Blogger Widgets

பிணத்தை எரித்துவிடுங்கள், அவைகளாவது கற்பழிப்பிலிருந்து தப்பிக்கட்டும்!

  இந்தியாவில் ஒவ்வொரு 54 நிமிடக்களுக்கு ஒருமுறை கற்பழிப்பு முயற்சி நடக்கிறது. 1 மணி 42 நிமிடக்களுக்கு ஒருமுறை வரதட்சனைக்கொடுமையால் ஒரு பெண் உயிரிழக்கிறாள்.

காட்சி 1 : மும்பை, மே-மாதம்.

  14 வயதுச்சிறுமியை அவள் தங்கியிருந்த வீட்டிற்கு அருகிலிருந்த 5 பேர் கடத்தக் கொண்டுபோய் கணக்கெடுக்க முடியாத அளவிற்கு சுமார் ஐந்து மாதங்களாகக் கற்பழித்திருக்கின்றனர். இரண்டு மாதம் ஆனவுடன் அவள்மீதிருந்த ஆசை தீர்ந்துபோய் “சோறு யார் போடுவதென்ற சண்டை வந்திருக்கின்றது. ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வெறும் ஒரே ஒரு வடா பாவ் கொடுத்திருக்கின்றனர்.

  ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஒரு பூங்காவில் வீசிவிட்டனர். அவளை ஆபரேசன் செய்தபோது உடலிலிருந்து எடுக்கப்பட்டவை என்னென்ன தெரியுமா? பேப்பர், மண், கற்கள் (பசியினால் வேறுவழியில்லாமல் அதையும் தின்றிருக்கும் அந்த சிறுமியைப் பற்றி நினைத்துக்கூட நம்மால் பார்க்க இயலவில்லை). கடந்த நவம்பர் 14 உடன் தன் மூச்சை நிறுத்திக் கொண்டாள.

காட்சி 2 : டெல்லி, டிசம்பர் மாதம்.

  முனிர்கா என்ற இடத்தில் ஞாயிறு இரவு ஓடும் பேருந்தில், 23 வயது மருத்துவ மாணவியை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதைத் தடுக்க முயன்ற அவரது நண்பரை அந்தக் கும்பல் இரும்புக் கம்பியால் தாக்கி தூக்கி வெளியே வீசி விட்டது. பின்னர் அந்தப் பெண்ணை ஐந்து பேரும் கற்பழித்ததோடு இரும்புக்கம்பியால் அவளின் பெண்ணுருப்பையும் உடல் உறுப்புகளையும் தாக்கி அரை நிர்வாண கோலத்தில் ஒரு பாலத்தில் வீசிச் சென்றுவிட்டது. இவையனைத்தும் டெல்லியின் நடுவீதியில் ஓடும் பஸ்சிலேயே நடந்துள்ளது. டெல்லியில் சிகிச்சை பெற்று பின் சிங்கப்பூர் கொண்டுசெல்லப்பட்டு அங்கும் பலனின்றி அந்தப்பெண் இன்று தன் உலகை முடித்துக்கொண்டாள்.

காட்சி 3 : தூத்துக்குடி, டிசம்பர் மாதம்.

  7ம் வகுப்பு படிக்கும் தாதன்குளத்தைச் சேர்ந்த புனிதா ரயிலை விட்டு இறங்கிச் செல்லும்போது குடிபோதையில் இருந்த சுப்பையா பலாத்காரம் செய்ய முயற்சித்து முடியாமல் போனதால் தம்மை காட்டிக் கொடுத்துவிடுவாரோ என்று அஞ்சி கொலை செய்து சடலத்தை ரயில்வே பாலம் அருகில் இருக்கும் முட்புதரில் வீசிவிட்டுச் சென்றுவிட்டான்.


காட்சி 4 : கோவை, செப்டம்பர் 2011.

  போத்தனூர் அருகே இரவு நேரத்தில் ஒரிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விவசாயி தண்டபாணியின் தோட்டத்திலிருந்த மாட்டுக் கன்றுக்குட்டியின் நாக்கை அறுத்து மண்வெட்டியை எடுத்து, அதன் கைப்பிடியை அதன் வாயில் நுழைத்து கத்துவதை நிறுத்தி கன்றுக்குட்டியுடன் உறவுகொள்ள முயற்சித்தனர். அப்போது அது சத்தம் போடவே தூக்கத்திலிருந்த தண்டபானியும் அருகிலிருந்தவர்களையும் உதவிக்கு அழைத்து அனைவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஒரு மாட்டுக்கன்றுக்குட்டியை கற்பழிக்கும் இவர்களுக்கு மனிதர்கள் எம்மாத்திரம்?

தயவுசெய்து பிணத்தைப் புதைக்காதீர்கள், எரித்துவிடுங்கள் அவைகளாவது கற்பழிப்பிலிருந்து தப்பிக்கட்டும்!

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!


1 COMMENTS: