துபாயில் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு
படிக்கும் மாணவன் ஒருவன் சரியாக படிக்கவில்லை, அவனது கல்வியை ஊக்குவிக்க பள்ளி எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் மாணவனின்
தந்தை. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாணவன் கல்வியை மேம்படுத்தத் தவறியதற்காக Dhs 77,500 (ரூ.11 லட்சம்) செலுத்த
அந்தப் பள்ளிக்கு உத்தரவிட்டது.
மாணவன் தனியார் பள்ளியின் முதல் வகுப்பில் சரியாக படிக்காதபோதும், இரண்டாம் நிலைக்குப் பாஸ் செய்தனர். இரண்டாம் நிலையிலும் சரியாக படிக்காததால் மாணவனின் தந்தை இதுபற்றி பள்ளியிடம் கேட்டால் பதில் ஏதுமில்லை. அவனின் செயல்திறனை மேம்படுத்த பள்ளி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கொதித்துப்போன தந்தை துபாய் நீதிமன்றத்தில் பள்ளியின்மீது வழக்கு தொடர்ந்தார்.
மாணவன் தனியார் பள்ளியின் முதல் வகுப்பில் சரியாக படிக்காதபோதும், இரண்டாம் நிலைக்குப் பாஸ் செய்தனர். இரண்டாம் நிலையிலும் சரியாக படிக்காததால் மாணவனின் தந்தை இதுபற்றி பள்ளியிடம் கேட்டால் பதில் ஏதுமில்லை. அவனின் செயல்திறனை மேம்படுத்த பள்ளி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கொதித்துப்போன தந்தை துபாய் நீதிமன்றத்தில் பள்ளியின்மீது வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை எடுத்துக்கொண்ட நீதிமன்றம் ஒரு கல்வி நிபுணரை நியமித்து
இதுபற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு கேட்டுக்கொண்டது. நிபுணர் மேற்சொன்ன புகாரை ஆராய்ந்து அது
உண்மைதான் என்று அறிக்கை சர்ப்பித்தார்.
“செயல்திறன் குறைவாக இருந்தும் மேல்நிலைக்கு ஊக்குவித்தது,
மாணவனின் செயல்திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஆகிய குற்றங்களுக்காக
பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு இழப்பீடாக மொத்த பள்ளிக்கட்டணம் Dhs 40,000 மற்றும் இழப்பீட்டுத் தொகை Dhs 37,500-யும் சேர்த்து
மொத்தமாய்ச் செலுத்துமாறு உத்தரவிட்டது.
வெறும் வியாபாரமாகிவிட்ட கல்வியை மேம்படுத்த
இதுபோன்ற நடவடிக்கை தேவை.
நம்ம ஊர் கல்வியை நினைச்சால் – அய்யோ! அய்யோ! 39-ல் பாதி எவ்வளவென்று தெரியாமல் எட்டாம் வகுப்பு படிப்போர் ஏராளம். இதுக்கெல்லாம் கேஸ் போட்டா 2365-ல தீர்ப்பு வந்து, இழப்பீடு வழங்க அந்த பள்ளி இருக்காது, அப்படியே இருந்தாலும் அதை வாங்க மட்டும் 300 வருஷம் வாழவா முடியும்? ஜெய் ஹிந்த்!
Tweet |
ஹாஹஹா சரியாய் சொன்னிங்க
ReplyDeleteஇதே நம்ம ஊரா இருந்தா, அந்த அப்பனை ஆட்டோ அனுப்பி தூக்கியாற சொல்லி.. பொளந்து , அத்தைவிட டபுளா காசு புடுங்கி கிட்டு அனுப்பி இருக்கும் அந்த ஸ்கூல் நிர்வாகம்..
ReplyDeleteஅவ்வ்வ்வ்...
Deleteஹா....ஹா....முடிவில் சொன்னது உண்மை...
ReplyDeleteபணம் அரசுக்குத்தானே, மாணவனுக்கில்லையே? தலைப்பைப் பார்த்தால் ஏதோ மாணவனுக்குப் பணம் கிடைத்த மாதிரி தொனிக்கிறது.
ReplyDeleteபணம் பெற்றோர்களுக்குத்தான் திருப்பித்தர உத்தரவிட்டனர்.
Delete