தாண்டவம் சினிமா விமர்சனம் – விக்ரம், அனுஷ்கா மற்றும் பலர்.


  முதலில் தமிழ் இயக்குனர்கள், நடிகர்கள் மற்ற கலைஞர்கள் எல்லோருக்கும் ஒருமுறை சுத்திப்போட வேண்டும். இப்போதெல்லாம் ஒவ்வொரு படமும் சிறப்பாகக்கொடுத்து மோசம் என்று சொல்வதே அரிதாகிவிட்டது.

  தாண்டவம் – முதல்பாதி விறுவிறுப்பு+கலகலப்பு. இரண்டாவது பாதி ஓகே. மொத்தத்தில் கண்டிப்பாக ஒருமுறை பார்க்கவேண்டிய படம்.


கதை:

  சர்ச்சில் பியானோ வாசிக்கும் கண்பார்வையற்ற விக்ரம், மற்ற நேரங்களில் எங்கோ போய் கொலை செய்துவிட்டு வருகிறார். அவர் போகும்போதெல்லாம் சந்தானம் டாக்ஸியில் போவதும் போலீஸ் சந்தானத்தை பிடித்து விசாரிப்பதும், சந்தானம் போலீஸ் ஆபீசர் நாசரை கலாய்ப்பதும் செம! மிஸ்.இங்கிலாந்து ஆக முயற்சிக்கும் எமி ஜாக்சன் சர்ச் வருகிறார். விக்ரமை காதலிக்கிறார். நான்காவது கொலையை செய்ய முயற்சிக்கும்போது போலீஸ் வந்துவிடுகிறது. – இடைவேளை!



  பிளாஷ்பேக் - இந்தியாவின் ராணுவ ரகசியங்கள் அடங்கிய மாப்(வரைபடத்தாள்) ஒன்று பார்சலில் லண்டன் போகிறது. அதை வைத்து நாலே மணிநேரத்தில் குண்டு வெடிக்க வைக்க முடியுமென்பதால் அதைத்தேடி ரா ஏஜன்ட் சிவா (விக்ரம்) லண்டன் போகிறார். ஆனால் போன இடத்தில் விக்ரமின் நண்பரே (ரா ஏஜன்ட்) பணத்திற்காக வரைபடத்தாளை தீவிரவாதிகள் கைக்கு கொடுத்துவிடுகிறார். குண்டு வெடித்து விக்ரம் மனைவி அனுஷ்காவும், நண்பர் கென்னியும் இறந்துவிடுகிறார்கள். விக்ரமிற்கு கண்பார்வை போய்விடுகிறது. கண்பார்வை போனபின்பு இவர்களை எப்படி பலி வாங்குகிறார் என்பதே கதை.


சிங்கள மொழி முழுவதும் பரவியிருக்கும் தமிழ்

  சிங்கள மொழியின் மூலம் சமஸ்கிருதம் என்றாலும்கூட வடக்கு/கிழக்கு இலங்கையை ஆண்டவர்கள் தமிழ் மன்னர்கள் என்பதாலும் 2000 ஆண்டுகளாக இலங்கைத் தீவின் அரசாட்சி மொழிகளாக இரண்டும் இருப்பதாலும், பல வருடங்கள் பாண்டிய/சோழ பேரரசின் கீழ் இருந்ததாலும் பல தமிழ் வார்த்தைகள் அப்படியே சிங்களத்தில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது தமிழ் சொல்லின் கடைசி எழுத்தில் அ(யா) சேர்த்தால்போதும் - அது சிங்களம்.

தமிழ் - சிங்களம்

அம்மா- அம்மே (மலையாள அம்மேதான்!)
அக்கா - அக்கே
மச்சான் ௦- மஸ்சினா
அண்ணா- ஐயா
அப்பா - தாத்தா
ஆச்சி - ஆச்சி
மாமா - மாமா
இலக்கம் - இலக்கம
அங்கம் - அங்க
அங்கூரம் - அங்குர
அங்கம்/பிரிவு - அங்ஸய
வீதி -வீதி
இரட்டை - இரட்ட
வாகனம் - வாகனய
உதாரணம் - உதாரணய
முதலாளி - முதலாளிய
குடை - குடைய-
கடை -கடைய
அப்பம் - ஆப்ப
இடியப்பம் - இதியாப்ப
வடை - வடே
தினம் - தினய
காலம் - காலய
வருடம் - வர்ஸய
சரீரம் - சரீரய
இடம் - இடம
மூலஸ்தானம் - மூலஸ்தானய
ஸ்தானம் -ஸ்தானய
ஆகாரம் - ஆகாரய
நீர்/ஜலம் - ஜலய
சக்தி - சக்திய
உச்சம் - /உஸ
விசேடம் - விஷேச
கல் - கல்


