Blogger Widgets

வருடத்தின் முதல் மின்தடை! இதை பார்த்தாவது திருந்துங்கடா

  இந்தியாவில உள்ள எல்லா அரசியல் வியாதிகளுக்கும் ஒரு கேள்வி ! கீழ உள்ளது இன்னான்னு படிக்க தெரியுமா?

  இத பார்த்ததும் நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்! கடந்த ஒரு வருசத்துல வர்ற முதல் மின்தடை, அதுவும் பராமரிப்பு பணிகளுக்காக!


  மின் தடைக்கு பத்து நாள் முன்னாடியே அறிவிப்பு கொடுத்து, எப்ப போகும், எப்ப வரும்னும் சொல்லியிருக்காங்க, அதுமட்டுமில்லாம ஏரியா முழுவதும் அனைத்து பில்டிங்களிலும் ஒட்டியிருக்காங்க! (பர்துபாய், துபாய், ஐக்கிய அரபு நாடுகள்)

  நிர்வாகம் எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்!

எங்க ஊர்ல கரண்ட் போகும் ஆனா வராது. மின்துறைக்கு போன் செய்தால் பதில் இப்படி வரும்.

முதல் கால் - "பத்து நிமிடத்தில வந்திரும்"

இருபது நிமிடம் கழித்து இரண்டாவது கால் - "வந்துரும் சார் வெயிட் பண்ணுங்க"

ஒரு மணிநேரம் கழித்து மூன்றாவது கால் - "யோவ் நாங்க என்ன பாக்கெட்லயா கரண்டை ஒளிச்சு வச்சிருக்கோம்? வரும் வெயிட் பண்ணு!"

இரண்டு மணி நேரம் கழித்து எத்தனை கால் பண்ணினாலும் - "This Number is Busy" (ரிசீவர மல்லாக்கா போட்டுட்டா அப்பிடிதேன் சொல்லும்!)



4 COMMENTS:

  1. mmmmm. enna seiya ?

    intha manthiri markal, MLAs, MPs ,matrum namma EB la velai paarkkum ellaa CE,SE,POs,JEs pondra ellaar veetilum
    ulla INVERTERS & GENERATORS ellavatraiyum eduthu vida vendum. appuram avarkal ellorum , naukku current vantha pinpu thaan avarkal veettil current varaventum. appothu thaan avarkalukkum , avarkal pondaatti matrum kulanthai kalukkum namathu unmaiyana vali theriyum. avarkal namakku thondu seiya pathavikku ponaarkal enpatharkkum oru artham kidaikkum. ethellaam nam desathil nadakkumaa ,sir.

    ReplyDelete
    Replies
    1. ethellaam nam desathil nadakkumaa ,sir./// என்னைய போய் சாரு சாருன்னு சொல்ல!!! ஆகா கேட்வே அருமையா இருக்கு :)

      இதெல்லாம் நடக்கணும்னா கனவுதான் ஒரே வழி!

      Delete
  2. சும்மா எப்பவும் அரசியல்வாதிங்களை திட்டாதிங்க சார், ஓட்டுக்கு பணம் வாங்கறது நம்ம தப்பு, ஜாதி பார்த்து கட்சி பார்த்து ஓட்டு போடறவங்க எத்தனை பேர்?, வேட்பாளரோட நேர்மைய பார்த்து எத்தனை பேர் ஓட்டு போடறோம்? நம்ம கையிலதான் எல்லாமே இருக்கு, ஒரு தப்பு நடக்குதுனா அதுல நம்ம பங்கு எவ்வளவுனும் பார்க்கனும், அடுத்தவங்களை மட்டும் குறை சொல்ல கூடாது, ஏன் இப்படி சொல்றனா இப்ப முடிஞ்ச உள்ளாட்சி தேர்தல் ல ஓட்டுக்கு பணம் குடுக்காததால எங்க அப்பா தோத்து போனார், நேர்மையானவங்களை தேர்ந்துடுக்காம குறை மட்டும் சொன்னா எப்படி சார்? உங்களை காயப்படுத்த இதை சொல்லலை, எனக்கும் உங்களை மாதிரி நாடு ஏன் இப்படி இருக்குங்கற குமுறல் இருக்கறதால சொல்றேன், தப்பா நினைக்காதிங்க

    ReplyDelete
    Replies
    1. சரியான கருத்து! கூடவே இந்த இலவச டிவி, மிக்ஸ்சி, கிரைண்டர் - இதுவும் ஒருவகை லஞ்சங்கள்தான்!

      Delete