இந்த மாதிரி கத்ரீனாவை கட்டிபிடித்து ஒரு சீன் வேணும்னா நமக்கு முதல்ல தேவை ஒரு பாட்டு! அப்புறம் இசை! எல்லாமே ரெடி!
வழக்கம்போல ஒரு பாட்ட டப்பிங் பண்ணுவோம்! இந்த பாட்டுல வர்ற மாதிரியே பாடனும் சரியா? (இசை : Shankar–Ehsaan–Loy)
உடல்ல்ல் உயிரென உறவென கலந்தாய் நீயே!
உயிர்ர்ர்
கனவென நினைவென நிறைந்தாய் நீயே!
(உடல்ல்ல்
உயிரென)
கனவினிலே
இறகைவிரித்து பறவையாய் வந்தேன் உனைப் பார்க்கவே
நீயிருந்தால்
சொர்க்கமும் வேண்டாம், உனைச்சேர சொர்க்கமும் தரலாம்!
மனசெல்லாம்
தென்றலாய் வருட நமக்கு மட்டும் புது உலகம் பிறக்குதோ?
ஓஹோ! இது
இன்னும் தொடரட்டுமே!
(உடல்ல்ல்
உயிரென)
யாரேனும்
எனைத் தொட்டால் உணர்வின்றி நிற்கிறேன்!
எங்கேனும்
பார்க்கும்போதும் உன் நினைவினில் தவிக்கிறேன்!
ஏதேதோ என்
இதயத்தை உருக்கியதே! சில நேரம் நான் யாரென்றே மறக்கிறதே!
ஓஹோ! இது
இன்னும் தொடரட்டுமே! இன்னுமின்னும் வளரட்டுமே!
(உடல்ல்ல்
உயிரென)
தேவதை நீ...! தேவதை நீ...!
தேவதையே என் வழியினிலே மழையைப் பொழிகிறதே!
தேவதையே என் வழியினிலே மழையைப் பொழிகிறதே!
சந்தோசம்
முகமெங்கும் படர்கிறதே! போகும் இடமெல்லாம் வசந்தப் பூக்கள் பூக்கிறதே!
இன்றே...தான்
நான் யாரென்றே என்பதை உணர்ந்தேன்!
இறுதியில்
இன்றே...தான் நான் யாரென்றே என்பதை உணர்ந்தேன்!
எப்போதும்
அழைப்பு வரும்போதும் அது நீயென்று மனம் பதறுகிறேன்
இப்போதும்
உன் அழைப்பு வருமென்று பார்க்கிறேன் ஆசையாய்!
மனசு
சொல்லுது கண்மூடிப் போ உன்னிடம்!
மறுப்பு
எதுவும் இல்லாமல் வந்தேன் உன்னிடம்!
மீதம்
ஏதும் இல்லாமல் எனைத்தந்தேன் உன்னிடம்!
ஓஹோ! இது
இன்னும் தொடரட்டுமே! இன்னுமின்னும் வளரட்டுமே!
நம்
இறுதிவரை பிரியாமல் தொடரட்டுமே!
(உடல்ல்ல்
உயிரென)
சரி எல்லாமே ரெடி! எங்கே கத்ரீனா? கண்ணமூடி பாரு மச்சி, கத்ரீனா வந்துடுவா! பின்னே நமக்கெல்லாம் ஒரு தயாரிப்பாளரா லைன்ல நின்னு கத்ரீனாவை புக் பண்ணுவார்?
டிஸ்கி : ஹிந்தி
படமான “ஜிந்தகி நா மிலேகி தொபாரா” என்ற படத்தில் வந்த இந்த இசை மிகவும் மிகவும்
மிகவும் பிடித்திருந்ததால் பின்னிசையை மட்டும் எடுத்துக்கொண்டு எழுதிய வரிகள்.
மற்றபடி அர்த்தங்கள் ஒன்றல்ல!
Tweet |
நல்ல வரிகளை எழுதி உள்ளீர்கள் ! வாழ்த்துக்கள் ! நன்றி !
ReplyDeleteஅதற்கு அவசியமே இல்லை....
ReplyDeleteம்ம் ரசித்தேன்.........
நோக்கில்லை! - நேக்கிருக்கு!
Delete//நம் இறுதிவரை பிரியாமல் தொடரட்டுமே!//
ReplyDeleteஇந்த வரியில் ஒரு வார்த்தை குறைவது போல தோன்றுகிறது.. நம் 'பந்தம்'?
பந்தம் வேணும்னா போட்டுக்கோங்கோ! அதுல தீ வேண்டுமானாலும் வச்சுககோங்கோ!
Deletepaadal vari ! nantru!
ReplyDeleteஇது பாட்டுன்னு நீங்களாவது நம்பறேளே! நேக்கு அது போதும்!
Deleteகற்பனையின் உச்சத்தைக் காட்டியுள்ளீர்கள்...
ReplyDeleteஉங்க ஒருத்தருக்காச்சும் புரிஞ்சுதே!
Delete