குத் திரும்பிப்போக பிளைட் டிக்கெட் வாங்கணுமே? கையில் மட்டுமல்ல பையிலும் பணமில்லை. என்ன செய்யலாம் என உட்கார்ந்து யோசித்த அவருக்கு கனநேரத்தில் வந்ததது ஒரு யோசனை.

  ஜனவரி 20ம் தேதியன்று அவசர உதவி எண்ணான 999ல் போலீஸ் கண்ட்ரோல் ரூமை தொடர்புகொண்டு என்னை நாடு கடத்தவேண்டும்(Deport) எனத் திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறார். ஒருமுறையல்ல, இருமுறையல்ல 100 தடவை தொடர்ந்து கூப்பிட்டிருக்கிறார்.


இரண்டாம் வகுப்பு பையன் படிக்காததற்கு கிடைத்ததோ 11 லட்சம்!

  துபாயில் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் சரியாக படிக்கவில்லை, அவனது கல்வியை ஊக்குவிக்க பள்ளி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் மாணவனின் தந்தை. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாணவன் கல்வியை மேம்படுத்தத் தவறியதற்காக Dhs 77,500 (ரூ.11 லட்சம்) செலுத்த அந்தப் பள்ளிக்கு உத்தரவிட்டது.

  மாணவன் தனியார் பள்ளியின் முதல் வகுப்பில் சரியாக படிக்காதபோதும், இரண்டாம் நிலைக்குப் பாஸ் செய்தனர். இரண்டாம் நிலையிலும் சரியாக படிக்காததால் மாணவனின் தந்தை இதுபற்றி பள்ளியிடம் கேட்டால் பதில் ஏதுமில்லை. அவனின் செயல்திறனை மேம்படுத்த பள்ளி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கொதித்துப்போன தந்தை துபாய் நீதிமன்றத்தில் பள்ளியின்மீது வழக்கு தொடர்ந்தார்.


அம்மா பிரதமர் ஆனால்!


  • ரிலையன்சை எல்லாம் பின்னுக்குத் தள்ளி டாஸ்மாக் இந்தியாவின் முதன்மை நிறுவனமாகும். சிகரெட் விற்பனைக்கும் அரசே தனி கடைகளை ஆரம்பிக்கும், வியாபாரம் பிச்சுக்கும்.

  • பாராளுமன்றம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலாய்க் காட்சியளிக்கும் பின்னே 273 எம்.பிக்கள் குப்புற விழுந்து விழுந்து எழுந்தால்?

  • ஒரு எம்.பி கூட லஞ்சம் வாங்க முடியாது. ஏன்னா அவரு அன்னிக்கி பதவில இருக்காரா? இல்லையானு ஆண்டவனுக்கு கூட தெரியாது, ஆண்டவனே 8 மணி நியூஸ் பார்த்துத்தான் தெரிஞ்சுக்குவாராம்.

  • குண்டு வெடிப்பைவிட பிரதமர் அறிக்கை அரசு அலுவலர்களுக்கு மிகப்பெரிய குண்டாய் இருக்கும்.

  • அவதூறு வழக்கிற்கென்றே தனி நீதிமன்றம் அமையும், அத்துனை அவதூறு வழக்குகள் போடப்படும், சில அவதூறு வழக்குகள் நீதிமன்றத்தின்மீதேகூட போடப்பட்டிருக்கலாம்.

  • ஒல்லியாய் இருப்போர்மீதும் குண்டர் சட்டம் பாயும். பழைய ஆட்சியின் பாதி எம்.பிக்கள் நிலஅபகரிப்பு சட்டத்தில் ஜெயிலில் மண் எண்ணிக்கொண்டிருப்பர், எண்ணி முடிச்சாதான் ஜாமீன். சிலர் நிலா அபகரிப்பு சட்டத்திலும்கூட கைது செய்யப்படலாம்.