Blogger Widgets

தமிழக பட்ஜெட்டும் எங்க வீட்டு மாட்டுகன்னும்!

  நேற்று சட்டசபையில் தொடங்கிய தமிழக பட்ஜெட்டில் ""அம்மா அம்மா, அம்மா அம்மா" என்று தொடங்கிய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையிடையே மானே தேனே என, புரட்சித்தலைவி, ஒப்பற்ற தலைவி, தானைத் தலைவி, வீரத்தமிழ் வடிவம், நம்பிக்கை நட்சத்திரம், பாரத்த்தாயின் தவப்புதல்வி, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா என "அம்மா அம்மா பட்ஜெட்" வாசித்தார்.

  இவையெல்லாம் வாசித்து திரும்ப புகழ்வதற்கு வார்த்தை இல்லாதபோது அதுக்கு பத்து கோடி, இதுக்கு நூறு கோடி என அறிவித்தார். பிறகு திரும்பவும் அம்மா அம்மா என முடித்துக்கொண்டார்.


இது எங்க வீட்டில:

"சும்மா கத்துதுபாரு! போய் மாட்டுக்கு தண்ணி வையி போ!" என்றாள் அம்மா.

"அம்மா, இங்கில்லம்மா, டி.வில ஏதோ பட்ஜெட் வாசிக்கிறாங்கலாமா!!"

டிஸ்கி: நேற்று அரேபியா முழுதும் மதர்ஸ் டே ஒருவேளை அதுக்காக சொல்லியிருப்பாரோ? சே! சே! அவருக்குத்தான் ஆல் டே அம்மா "டே"யாச்சே?


0 COMMENTS:

Post a Comment