ரிலையன்சை எல்லாம் பின்னுக்குத் தள்ளி டாஸ்மாக்
இந்தியாவின் முதன்மை நிறுவனமாகும்.சிகரெட்
விற்பனைக்கும் அரசே தனி கடைகளை ஆரம்பிக்கும், வியாபாரம்
பிச்சுக்கும்.
பாராளுமன்றம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலாய்க் காட்சியளிக்கும் பின்னே273எம்.பிக்கள்
குப்புற விழுந்து விழுந்து எழுந்தால்?
ஒரு எம்.பி கூட லஞ்சம் வாங்க முடியாது. ஏன்னா
அவரு அன்னிக்கி பதவில இருக்காரா?இல்லையானு
ஆண்டவனுக்கு கூட தெரியாது, ஆண்டவனே 8 மணி நியூஸ் பார்த்துத்தான் தெரிஞ்சுக்குவாராம்.
குண்டு வெடிப்பைவிட பிரதமர் அறிக்கை அரசு
அலுவலர்களுக்கு மிகப்பெரிய குண்டாய் இருக்கும்.
அவதூறு வழக்கிற்கென்றே தனி நீதிமன்றம் அமையும்,அத்துனை
அவதூறு வழக்குகள் போடப்படும், சில அவதூறு வழக்குகள்
நீதிமன்றத்தின்மீதேகூட போடப்பட்டிருக்கலாம்.
ஒல்லியாய் இருப்போர்மீதும் குண்டர் சட்டம்
பாயும்.
பழைய ஆட்சியின் பாதி எம்.பிக்கள் நிலஅபகரிப்பு சட்டத்தில் ஜெயிலில்
மண் எண்ணிக்கொண்டிருப்பர், எண்ணி முடிச்சாதான் ஜாமீன். சிலர்
நிலா அபகரிப்பு சட்டத்திலும்கூட கைது செய்யப்படலாம்.
பிரதமர் பாராளுமன்றத்தில் பேச எழுந்தாலே
எம்.பிக்கள் மேசையை தட்டுவார்கள், அவர் கொட்டாவி
விட்டால்கூட மேசையை ஒருசேர தட்டி நன்றி தெரிவிப்பர். சிறப்பு விருந்தினராய் வரும்
ஜப்பான் பிரதமர் அதை ஏதோ மியூசிக் பிரோக்கிராம் என நினைத்துக்கொள்ளவும்
வாய்ப்புண்டு.
உலக சேட்டிலைட் மேப்பில் இரவில் இந்தியா தனியா
கருப்பா தெரியும்,வெளிச்சம்
இருந்தாத்தானே? தீபாவளி பரிசாக மின்சாரத்தை சேமிக்கும்
வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆட்டாங்கல்லும், அம்மிக்கல்லும்
பரிசாய்க் கிடைக்கும்.
இந்தியாவில் மின்சாரம் இல்லாததற்கு காரணம்
முன்பிருந்த மக்கள் விரோத காங்கிரஸ் ஆட்சிதான் என்று பிரதமரின்5-ம் ஆண்டின் ஆட்சியில் அறிக்கை வரும்.
MGRசிலைகள் பறக்கும் குதிரையின்
விரிந்த இறக்கைகளுடன் நாடு முழுவதும் அமைக்கப்படும், பாராளுமன்றம்
குழந்தைகள் நல மருத்துவமனையாகும்,
சீனாவுக்கு ஒரு பயணம் போனால் அவர்கள்200கோடி
செலவு செய்ய வேண்டியிருக்கும். இப்படியே ஒரு100தடவ
பயணம்போய் சீனா வளச்சியை இப்படியும் தடுக்கலாம்:-)
இலங்கைல இருந்து வரும் விமானம் கூட
தமிழ்நாட்டில் கீழே இறங்க அனுமதி இருக்காது.ஆனா
பக்கத்து பாலக்காட்டிலே இறங்கிக் கொள்ளலாம்.
ராஜஸ்தானின் அஜ்மீர் நகரத்தின்33-ம் வார்டின் முக்குச்சந்தில் வசிக்கும் ஒரு தொண்டர் கட்சியிலிருந்து
நீக்கப்பட்டால்கூட அதை பிரதமரே அறிவிப்பார்.
சுதந்திர தினத்துலகூட பாரத தாய்க்கு பதிலாக
அம்மாவின் புகைப்படம் போட்டு வாழ்த்த வயதில்லை போஸ்டரெல்லாம் கலக்கும். போஸ்டர் அடிச்சவன் வயசு 95 ஆக இருக்கும்.
பெட்ரோல், டீசல்,
பால் விலைகள் ஒரே நாளில் ரூ.50ஏற்றப்படும்.
பிறகு5ஆண்டுகளுக்கு விலையேற்றமே
இருக்காது. இளிச்சவாய மக்களும்10நாட்கள்
போராடிவிட்டு பின் மறந்துவிடுவார்கள்.
அர்த்த ராத்திரியில்கூட எதிர்க்கட்சித் தலைவர்
கைது செய்யப்படலாம் - கொல்றாங்களே என்று கத்தி நாடகம் போட்டாலும்கூட.
ஒரு பய கற்பழிக்க முடியாது. அப்பிடி நினச்சாலே
என்கவுண்டர்தான். கொள்ளை,திருட்டு
என அல்லாத்துக்கும் என்கவுண்டர்தேன். ரவுடிக பங்களாதேஷ்க்கோ, பாகிஸ்தானுக்கோ ஓடிருவாக.
டிஸ்கி – இதெல்லாம்
வெறும் நகைச்சுவைக்குத்தான், ச்சொன்னா நம்புங்கப்பா:-)
நினைத்து பார்க்க கூட முடியவில்லை
ReplyDeletehaaa haaa...
ReplyDelete