Blogger Widgets

விவசாயி - என்று மடியும் எங்கள் சோகம்?

பருத்தியை விதைத்துவிட்டு
பருவமழைக்குக் காத்திருந்தோம்
பருவமதுவும் பொய்த்துப்போனதால்
சருகானது பயிரெல்லாம்!

பேருழைப்பு வீணாகி
திறமைகளோ சருகாகி
பேரிழப்பு வந்ததனால்
உருக்குலைந்து போனோம்!

இறந்துவிட்ட பயிர்களால்
எரியாமல்போனது விறகுகளும்,
மறக்காத பசியினால்
மறந்தேபோனது உலகமனைத்தும்!


உறுதிசெய்த பத்திரத்தால்
உண்டான கடனோ ஏராளம்,
வறுமையே வாழ்க்கையானதால்
வருங்காலமோ கேள்விக்குறி?

தெரியாத வழியினால்
வருத்தமோ பெருகியபோது,
இறுதியாய் வலிகுறைக்ககையில்
ஒருகுவளை பாலிடால்!

                                                - நிலவன்பன் (2002-ல் எழுதியது) 

  வருடந்தோறும் வறுமை, கடன் போன்ற பிரச்சினைகளால் 15,000 மேற்பட்ட விவசாயிகள் (இந்தியாவில் மட்டும்) தற்கொலை செய்துகொள்கிறார்கள்! விவசாயிகளின் நாடு என நாம் பீத்திக் கொள்கிறோம்! 


  உணவு கொடுப்பவனுக்குப் பணமில்லை! சினிமா, கிரிக்கெட் என பொழுதுபோக்காளர்களின் சம்பளமோ கோடிகளில்! இந்த லட்சணத்தில் அவர்களுக்குப் பிரதமர் விருந்து வேறு!

  ஒரு நாள் விவசாயிகளே அழிந்துபோய் அவர்களின் பிணங்களைத் தின்னும் நேரம்கூட வரலாம்! எதிர்பார்த்திருக்கவும்  - விவசாயிகளில் ஒருவன்!


11 COMMENTS:

  1. enge pogirom naam... Vivasayam konjam konjamaga alinthu varugirahu.. vilai nilangal anaithum veetu manaikalai....... mannai nesikka ethanai perukku therikitrathu?

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலானோருக்கு இறக்கும்போதுதான் தெரிகிறது, நேசம் என்றால் என்ன? - அதை வாழ்க்கையில் பார்க்கவே இல்லை; ஏன், வாழவே இல்லை! என்று.

      Delete
  2. உழவினார் கை மடங்கின்......!? அப்போதுதான் புரியும் அரசுக்கு! சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா! விவசாயிகள் வங்கிகளிடமிருந்து கடன்பெறுதல் என்பது இப்போதெல்லாம் சாத்தியமே இல்லை. ஆனால் கணினி முன் உட்காருபவர்களுக்கு கிரடிட் கார்ட், டெபிட் கார்ட், பர்சனல் லோன், ஹோம்லோன் இன்னும் எத்தனையோ?

      Delete
  3. விவசாயம் பற்றிய அழகான கவி
    2002ல் எழுதியது என்றால் இவ்வளவு
    காலம் ஏன் வெளியிடவில்லை?

    ReplyDelete
    Replies
    1. எஸ்தர் அந்த புத்தகத்துக்கு ஸ்பான்சர் செய்வதாய் இருந்தால் உடனே வெளியிட்டுவிடலாம் :)

      (இதைத்தான் சொந்த செலவுல சூனியம் வைக்கிறதுன்னு சொல்லுவாக!)

      Delete
  4. 2002--எத்தனை வருஷம் கழிந்தாலும் இதே நிலை தான் போல...

    ReplyDelete
    Replies
    1. விவசாயிகள் இதை உணராதவரை இதே நிலைமைதான்!

      Delete
  5. "இறந்துவிட்ட பயிர்களால்
    எரியாமல்போனது விறகுகளும்" - மிகவும் கொடுமையான விஷயம்.. நிலமை மோசமாகுதே தவிர தீர்வு காணவில்லை..

    ReplyDelete
  6. விவசாயியின் உண்மையான குமுறல்..

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
    தொழுதுண்டு பின்செல் பவர்

    என்றார் வள்ளுவர். ஆனால், விவசாயத்திற்கும், கல்விக்கும் கொடுக்கப்படும் கடனிற்குத் தான் வட்டி விகிதம் மிக அதிகம். கோடீஸ்வரர் மல்லையா தனது விமான நிறுவனம் படுத்து விட்டதாய் அறிவித்து கேட்கும் தள்ளுபடியைக் கொடுக்கத் தயாராகும் அரசு, ஏழை விவசாயி வாங்கிய ஒன்றரை ரூபாய் கடனை வசூலிப்பதில் காட்டும் தீவிரம் மெய்சிலிர்க்க வைக்கிறது!

    ReplyDelete