நிறைய
நண்பர்களுக்கு தமிழில் எழுத/டைப் செய்ய எந்த மென்பொருள் உபயோகிப்பது என்பது
குழப்பமாக இருக்கலாம்! அதைத் தீர்க்கவே இந்த பதிவு!
- NHM Writer - என்.எச்.எம் எழுதி (எனது தெரிவு)
- அழகி தமிழ் மென்பொருள் (எனது தெரிவு)
- முரசு அஞ்சல்
- Google Transliteration
- எ-கலப்பை
- குறள் தமிழ் எழுதி
இவைகளை உபயோகித்துப் பார்த்து உங்களுக்கு
வேண்டியதை நிறுவிக்கொள்ளலாம்!
1. என்.எச்.எம் எழுதி:
விண்டோஸ் இயங்குதளத்தில் XP, Vista, Windows 7 செயல்படக்கூடியது. டவுன்லோட் செய்து Alt+0 அல்லது Alt+1 அல்லது Alt+2 அல்லது Alt+3 அல்லது Alt+4 அல்லது Alt+5 ஐ அழுத்தி எந்த ஒரு இடத்திலும் தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யலாம். நகல் (Copy/Paste) செய்து ஒட்ட வேண்டிய
அவசியம் இல்லை. நிறுவிய
பின்ன ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறித் தட்டச்சு செய்யலாம். இது பல ( applications : MS office, notepad, IE explorers and
so on) பிரயோகங்களுடன்
ஒத்திசைந்து தமிழில் தட்டச்சு செய்ய உதவுகிறது.
டைப்
செய்ய ஒலிப்பு முறையை (Alt+2) பயன்படுத்துவதாயின் பின்வரும்
வழிமுறைகளை பயன்படுத்தவும்
எ = e , ஏ = ee அல்லது E , ஐ = ai, ஒ = o , ஓ = oo அல்லது O , ஔ = au
மெய்
எழுத்துக்கள்: க் = k அல்லது g, ங் = ng, ச் = s அல்லது c , ஞ் = nj அல்லது X , ட் = d அல்லது t , ண் = N, த் = th, ந் = w , ப் = p அல்லது b, ம் = m , ய் = y , ர் = r , ல் = l , வ் = v, ழ் = z , ள் = L , ற் = R, ன் = n
ஆய்த
எழுத்து : ஃ = q
கிரகந்த எழுத்துக்கள்: ஜ் = j, ஷ் = Z அல்லது sh, ஸ் = S, ஹ் = ன் , க்ஷ் = ksh, க்ஷ் = ksh, ஸ்ரீ = sr
உயிர்மெய்
எழுத்துக்கள்: க = க்+அ
= ka , கா = (க்+ஆ) =kA அல்லது kaa , கி = (க்+இ) = ki , கீ = (க்+ஈ) = kii அல்லது kI , கு = (க்+உ) = ku கூ = (க்+ஊ) = kU அல்லது kuu, கெ = க்+எ = ke , கே = (க்+ஏ) = kE அல்லது kee, கை = க்+ ஐ = kai, கொ = (க்+ஒ) = ko, கோ = க்+ஓ = koo அல்லது kO, கௌ = (க்+ஔ) = kau
2. அழகி மென்பொருள்:
அழகி தனக்கென்றே சில
சிறப்புகளைக் கொண்டுள்ளது!.
- SAT Transliteration: 'aditya' என்று டைப் செய்தாலே 'ஆதித்யா' கிடைத்து விடும்!; 'aadhithyaa' என்று டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை! 'vanakkam' என்று டைப் செய்தே 'வணக்கம்' பெற்று விடலாம்!; 'shift+n' உபயோகித்து 'vaNakkam' என்று டைப் செய்யத் தேவையில்லை! 'doctor' என்று டைப் செய்தே 'டாக்டர்' (அல்லது 'மருத்துவர்'! - பயனரின் விருப்பத்திற்கேற்ப) பெறலாம். SAT குறித்து முழு விவரங்கள் அறிய, http://azhagi.com/sath.html சென்று பார்க்கவும்.
- Dual Screen Transliteration: உலகின் முதலாம் 'இரு திரை' ஒலிபெயர்ப்பு கருவி கொண்டு, அழகியின் திரையை இரண்டாய்ப் பிரித்து, மேல் திரையில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய, அதற்கேற்ற தமிழ் உரை உடனுக்குடன் கீழ் திரையில் காணும்படி செய்யலாம்.