காதலர் தினம் தமிழர் விழா? 2500 ஆண்டுகளுக்கு முன்பே காதல் விழா கொண்டாடிய தமிழர்கள்!

காதலர் தினம் என்றால் மேற்கத்திய திருவிழா என்றுதானே இதுவரை நினைத்துக்கொண்டிருந்தோம்? ஆனால் உண்மை அதுவல்ல. காதலர் தினம் முதன்முதலில் பண்டைய  தமிழகத்தில் கொண்டாடப்பட்ட ஒரு திருவிழா.



ரோமில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது கி.பி 3ம் நூற்றாண்டில் இருந்துதான். ஆனால் பண்டைத் தமிழகத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே (கி.மு 5ம் நூற்றாண்டுக்கு முன்பே) இந்திர விழா (காதல் விழா, காமன் விழா) என்ற பெயர்களில் காதலர் தினம் கொண்டாடப்பட்டிருந்திருக்கிறது. பூம்புகாருக்கு வர்த்தகம் செய்ய வந்த ரோமானியர்கள் அதை ரோமில் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.


தமிழர் - ரோமானியர் வர்த்தகம்:

ரோம் மன்னர் அகஸ்டஸ் காலத்தில் கி.மு 1-ம் நூற்றாண்டில் ரோமிற்கும், பண்டைத் தமிழகத்திற்கும் இடையான வர்த்தகம் துவங்கியது. லத்தீன் மொழியில் சேர மன்னர் (முசிறி துறைமுகம்) பாண்டிய மன்னர் பற்றிய குறிப்புகள் உள்ளன.

பைபிள் 10:22 : சாலமன் மன்னனின் வர்த்தகக் கப்பல்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள், வெள்ளி, யானைத்தந்தம், மயில்களை ஏற்றிக்கொண்டு திரும்பியிருக்கின்றன. பண்டைய இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே மயில்களும் யானைத்தந்தமும் இருந்தது.

ரோம் - தமிழர் வர்த்தகம்


விடுமுறை தின நல்வாழ்த்துக்கள்

  அனைவருக்கும் இன்று விடுமுறை தின நல்வாழ்த்துக்கள்.


  சனி ஞாயிறுகூடத்தான் விடுமுறை வருகிறது. அதற்கெல்லாம் வாழ்த்து சொல்வதில்லையே ஏன்?

நாளை பணி தின நல்வாழ்த்துக்கள்!

கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மதி வேண்டாமா?


சுந்தர பாண்டியன் - BLOCKBUSTER சினிமா விமர்சனம்

 சுவாரஸ்யம் சுவாரஸ்யம் சுவாரஸ்யம்...

 படம் தொடக்கம் முதலே நம்மைத் தொற்றும் சுவாரஸ்யம் கிளைமாக்ஸ்வரை விலகாமல் கொடுத்த இயக்குனருக்கு ஒரு ஓ! இடைவேளை வரைக்கும் ஒரே காமெடி, கலாய்த்தல், காதல். அதன்பின் இறுதிவரை ட்விஸ்ட், ட்விஸ்ட், ட்விஸ்ட்.

 சூரி. வடிவேலு இல்லாத குறையை போக்குகிறார். முதல்பாதி முழுதும் அவரது நக்கல்களில் சிரிக்காத ஆளே இல்லை, காட்சிக்கு காட்சி கைதட்டல். சில மாதங்களுக்கு ஊரெல்லாம் இவர் டையலாக் முனுமுனுக்கும். இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை நடிகர் விருது கிடைக்கலாம் :-)

 சசிக்குமார் - வழக்கம்போல செம. ஒரு தயாரிப்பாளரின் வெற்றி என்பது தேர்வு செய்யும் கதையிலேயே உள்ளது என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார்.

