முற்றும் இல்லை முதலும் இல்லை எனும் பட்சத்தில் எங்கிருந்து நான் தொடங்க?
முற்றும் இல்லாதவரை எங்குவேண்டுமானாலும்
தொடங்கலாம், முதலாய் நானிருக்கும்வரை!
"கதியே நீயென்று சரணம் ஏய்தினேன்" :-)
என் ஆதியும் நீதான், என்னில் பாதியும்
நீதானென்று என்னுள் கலக்கவிட்டேன்!
இருவரும் ஒருவரெனக் கலந்தபின் இனி ஒரு
பிரிவேது; எனதுயிர் கொஞ்சம்
துயில் கொள்ளட்டும் உன்னுள்.
தூக்கம் கலைந்ததோ? அல்லது நான்தான்
கலைத்துவிட்டேனோ?
உன்னுள் உறங்கையில் விழித்துக் கொண்ட என்
கனவு கலையுமோ உன்னால்? :-)
என்னுள் எதற்கு கனவு காண்கிறாய்? நனவைக் காண்போமே
இருவரும்?
நிஜங்கள் இரண்டு காணட்டுமே விழா காணும்
கனா ஒன்று :-)
திருவிழா காணும் காலமாய் மாறட்டும்! :)
திருவிழா என்றாலும் தீமிதி என்றாலும் உன்
விரல் கோர்க்கும் வேளையில் பெண் இவள் மோட்சம் காண்பாளே!
நீ தீ மிதிக்கிறாய் எனும்போது உன் பாதம்
படுமுன்னே வெந்துபோவது நானாகத்தானிருக்கும்!
நீ என்பதில் இருப்பது நானல்லவோ? :-)
நீ என்பதும் நான் என்பதும் நம்மில் இல்லை!
:)
நீயென்பதில் நானும் இல்லை. நானென்பதில்
நீயும் இல்லை:-)
உன் பதிலில் நான் இல்லாமலிருக்கலாம்; உன் பாதியில் இருப்பது
நான்தானே?
என்ன கஞ்சத்தனம் உனக்கு? என் முழுதும் நீ
என்கிறேன்; பாதி என்கின்றாயே
நீ?
உன்னுள் எப்படி வந்தேனென்று புரியவில்லை
இதுவரை! பிறகெப்படிச்சொல்வேன் உன்னுள் நான் ஆதியா? இல்லை மீதியா?
- @kokilahkb மற்றும் @nilapennukku
Tweet |
இரண்டு கலராக இருந்தாலும் இரண்டும் ஒன்றுதானே சூப்பர்
ReplyDeleteநச்!
ReplyDeleteஅனைத்தையும் ரசித்தேன். வாழ்த்துக்கள் ! நன்றி !
ReplyDelete