- Reverse Transliteration: 'மாற்று ஒலிபெயர்ப்பு' - ஏற்கெனவே தமிழில் தட்டச்சு செய்து வைத்திருக்கும் உரைகளுக்கு மீண்டும் அதன் இணையான ஒலியியல் ஆங்கிலம் பெறுவது. உதாரணத் திரைப்பதிவிற்கு (sample screenshot) இங்கே சொடுக்கவும். மேலும் விளக்கங்கள் படிக்க, இங்கே சொடுக்கவும்.
- Auto-Transliteration: 'தானியங்கி ஒலிபெயர்ப்பு' - நீங்கள் ஏற்கெனவே அடித்து வைத்திருக்கும் ஆங்கிலக் கோப்புகளை (உ-ம்: வலைப்பக்கங்கள், வேர்ட் ஆவணங்கள் etc.) அப்படியே தமிழில் 'ஒலிபெயர்க்கலாம்'. மீண்டும் தட்டச்சிட வேண்டியதில்லை. உதாரணத் திரைப்பதிவிற்கு (sample screenshot) இங்கே சொடுக்கவும். மேலும் விளக்கங்கள் படிக்க, இங்கே
- Pop-up Transliteration: திறந்து வைக்கப்பட்டிருக்கும் எந்த செயலியின் (any open application) கோப்பிலுள்ள ஆங்கில உரையின் இணையான தமிழ் ஒலியியல் உரையையும், ஒரு பட்டனைத் தட்டியே ஒரு தனி பாப்-அப் விண்டோவில் பார்க்கலாம்.
- Auto-Insertion: அடிக்கடி உபயோகிக்கும் தமிழ் வாக்கியங்களை/பத்திகளை (உ-ம்: பாரதியார் கவிதைகள், பழமொழிகள்) எந்த விண்டோஸ் செயலியிலும், ஒரு பட்டனைத் தட்டுவதன் மூலமே உட்புகுத்தலாம்.
- Word Count: தமிழில் 'சொல் எண்ணிக்கை'.
3. Google Transliteration :
புதிதாய் எழுதுபவர்களுக்கு மிகவும் எளிதானது. இணையத்தில் அப்படியே தமிங்கிலீஷில் டைப் செய்யலாம் அல்லது, டவுன்லோட் செய்தும் பயன்படுத்தலாம்! (ன/ண, ல/ள/ழ வேறுபாடுகள் கண்டறிவது மிகவும் கடினமானதால் கூடுமானவரை தவிர்க்கவும்!) டைப்/டவுன்லோட் செய்ய டைப்/டவுன்லோட் செய்ய http://www.google.com/transliterate/
புதிதாய் எழுதுபவர்களுக்கு மிகவும் எளிதானது. இணையத்தில் அப்படியே தமிங்கிலீஷில் டைப் செய்யலாம் அல்லது, டவுன்லோட் செய்தும் பயன்படுத்தலாம்! (ன/ண, ல/ள/ழ வேறுபாடுகள் கண்டறிவது மிகவும் கடினமானதால் கூடுமானவரை தவிர்க்கவும்!) டைப்/டவுன்லோட் செய்ய டைப்/டவுன்லோட் செய்ய http://www.google.com/transliterate/
Tweet |
submit your website to diggusa increase your alexa rank
ReplyDeletehttp://diggusa.com
Not even passed then how will i get a rank?
DeleteThanks to share....
ReplyDelete:)
Deleteஎழுத வந்த புதிதில் Google Transliteration மட்டும் தான் தமிழ் டைப் செய்ய உதவும் மென்பொருள் என்று நினைத்தேன் சிறிது நாட்களுக்கு முன்பு தான் NHM பற்றி கேள்விப்பட்டேன்.., உங்கள் பதிவின் வாயிலாக மேலும் சில மென்பொருள் பற்றி அறிகிறேன். மிக்க நன்றி பகிர்வுக்கு :)
ReplyDelete100 க்கும் மேற்பட்ட மென்பொருட்கள் இருக்கின்றன, அதில் சிறந்தவற்றை மட்டும் தொகுத்துள்ளோம்! :)
DeleteNHM Writer பயன்படுத்தியதில்லை...
ReplyDeleteஇனி பார்க்கிறேன்...
பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
நான் கூகிள் transliteration பயன்படுத்துகிறேன்.
ReplyDeleteNHM Writer Off Line இல் வேலை செய்யவில்லையே!
டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும்! இன்ஸ்டால் செய்து அப்ளிகேசன் திறந்து உபயோகிக்கவும்!
Delete