Blogger Widgets

இணையதளம் விளம்பரங்களைத் தடுக்க – AdBlock


       சமீபத்தில் மைக்ரோசாப்டில் வேலை செய்யும் என்னுடைய நண்பரின் கணினியைப் பார்த்தேன், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் மொத்தம் 11 POP UP WINDOWS திறக்கப்பட்டிருந்தது.

  “நீ ADBLOCK உபயோகப்படுத்துவதில்லையா?” எனக் கேட்டேன்.

  “அப்படியென்றால்? என்றான்.(அடப்பாவி! ஒருவேளை மைக்ரோசாப்டில் வேலை செய்ய இதுதான் தகுதியோ???)

  இப்படித்தான் ஒருசில சாதாரண விசயங்களை தெரிந்துகொள்வதை விட்டுவிட்டு பேஸ்புக்கில் CITYVILLE விளையாண்டுகொண்டிக்கிறோம்; அருகில் இருக்கும் நண்பர்களை விட்டுவிட்டு பேஸ்புக்கில் தேடிக்கொண்டிருக்கிறோம்!

  நீங்கள் FIREFOX அல்லது GOOGLE CHROME ப்ரௌசர் உபயோகித்துக்கொண்டிருந்தால், அதில் ADBLOCK  பிளக்-இன்னை தரவிறக்கம் செய்யவும். (இணைய முகவரி கீழே! – காலுக்கு கீழே அல்ல!)



பயன்கள்:

  • இது உங்கள் கணினியில் வரும் அனைத்து விளம்பரங்களையும் தடுக்கும். அது படமானாலும் சரி, எழுத்து விளம்பரமானாலும் சரி.
  • POP UP WINDOWS – உருவாகாது. (POP UP WINDOWS வைரஸ் வருவதற்கான ஒரு எளிய முறை – இதனால் அதுவும் தடுக்கப்படும்)
  • பேஸ்புக், யுடியூப் மற்றும் பிற அனைத்துத் தள விளம்பரங்களும் தடுக்கப்பட்டுவிடும்.
  • கூகிள் சர்ச்சிலும் ஸ்பான்சர் விளம்பரங்கள் வராது.
  • வேண்டாத விளம்பரங்களை நாமாகவும் தடுக்க முடியும்- உருவாகும் விளம்பரங்கள் மீது ரைட் கிளிக் செய்து Block an Add என்பதை தேர்வு செய்யவும். இனி அந்த விளம்பரம் வரவே வராது. facebook, Google ஆகிவற்றின் முகப்புப்பக்கத்தில் வரும் படங்களையும் இதுபோல் தடுக்கலாம்.
  • ஒருசில தளங்களில் விளம்பரம் வேண்டுமெனில் AdBlock மீது கிளிக் செய்து Don’t Run on this page என்பதை தேர்வு செய்யவும் – இனி அத்தளத்தில் மட்டும் விளம்பரங்களைக் காணலாம்.

                          http://adblockplus.org/en/


   

  உங்கள் கணினியில் சில இணையதளங்களைப்பார்க்க முடியாதவாறு ப்ளாக் செய்துவிட்டார்களா?  தடை செய்யப்பட்ட இணையதளங்களை பார்க்க - HOTSPOT SHIELD

(ஒருமுறை விப்ரோவில் பணிபுரியும் சாப்ட்வேர் என்ஜினியர் பெண் ஒருவர் குரோர்பதி நிகழ்ச்சியில்) அமிதாப்பச்சனின் கேள்வி – கூகிள், ஜிமெயில், பேஸ்புக், யுடியூப் ஆகிய நான்கில் எது கூகுளின் தளம் அல்ல?
என்ஜினியர் பெண்ணின் பதில் –  யுடியூப்!! J


3 COMMENTS:

  1. அருமையான பதிவு ...
    உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

    தமிழ்.DailyLib

    we can get more traffic, exposure and hits for you


    உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

    நன்றி
    தமிழ்.DailyLib

    ReplyDelete
  2. எனக்கு எக்ஸ்புளோரர்ரில் தான் அதிகம் பாப் அப் விளம்பரம் வருகிறது
    உங்கள் கருத்துக்கு நன்றி..
    எக்ஸ்புளோரர்ரில் தடுப்பது எப்படி என்று கூறவும்

    ReplyDelete
    Replies
    1. எக்ஸ்புளோரரை மூடிவிட்டு குரோம் உபயோகிக்கவும் :-)

      Delete