உருகி உருகி காதல் செய்ய!
விளக்கெல்லாம் ஏத்த வேணாம்!
உன்னுள்
நான் வர என்ன செய்ய?
சிதறிச் சிதறி சிதைந்தேன் நானே!
பதறிக் கொஞ்சம் எனை ஏற்றால் என்ன?
என்னுள் நீ வந்து எப்படி நுழைந்தாய்?
ஏங்கி
ஏங்கி தவிக்க வைத்தாய்!
ஏதோ ஒன்றை
இழந்ததுபோல,
என்னை
நானே வெறுப்பதுபோல
புரியாமல்
தவிக்கிது மனமே!
இப்போ ஏங்குற மச்சா!
நினைச்சு சாகுற மச்சா!
இருந்தும் அவ பார்க்கல மச்சா!
(உருகி உருகி காதல் செய்ய!)
விளக்கெல்லாம் ஏத்த வேணாம்!
வீட்டிற்குள் நீ வந்தா போதும்!
வீடெல்லாம் வெளிச்சம்தானடி!
கண்ணைக்கூட
சிமிட்ட வேணாம்,
நீ
கண்ணசைச்சா போதும்,
என் கால்கள்
ரெண்டும் கதகளி ஆடுமடி!
காதல்கூட
சொல்ல வேணாம்,
மனைவியாய்
நீ வந்தா போதும்,
வாழ்வெல்லாம்
வசந்தம்தானடி!
என்னுள் நீ வந்து எப்படி நுழைந்தாய்?
ஏங்கி
ஏங்கி தவிக்க வைத்தாய்!
ஏதோ ஒன்றை இழந்ததுபோல,
என்னை நானே வெறுப்பதுபோல
புரியாமல் தவிக்கிது மனமே!
இப்போ ஏங்குற மச்சா!
நினைச்சு சாகுற மச்சா!
இருந்தும் அவ பார்க்கல மச்சா!
விழிகள் ரெண்டும் உயிரை உறிஞ்ச,
எங்கடி பிறந்தாய் என்னைக் கொல்ல?
ஏனடி பிரிந்தாய் நான் தனியே செல்ல?
உன் கண்ணு ரெண்ட பார்த்தா போதும்!
ஏழு ஜென்மம் உடன் வாழத்தோணும்!
உன் பார்வை என்னில் பட்டா போதும்,
ஜென்மம் போதும் - சாகத் தோணும்!
என்னுள் நீ வந்து எப்படி நுழைந்தாய்?
ஏங்கி
ஏங்கி தவிக்க வைத்தாய்!
ஏதோ ஒன்றை
இழந்ததுபோல,
என்னை
நானே வெறுப்பதுபோல
புரியாமல்
தவிக்கிது மனமே!
இப்போ ஏங்குற மச்சா!
நினைச்சு சாகுற மச்சா!
இருந்தும் அவ பார்க்கல மச்சா!
(உருகி உருகி காதல் செய்ய!)
இது பாட்டா? கவிதையா? கட்டுரையா? காமெடியா? என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு ஒரு பரிசு
3 நாட்கள் இலவசமாக அவரவர் வீடுகளில் தங்கிக் கொள்ளலாம்!
3 நாட்கள் இலவசமாக அவரவர் வீடுகளில் தங்கிக் கொள்ளலாம்!
Tweet |
பாட்டுன்னா... சரண்யா, பல்லவி...ச்சே சரணம் பல்லவின்னு ஏதோ இருக்கணும்பாங்களே..? அதுவுமில்லாம இப்பிடி நாலு பக்கத்துக்கு இருக்கக்கூடாது.,
ReplyDeleteகவிதைன்னா எனக்கு என்னான்னு சொல்ல தெரியலை இருந்தாலும் வாசிக்கும் போது என்னால இதை கவிதைன்னு உணர முடியலை!
கட்டுரைன்னா இப்பிடி ஒன்னுக்கு கீழ ஒன்னு இருக்ககூடாது அதுவுமில்லாம அங்கங்க (உருகி உருகி காதல் செய்ய!) இப்பிடி போட்டு மேல இருந்து மருபடியும் படிங்கன்னு சொல்ல கூடாது!
காமெடி-இங்கதான் எனக்கு டவுட்டு., காமெடின்னா படிச்சா சிரிப்பு வரணும்ல.., இதை படிக்கும் போது அப்பிடி ஒன்னும் எனக்கு சிரிப்பு வரலையே ஹி ஹி ஹி!
சரண்யாவும் பல்லவிவும் காலையிலேயே போய்ட்டாங்க :)
Deleteஇத முழுதும் படிச்சிட்டேளா? என்னாலேயே படிக்க முடியலனுதான் பதிவிட்டேன் - ஹி ஹி :)
ஹா... ஹா.. வாழ்த்துக்கள் நண்பா...
ReplyDeletesir!
ReplyDeletepaattaaa?
kavithaiyaa?
athu enakku theriyaathu!
aanaal nalla kaathal irunthathu!