Blogger Widgets

11500 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நகரம் - கண்டுகொள்ளாத அரசு

  பூம்புகார் - காவேரிப் பூம்பட்டினம். பண்டைக்கால சோழர்களின் தலைநகரம். இந்த நகரம் பற்றி தமிழ் பாடம் படிக்கும்போது கடலால் அழிந்துபோன நகரம் என்று மட்டும்சொல்லி முடித்துவிடுவார்கள். இந்த நகரம் எப்படி இருந்தது, ஏன் அழிந்தது, மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்ற உண்மைகளை அறிந்தால் உலக நாகரீங்களுக்கெல்லாம், ஏன் உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடி நாம்தான் என்ற உண்மை வெளிப்படும்.


  சோழர்களின் தலைநகமான பூம்புகார் தமிழகத்தின் தற்போதைய நாகை அருகே 11500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தே இந்நகரம் இருந்ததாக ஆய்வில் தெரியவருகிறது. மிகப்பெரிய துறைமுகமாகவும், உலக வர்த்தகத்திற்கான சந்தையாகவும் இருந்திருகிறது. சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, மணிமேகலை உள்ளிட்ட நூல்களில் இந்நகரம் பற்றி போற்றுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் கடல்கோளால் (சுனாமி) இந்நகரம் அழிந்துபோனது.

  இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சி நிலையம் பணப்பற்றாக்குறையால் இந்நகரம் பற்றி ஆராய்வதை நிறுத்திவிட்டது. திட்டமிட்டு நிறுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை. :-)  பூம்புகார் நகரத்தையும், குஜராத்தின் கடற்கரையில் (மும்பைக்கு மேற்கே) இருந்த துவாரக நகரத்தையும் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்த இங்கிலாந்துக்காரர் கிரகாம் ஹன்காக் (Graham Hancock) ஒரு வீடியோவை (Underworld: Flooded Kingdoms Of The Ice Age) வெளியிட்டார். அதில் கடலுக்கடியில் இந்நகரம் இருந்த இடத்தில் இன்னும் கற்களாலான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச்சுவர், பாத்திரங்கள், குதிரைவடிவ பொம்மைகள், காணப்படுகின்றன. இந்த ஆராய்ச்சி முடிவுகளெல்லாம் வெளியானது 2002ல். இன்றுவரை அதுபற்றியெல்லாம் யாரும் கவலைப்படவில்லை. 

  தமிழர்கள் நாம் நம்மைப்பற்றி என்ன ஆராய்ச்சி செய்துள்ளோம்? இனியாவது தமிழக அரசு இந்த ஆராய்ச்சியை முன்னெடுக்குமா?

                               

  இந்த வீடியோவில் 32-வது நிமிடத்திலிருந்து பூம்புகார் பற்றிய குறிப்புகள் மற்றும் ஆய்வுகள்.


15 COMMENTS:

 1. அரசுக்கு வழக்குகளை சந்திக்கவே நேரம் போதவில்லை...

  வரலாற்று சின்னங்களை கண்டுக்கொள்ள அவர்களுக்கு ஏது நேரம்...


  சில இடங்களில் மலையையே காணவில்லையாம்...

  ReplyDelete
 2. நல்ல பதிவு, அண்ணன் கவிதை வீதி சொன்னதுபோல் அரசிற்கு இதற்க்கெல்லாம் எங்கே நேரமிருக்கிறது!

  வீடியோ முழுமையாக பார்க்க வேண்டும் வாய்ப்பு கிடைக்கும் நேரம்! பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 3. எத்தனை உண்மைகளை மறைத்து வைத்திருக்கிறது இந்த ஆழ்மண்.நினைத்தால் மிகவும் சந்தோஷம் உங்கள் தேடலுக்குப் பாராட்டுக்கள் நிலவன்பன் !

  ReplyDelete
 4. பகிர்வுக்கு நன்றி...அனேக விஷயங்கள் புதைந்து கிடக்கு. ஐஸ் ஏஜின் இறுதி கட்டத்தில் கடலினுள் மூழ்கிப்போனவை. தமிழனின் பல வரலாறு இதனுள் பொதிந்து கிடக்கிறது. இதே மற்ற நாடுகளாக இருந்தால் இன்னேறம் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்திருப்பார்கள். டைட்டானிக் உண்மைகள் எப்படி வெளிவந்தன...இது தான் இந்தியா

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொன்ன உடனே ஒரு ஜோக் ஞாபகத்திற்கு வருது,

   இங்கிலாந்துக்காரர்களுக்கு நாக்கை எதற்கு உபயோகப்படுத்த வேண்டுமேன்று தெரியாது. :-)

   Delete
 5. அரிய தகவல்... கண்ணொளிக்கு நன்றி...

  ReplyDelete
 6. nanparukku nandri, thamizhin perumaiyai potruvom

  ReplyDelete
 7. Please read his book - lots of evidence and Tamilians might have been the first Indians.

  ReplyDelete
 8. எல்லாவற்றிலும் அரசியல்.

  ReplyDelete
 9. நேற்று (A.C.I) தொல்லியல் துறை பற்றி இனையத்தில் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் தெரிந்தது 1959 களிலிருந்தே இந்தியா முழுவதும் பல இடங்களில் நிலங்கள் ஆராய்ச்சிக்காக கையகப்படுத்தபடிகிறது என்று சமீபத்தில் கிரானைட் ஊழலில் சிக்கியதும் இப்படிதான். பழமையை ஆராய்ச்சி பன்ன இவர்களுக்கு நேரமெங்கே இருக்கிறது.

  ReplyDelete
 10. Naan arintheratha padheivukal arumai thanks for good collection super information

  ReplyDelete