2009 மட்டுமல்ல 2013லும்
நாடகம் போடவேண்டுமென்றால் அரசியல்வாதிகள் இலங்கைப் பிரச்சினையை
எடுத்துக்கொள்கிறார்கள்.
கொழும்புவில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அதி நவீன அலுவலகம் கட்ட இலங்கை அரசுடன் ஒப்பந்தம். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தலைவராக இலங்கை வீரர் ஒருவர் செயல்படுவார்.
அதாவது பேரன் ராஜபக்சே அரசுடன் வர்த்தகம் புரிவார், தாத்தா ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க நம் நாட்டு அரசுடன் நாடகம் போடுவார்.
கொல்லும்போது நீங்க எல்லாம் எங்கயா போனீங்க? இல்லே முத்துக்குமார் தீக்குளிக்கும்போது எங்கே போனீர்கள்? டீ குடிக்கவா? இல்லை நீங்கள் நடத்திய மூன்றுமணிநேர உண்ணாவிரதத்தை மக்கள் மறந்துவிடுவார்களா? இல்லை அப்பொழுது எழுந்த மாணவர் போராட்டத்தை அடக்க அவர்கள் குடும்பம், உறவினர், சிறுவர்களை எல்லாம் கைது செய்து போராட்டத்தை அடக்கியதை மறந்துவிடுவார்களா?
இந்தப் பிரச்சினை இன்று நேற்றல்ல; தலைமுறை தலைமுறையாய்த் தொடர்கிறது.
2009-ல் நடந்த இறுதிப்போர் பற்றி விசாரணை நடத்த 2013-ல் இவ்வளவு போராடிக்கொண்டிருக்கிறோம். இனி அதை ஐ.நாவில் கொண்டுவந்து அதை இலங்கை தானே தன் தவறுகளை விசாரித்து அறிக்கை சமர்ப்பித்து...............................................................(அதாவது கற்பழித்தவனே அதை விசாரித்து, அவனே தீர்ப்பு சொல்ல வேண்டும் - அதான் ஐ.நா.)
இதெல்லாம் இன்னும் நடக்குமென நம்பிக்கொண்டிருந்தால் ஒரு கொசுறு தகவல்.
திபெத்துக்காக கடந்த 40 வருடங்களாக நிறைவேற்றப்படாத தீர்மானங்களே இல்லை, ஆனால் இன்னும் ஒரு ஆணியும் புடுங்கப்படவில்லை. ஒரு நோபல் பரிசைவேறு கொடுத்துவிட்டார்கள்.
இப்பொழுது புரிகிறதா பிரபாகரன் ஏன் ஆயுதத்தை நம்பினார் என்று?
Tweet |
இலங்கை தமிழர் பிரச்சனை இருந்தால்தான் இங்குள்ள பல அரசியல் கட்சிகளுக்கும் வேலை! இல்லாவிட்டால் ஒன்றும் இல்லை! ஆகையால் இந்த பிரட்சனை தொடர வேண்டும் என்றுதான் அனைத்து கட்சிகளும் விரும்புகிறார்கள்! முடிந்து விட்டால் இவர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். ஆகையால் இலங்கை பிரச்சனைக்கு தீர்வு என்பது இந்த ஜன்மத்தில் இல்லை!!!
ReplyDelete// இப்பொழுது புரிகிறதா பிரபாகரன் ஏன் ஆயுதத்தை நம்பினார் என்று? //
ReplyDeleteதவறை களைய தவறு செய்பவனின் வாழ்க்கை எப்படி முடிந்தது.
இப்பொழுது புரிகிறதா பிரபாகரன் எப்படி கொல்லப்பட்டார் என்று? பிரபாகரனை விட்டுவிட்டு காந்தியை உதாரணமாக எடுத்துக் கொள்ளவும்...
காந்தி எப்பூடி கொல்லப்பட்டார்னு தெரியாதா நோக்கு? :-(
Delete