 லட்சுமி மேனன் - கண்ணு மீனு மாதிரி. முறைத்தல், குறும்புத்தனம், நடிப்பு அடடா தமிழ் சினிமாவுக்கு நடிக்கிற ஒரு நடிகை கிடைச்சிட்டாங்க :-)


நடிப்பு: சசிகுமார்லட்சுமி மேனன்சூரி
தயாரிப்பு: சசிகுமார்
இயக்கம்: பிரபாகரன்


காமத்துப்பால்


உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.


சந்தானம் உரை:

மச்சா உனக்கு குவாட்டர் அடிச்சாதான் போதை, ஆனா நீ மூடியை மோந்து பார்த்தாலே போதையாய்டுவ அது வேற விஷயம். ஆனா என் ஆளு அம்முக்குட்டி, செல்லக்குட்டி, ஜாங்கிரிய நினைச்சாலே போதை;  அவளைப் பார்த்தாலே போதை! ம்ம்மா!











உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.
சாலமன் பாப்பையா உரை: 

உயிர் உடலை பிரியுமாய்யா? உடல்தான் உயிர பிரியுமாய்யா? அப்படி பிரிஞ்சுதான் இருக்க முடியுமாய்யா? முடியாது. அந்த மாதிரிதான் என் காதலியும், அவளை பிரிஞ்சு என்னால இருக்க முடியாது.


2500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவுடன் வாணிபம் செய்த தமிழர்கள்!

  இந்தக்கட்டுரையை படிப்பதற்கு முன் நம் பண்டைக்கால கடற்கரை நகரம் பூம்புகாரையும் ஈஸ்டர் தீவு பற்றியும், ஜப்பான் மொழியின் மூலம் பற்றியும் அபோகாலிப்டோ படத்தையும், நினைவுகொள்ளவும். 
அமெரிக்காவின் மாயன் நாகரீகத்தில் இருந்த தமிழர் விளையாட்டு (தாயம்)

  தாயம் பண்டைத்தமிழர்களின் ஒரு விளையாட்டு. தோன்றியதும் நம்மிடமிருந்துதான். அப்படியென்றால் இந்த விளையாட்டு மாயன் மக்களுக்கு எப்படித் தெரியும்?

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :

  உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு. இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள். தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்துதமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசுகின்றன. வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் Mayan தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது அபத்தம்.

  Olmec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 14, 15 ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் Atlantic Ocean-யை குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று Columbus நம்பினார். அவருடைய நம்பிக்கையின்படியே அவர் Atlantic Ocean-யை கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் Columbus தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மக்கள்இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம். இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள். Columbus-க்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரை பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் America என்று அழைக்கப்படுகிறது.

  இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியெரினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உருதிபடுத்தியிருக்கிறார்கள். அந்த ஒரு விசயத்தைப் பற்றிதான் நம்முடைய முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாமல் போயிற்று. வரலாற்று அறிவுக்கும் இவர்களுக்கும்தான் ஏழாம் பொறுத்தமாயிற்றே! வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்திய அந்த விசயம் செவ்விந்தியர்களுக்கும்தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான். இதை படிப்பவர்களுக்குஇது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம்வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம்உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.

கடலில் மூழ்கிய தமிழர்களின் வாணிகக் கப்பல்:

  நல்லவேளை இந்த உண்மையை கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். நம்மவர்களுக்கு Made in Foreign என்றாலே ஒரு கிலுகிலுப்புதானே! தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையை கண்டிருந்தால் அவரை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்கு வாழும் உதாரணம் தமிழனே.





அரிய புகைப்படங்கள் - திருக்குறள் ஓலைச்சுவடி, பழைய சென்னை, கோவை, திருச்சி, திரிகோணமலை, நெல்லை

  என் சிறுவயது முதல் (இப்ப ரொம்ப பெரிய வயசுன்னு நினைப்பு) தேடிய புகைப்படம் – திருக்குறளின் ஓலைச்சுவடி. இன்னும் பல நகரங்களின் முந்தைய தோற்றத்தின் பழைய புகைப்படங்கள் மன்னிக்கவும் பொக்கிஷங்கள். படங்களின் மீது கிளிக் செய்து பெரிதாய்ப் பார்க்கலாம்.
திருக்குறள் ஓலைச்சுவடி - Tirukkural photo
காமராஜர், ஜெயலலிதா மற்றும் பலர் - Kamraj & Jayalalitha

கோயம்பத்தூர் ரயில்வே - Coimbatore railway 1903


ஜப்பான் மொழியின் மூலம் தமிழ் மொழி?

  இயற்கையும் சரி, வரலாறும் சரி என்றுமே நமக்கு புரியாத புதிராகவே இருக்கும். சில வரலாற்று நிகழ்வுகள் நமக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தரக்கூடியவை. யாருமே இதுதான் நடந்தது என உறுதிபடக்கூற முடியாது. ஆனால் ஆராய்ச்சி மூலம் கிடைக்கும் பதில்கள் என்றுமே சுவாரஸ்யத்துடன் ஆவலையும் கொடுப்பவை. அதில் ஒன்றுதான் ஜப்பான் மொழியின் மூலம் எந்த மொழி? தமிழா?

  ஜப்பான் மொழியின் எழுத்துமுறை சீன மொழியை அடிப்படையாகக் கொண்டது. அவ்வாறு சீன எழுத்துமுறை கலப்பதற்கு முன்பாகவே (கி.மு.500 - கி.பி 300களில்) 7000 கிலோமீட்டர் பயணம் செய்து ஜப்பானில் அரிசி விளைவிக்கும் முறையைக் கற்றுக்கொடுக்க சென்ற தமிழர்கள் மொழியையும் கற்றுக்கொடுத்திருக்க வேண்டும் அல்லது ஜப்பானிய மொழி தமிழிலிருந்து சொற்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பது ஓனோ அவர்களின் வாதம். அரிசியை உலகிற்கு (கிழக்கு நாடுகளுக்கு) விளைவிக்க கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள். இதில் எவ்வித ஐயமும் கிடையாது. 

  ஜப்பானிய மொழியானது கி.மு.200க்கு முந்திய காலத்தில் ஆசியாவிலிருந்தோ அல்லது அருகிலுள்ள பசிபிக் தீவுகளிலிருந்து வந்தவர்களிடமிருந்தோதான் தோன்றியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. (ஆதாரம் - விக்கிபீடியா)   


திருமணத்திற்கு பெண் பார்க்கும் படலம்:

  முந்திய காலங்களில் ஜப்பானில் பெண் பார்க்க மூன்றுநாட்கள் பெண்ணின் வீட்டிற்கு செல்வர். மூன்றாவது நாள் பெண்வீட்டார் அரிசி இனிப்புப்பண்டம் (SWEET CAKE) கொடுத்தால் திருமணத்திற்கு சம்மதம் என்று பொருள். இது தமிழில் பழங்காலம் மட்டுமல்ல இன்றும்கூட இருக்கிறது. என்ன பெண் பார்க்கும் நாட்கள் ஒன்றாக சுருங்கிவிட்டது. 

  ஜப்பானிய-தமிழ் மொழியைப்பற்றி ஆராய்ந்த ஓனோ அவர்களைப்பற்றி அறிந்தால் மட்டுமே இதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். தமிழ் ஓசை களஞ்சியத்திலிருந்து அவர் வரலாறு (18.01.2009)

தமிழ் - ஜப்பானிய மொழி பற்றி ஆராய்ந்த அறிஞர் சுசுமு ஓனோ:

  டோக்கியோவில் 23.08.1919 இல் பிறந்த சுசுமு ஓனோ அவர்கள் பழங்கால ஜப்பானிய மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக்கொணர்ந்தவர். 1943ம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 1944ல் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியத் தொடங்கினார். 1952 ஆம் ஆண்டு காக்சுயின் பலைகலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராகப் பணியில் உயர்ந்தார்.அந்தப் பணியுடன் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் 1953 இல் விரிவுரை நிகழ்த்தியுள்ளார். 1960 இல் காக்சுயின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியுயர்வு பெற்றுத் தொடர்ந்து அங்குப் பணிபுரிந்தார்.

  பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு பழஞ்சுவடியை ஆராய்ந்து இவர் வெளியிட்டதைச்  ஜப்பானிய அறிஞர்கள் போற்றி இவருக்கு முனைவர் பட்டம் வழங்கினர். இந்த ஆய்வு 1950 இல் ஓர் ஆராய்ச்சி இதழில் வெளிவந்துள்ளதாக அறிஞர் பொற்கோ குறிப்பிடுவார். கியோட்டோ பல்கலைக்கழகம் வழியாக இவர் முனைவர் பட்டம் பெற்றவர்(1952). சுசுமு ஓனோ பழஞ்சுவடிகளை ஆராய்வதில் பேரறிவு பெற்றவர். சொல்லாராய்ச்சி, அகராதிகளில் ஈடுபாடு உடையவர்.இவர் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட ஜப்பானிய அகராதியின் படிகள் ஜப்பானில் பல்லாயிரக்கணக்கில் விற்கப்பட்டன.1981 இல் இவர் வேறொரு அறிஞருடன் இணைந்து உருவாக்கிய ஜப்பானிய ஒருபொருட் பன்மொழி அகராதி ஓர் ஆண்டில் இலட்சம் படிகள் விற்றனவாம்.

  "ஜப்பானிய மொழியின் தோற்றம்" என்ற ஒரு நூலை உருவாக்கி 1957 இல் வெளியிட்டவர். இந்த நூல் ஐந்து இலட்சம் படிகள் விற்றனவாம்.இந்த நூலின் வருகைக்குப் பிறகு ஜப்பான்மொழி பற்றி அறியும் வேட்கை ஜப்பானியர்களுக்கு உருவானது.

  ஓனோ அவர்கள் பதினொரு ஆய்வு நூல்களை வெளியிட்டவர். ஏழு நூல்களைப் பிற அறிஞர்களுடன் இணைந்து பதிப்பித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். பேராசிரியர் சிங்கிச்சி காசிமொத்தோ அவர்களின் மேல் சுசுமு ஓனோ அவர்களுக்கு நல்ல ஈடுபாடு உண்டு.அவர் வழியாகவே ஜப்பானிய மொழியாராய்ச்சியில் ஓனோ அவர்கள் ஈடுபட்டார்.ஆய்வு ஈடுபாடும் மொழிப்புலமையும் கொண்ட ஓனோ அவர்கள் மொழிவரலாற்று ஆய்வு,இலக்கண ஆய்வு,தொன்மையான ஜப்பானிய இலக்கிய ஆய்வுகளில் நல்ல ஈடுபாடு உடையவர்.


  1957ல் அவர் ஜப்பானிய மொழியின் மூலத்தை ஆராயத் தொடங்கினார். அவர் ஜப்பானிய மொழியைக் கொரியன் அய்னு மற்றும் அசுடுரேனேசியன் மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். அந்த மொழிகளுடன் எந்த மரபு சார் தொடர்புகளும் அவரால் வெளிக்கொணர முடியவில்லை. இப்போது இவர் கவனம் திராவிட மெழிகளின் மீது பதிந்தது. பேராசிரியர் இமென்யு மற்றும் பொன். கோதண்டராமன் இவர்களின் தூண்டுதலால் இவர் ஜப்பான்-தமிழ் மொழியை ஆராயத் தொடங்கினார்.


ஜோக்ஸ் - தமிழ் மன்னர்கள் செய்த மெகா காமெடி.



நீண்ட ஆயுள் தரும் நெல்லிக்கனியை தான் உண்ணாமல் ஔவைக்கு கொடுத்தான் அதியமான் நெடுமான் அஞ்சி.



பின்னே அவனுக்கு இருந்தது ஒரே ஒரு மனைவி. இவன் மட்டும் நெடுநாள் தனியா இருந்து என்னய்யா பிரயோஜனம்? அதனால அந்த நெல்லிக்கனியை பிரம்மச்சாரி ஒளவைக்கு கொடுத்துட்டான். என்னமா யோசிச்சிருக்கான்யா? அப்பவே பிளான் பண்ணி பண்ணியிருக்கான்.






