Blogger Widgets

கேடி பில்லா கில்லாடி ரங்கா - விமர்சனம் (Kedi Billa Killadi Ranga)

  OKOK படத்திற்கு பின் வந்திருக்கும் ஒரு முழுநீள நகைச்சுவைப் படம். விமல், சிவகார்த்திகேயன் நடிப்பு மனதில் ஒன்றவில்லை. சிலசமயம் "அது இது எது" செட்டுக்குள் இருப்பதுபோலவே ஒரு பீலிங். இவர்கள் சீரியஸான சண்டை போடுவதுகூட நமக்கு காமெடியாகவே இருக்கின்றது. சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களிலாவது கொஞ்சம் கதையுள்ள, நடிக்க வாய்ப்புள்ள படங்களைத் தேர்வு செய்வது நல்லது. இல்லையென்றால் விமல் நிலைமைதான் அவருக்கும்.

  படத்திற்கு போகும்முன்னரே சொன்னேன் "பரோட்டா சூரியின் நடிப்பு நல்லா இருக்குமென்று". நடந்ததும் அதுவேதான். வடிவேல் இல்லாத இந்த தருணத்தில் ஒரு கிராமத்து வெள்ளந்தியான காமெடி வைப்பதற்கு சூரிதான் மிகச்சிறந்த ஒரே சாய்ஸ்.


கதை:

  அப்படின்னா என்ன? எண்டு கார்டு போட்ட உடனே இனிதான் கதை தொடங்குதோன்னு நினைச்சேன், ஆனா எல்லோரும் எந்திரிச்சு போய்ட்டாங்க!

  விமலும், சிவகார்த்திகேயனும் வேலை எதுமில்லாமல் பெரிய அரசியல்வாதி ஆகவேண்டும் என ஊர் சுற்றுகின்றனர். இரண்டு பேரும் ஆளுக்கொரு பொண்ணை லவ் பண்றாங்க. அவர்களிடமும், அவர்கள் தந்தையிடமும் அடிவாங்கி, பின் எப்படி சேருகின்றனர் என்பதே கதை.

டயலாக்: 

  படத்தின் முக்கியமான பிளஸ் இந்த டயலாக்குகள் தான். படம் முழுதும் நம்மை விடாமல் சிரிக்க வைப்பவை.

இவங்க அப்பாக்க நிறைய திட்டம் போட்டு இவங்க ரெண்டு போரையும் பிரிக்க பாத்தாங்க, ஆனா இவனுங்க ஒரே திட்டம் போட்டு அப்பா ரெண்டு போரையும் பிரிச்சிட்டாங்க

அண்ணே வோட் கவுன்டிங்ல எமாத்திட்டாங்கண்ணே" நாம ஜெயிச்சிட்டமாடா? இல்லண்ணே 36 வோட்டுக்கு 30 ஓட்டுன்னு சொல்லி ஏமாத்திட்டங்கண்ணே

டேய்! 36 வோட்டு வாங்குனதுகூட பரவாயில்லடா. ஆனா அதுக்கு ராத்திரிபூரா பொட்டிய தூக்கிட்டு போயிருவாங்க, பொட்டிய தூக்கிட்டு போயிருவாங்கன்னு என்னையும் தூங்கவிடாம முழிச்சிட்டு இருக்க வச்சீங்க பாரு அதைத்தான் பொறுத்துக்க முடியாது.



ஹலோ நான் பசியா இருக்கேன் அப்புறமா கூப்பிடுறேன்.

எங்க வீட்ல ஒரு நாய் வளர்க்கிறாங்க அதுகிட்டே கொடுத்து செக் பண்ணின பின்னாடிதான் நான் சாப்பிடுறேன். எங்க வீட்லயும்தான் ஒரு நாய் வளர்க்கோம், நான் சாப்பிட்ட பின்னாடிதான் அது சாப்பிடுது.

நகையை அடமானம் வைக்கணுமா?
அவனவன் கட்சியையே அடமானம் வைக்கிறான்

"ஒரு பொறம்போக்கு, கொஞ்சும் கிளி" என படத்தில் இரண்டு பாடல்கள் சூப்பர். படத்தின் பிளஸ் யுவன் இசை, ஒளிப்பதிவு, சூரி. மைனஸ் மத்த எல்லாமே.

                       

  உலகக்கதை எடுக்கிறேன் பேர்வழி என்று நம்மைக் கொல்லாமல் கதையெல்லாம் கிடையாது, வந்து சிரிச்சிட்டு போங்க என்று தைரியமாய் மொக்கை காமெடியை சொன்ன பாண்டிராஜ்க்கு மற்றுமொரு வெற்றிப்படம். ஆனா பசங்க டைரக்டர் என்ற வகையில் இது தோல்விப்படமே.

கேடி பில்லா கில்லாடி ரங்கா - 5.5 / 10. நிச்சயமாய் பார்க்கலாம்.


2 COMMENTS:

  1. இந்த ஞாயிறு சென்றிட வேண்டியது தான்... நன்றி...

    ReplyDelete
  2. படம் செம ஜாலியா இருக்காம் நான் இன்னும் பார்க்கல... நிச்சயம் இந்த வாரத்துக்குள்ள பாத்துருவேன் .. இயர் எண்ட் னு பரதேசிய கூட பாக்காத நம்ம சிபி அண்ண இந்த படத்த முதல் நாளே பாத்துட்டாராம் அதனால நிச்சயம் வாய் விட்டு சிரிக்கிறதுக்காவது இந்த படத்துக்கு போவேன்

    ReplyDelete