உலகிலேயே சாலை விபத்துகளில் இந்தியாதான் No.1 - வருடந்தோறும் இந்தியாவில் மட்டும் 1.05 லட்சம் பேர் சாலை
விபத்துகளால் இறக்கின்றனர்! இதில் பெரும்பாலும் 15-29 வயதுடைய இளைஞர்களே பெரும்பாலும்
இறக்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் பயணம் செய்யும்போது பாதுகாப்பு முறைகளை
உபயோகிக்காததும், கேவலமான ரோடுகளும்,
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதும்,
ஸ்பீட் லிமிட்டை பின்பற்றாததும்தான்!.
இது எல்லாவற்றையும்விட வாகனம் ஓட்டுவதற்கோ லைசென்ஸ்
பெறுவதற்கோ பயிற்சி என்பதே கொடுப்பதில்லை – இதுதான் அதிமுக்கிய காரணம்
உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன் சேலத்தைச் சேர்ந்த என் தோழி
ஒருவர் இருசக்கர வாகன லைசென்ஸ்க்கு விண்ணப்பித்தார். ஆபீசர் சொந்தக்காரர் என்பதால்
அவருக்குக் கிடைத்தது கார் லைசென்ஸ் - பைக்கைக்கூட ஓட்டிக்காட்டாமலே! - இவரெல்லாம்
கார் ஓட்டினால் எத்தனை உயிர் போகும்?
இவற்றைத் தவிர்க்க சில ஆலோசனைகள்!
1. சாலையில் பாதுகாப்பான பயண வழிமுறைகள் என்னென்ன?
(பயணி/டிரைவர் இருவருக்கும்!)
2. நீங்கள் பயணம் செய்யும் கார்/பஸ் தண்ணீருக்குள்
விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
3. உங்களின் டிரைவிங் வேகம் எதைப் பொறுத்தது? ரோடு
கண்டிசன் மெயின் ரோடு/சப் ரோடு அல்லது வாகனம்?
4. மலைப்பாதைகளில் இறங்கும்போது ஆட்டோமாட்டிக் கியரில்
போகக்கூடாது ஏன்? இறக்கங்களில்
பிரேக் பிடிக்காதது ஏன்?
5. மலைகளில் யாருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் - ஏறுபவர்? அல்லது
இறங்குபவர்
6. மழைக்காலங்களில் பாதுகாப்பான பயண வழிமுறைகள் என்னென்ன?
7. எப்போதும் உங்களது வாகனத்திற்கும் உங்களுக்கு முன்னே
செல்லும் வாகனத்திற்குமான இடைவெளி எவ்வளவு இருக்க வேண்டும்?
8. இடைவெளி இல்லாமல் சாலையின் நடுவே உள்ள ஒரே நேர்கோட்டின்
அர்த்தம் என்ன?
9. சாலை ஓரங்களில் வாகனங்களை எப்படி நிறுத்த வேண்டும்? அதிலிருந்து
எப்படி இறங்க வேண்டும்?
10. பெரிய வாகனங்கலான டிரக்/ லாரி/ பஸ் போன்றவற்றின் அருகில்
முன்னேயோ அல்லது பின்னேயோ செல்லக்கூடாது ஏன்? அவற்றை எப்படி ஓவர்டேக் செய்ய வேண்டும்?
பதில் தெரிந்தவர்கள் கூறலாம்!
Tweet |
மலைகளில் யாருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் - ஏறுபவர்? அல்லது இறங்குபவர்
ReplyDeleteநிச்சயமாக இறங்குபவர் தான்..
ஆனா யாருக்க மதிக்கிறா...?
ReplyDeleteசாலை விதிகளையும், வாகனப்பராமறிப்பும் சரியாக கடைபிடிக்க வில்லையென்றால் உயிர் இழப்புகளை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது
நீங்களே பதிலையும் சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்...
ReplyDeleteபிறகெப்படி எவ்வளவு பேருக்குத் தெரியும் என்று தெரிந்துகொள்வது?
Deleteநல்ல சிந்தனைகள்...
ReplyDeleteஇதோ உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் (என்னையும் சேர்த்து) போகிறோமே அவசரமாக....
அந்த அவசரமே அனைத்துக்கும் காரணம்...
வாழ்த்துக்கள்...
நன்றி.
பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
நல்ல பயனுள்ள பதிவு
ReplyDeleteநன்றி,
http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)