குளிர்காலத்தில் அகவிய(VOICE) மயிலுக்குப் போர்வை அளித்தான் வள்ளல் பேகன் மன்னன்.

அவன் ஆண்ட பழனிமலைல போர்வை போர்த்திட்டு மாறுவேடத்தில மயில் திருடப்போனபோது, அது சத்தம் போட்டிருக்குது. சத்தம் போடாம இருக்க அதுமேல போர்வையை போட்டிருக்கார் (நம்மூர்ல கோழி திருடுவோமில்லையா அந்தமாதிரி). ஆனா சத்தம் கேட்டுவந்த வீட்டுக்காரங்க "மயிலுக்கு போர்வை கொடுத்தாரு...... மன்னர் மயிலுக்கு போர்வை கொடுத்தாரு"ன்னு வள்ளலாகிட்டாங்க.


மனிதன் அழிந்துவிடுவானா? எல்லா நாகரீகங்களும் அழிந்துபோகக் காரணமென்ன?

இந்தக்கேள்விக்கான விடை, கீழுள்ள கதையைப் படியுங்கள் புரியும்!

ஈஸ்டர் தீவின் மர்மங்கள்:

   ஈஸ்டர் தீவு, தென் அமெரிக்கா நாட்டிற்கு அருகே உள்ள குட்டி தீவு. 17ஆம் நாற்றாண்டில் இந்த தீவு ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தீவு 37 அடி உயர மிகப் பிரம்மாண்டமான சிலைகளுக்கு பெயர் போனது. அத்தீவு ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. தற்பொழுது அத்தீவிலே ஒரு மரம் கூட கிடையாது, ஒரே வகையான புல் வகை மட்டுமே உள்ளது. மொத்தம் 60ற்கும்மேற்பட்ட 200 டன் எடை கொண்ட பிரம்மாண்ட சிலைகள் இருக்கின்றன. இத்தீவுக் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில், இந்த சிலைகள் எல்லாம் எவ்வாறு வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன என்பது புரியாத புதிராக இருந்ததது.



  இத்தீவில் கி.பி. 200 ஆண்டில் 2000 மக்கள் வசித்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்றோ வெறும் இரு நூறுக்கும் குறைவான மக்களே வசிக்கின்றனர். 2000 மக்கள் கி.பி. 200 ஆண்டிலே வசித்தால் இப்பொழுதுஅதற்கும் அதிகமாக மக்கள் வசிக்க வேண்டும் அல்லவா? மக்கள் தொகை குறைவதற்கான காரணம் என்ன? மற்றும் எவ்வாறு இந்த சிலைகளை தொழில்நுட்பமோ கொண்டு சென்றனர்? என்ற கேள்விகள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தின.


11500 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நகரம் - கண்டுகொள்ளாத அரசு

  பூம்புகார் - காவேரிப் பூம்பட்டினம். பண்டைக்கால சோழர்களின் தலைநகரம். இந்த நகரம் பற்றி தமிழ் பாடம் படிக்கும்போது கடலால் அழிந்துபோன நகரம் என்று மட்டும்சொல்லி முடித்துவிடுவார்கள். இந்த நகரம் எப்படி இருந்தது, ஏன் அழிந்தது, மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்ற உண்மைகளை அறிந்தால் உலக நாகரீங்களுக்கெல்லாம், ஏன் உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடி நாம்தான் என்ற உண்மை வெளிப்படும்.


  சோழர்களின் தலைநகமான பூம்புகார் தமிழகத்தின் தற்போதைய நாகை அருகே 11500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தே இந்நகரம் இருந்ததாக ஆய்வில் தெரியவருகிறது. மிகப்பெரிய துறைமுகமாகவும், உலக வர்த்தகத்திற்கான சந்தையாகவும் இருந்திருகிறது. சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, மணிமேகலை உள்ளிட்ட நூல்களில் இந்நகரம் பற்றி போற்றுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் கடல்கோளால் (சுனாமி) இந்நகரம் அழிந்துபோனது.