Blogger Widgets

துபாய் இசை இன்பம் - பார்த்திபன் சொன்ன ஜோக்ஸ்

 துபாயில் அனுகிரஹா ஸ்டார்ஸ் வழங்கிய இசை இன்பம் நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் பாடகர்கள் மனோ, பென்னி, முகேஷ் மற்றும் பலருடன் சேது நிகழ்ச்சியை கலகலப்பாய்த் தொகுத்து வழங்கினார். வழக்கம்போல 15 நிமிடம் தாமதமாக நிகழ்ச்சியைத் தொடங்கினர். இந்தியனாச்சே! 

நடிகர் பார்த்திபன் சொன்ன ஜோக்ஸ் மட்டும் இங்கே.!

LKG பையன் 1 : டேய் என்னை ஒரு சப்ப பிகர் அடிச்சிட்டாடா
LKG பையன் 2 : மிஸ்கிட்டே கம்பிளைன்ட் செய்ய வேண்டியதுதானே?
LKG பையன் 1 :அடிச்சதே அந்த மிஸ்தாண்டா


  ஒரு அழகான பெண் வாழ்க்கையை வெறுத்து, உயரமான மலையிலிருந்து குதிக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்குவந்த ஒருவர் அவளை எவ்வளவு சமாதனப்படுத்தியும் அவள் சமாதானமாகவில்லை. "ஓகே எப்படியிருந்தாலும் சாகத்தானே போறே? அதற்குமுன் எனக்கொரு முத்தம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொள்" என்றார். அவளும் அதேபோல் கொடுத்தவுடன், "பார்த்தியா முத்தம் எவ்ளோ நல்லா இருக்கு, இந்த இன்பத்தை எல்லாம் விட்டுவிட்டு எதற்காக நீ சாக வேண்டும்?என்றார்.  "என்ன பண்ணுவது உங்களுக்கு தெரிகிறது, நான் இதுபோல் பெண்வேடம் போட்டிருந்தால் உங்களுக்கு பிடித்திருக்கிறது, ஆனால் எங்கம்மா எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கிறாள், அதற்காகத்தான் நான் தற்கொலைக்கு முயற்சித்தேன்." ஆகவே முத்தம் வாங்குவதற்கு முன் எப்போதும் கவனமாய் இருங்கள்.

  ஒரு மாதமாக கணவன், மனைவிக்கிடையே சண்டை. உடைகள் அங்கங்கே சிதறியிருக்கும், வீடே குப்பைக்கூடமாக இருக்கும். ஆனால் திடீரென ஒரு நாள் மனைவி எல்லாவற்றையும் சுத்தம் செய்து வைத்திருந்தாள். கணவனுடன் அன்பாய் நடந்துகொண்டாள். இதைக் கவனித்த அவன் நண்பன் "என்னடா செய்தாய்? உன் மனைவி இப்படி கனிவாய் நடந்து கொள்கிறாள்?" என்றான். "ஒன்றுமில்லை ஒருநாள் உறக்கத்தில்என்னைத் தொடாதே, எனக்கிருப்பது ஒரு அன்பான மனைவி அவளைத் தவிர யாரையும் தொடமாட்டேன் என்னைத்தொடாதே என்று கத்தினேன். அன்றுமுதல் இப்படி மாறிவிட்டாள். என்ன செய்வது பொய் சொன்னால்தான் பெண்களுக்குப் பிடிக்கிறது."

  ஒல்லியான ஒருவன் தன் குண்டான மனைவியைப் பார்த்து, "5 பிள்ளைக்கு அம்மாவே" என்று கலாய்த்துக்கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் மனைவி ஒருவார்த்தை சொன்னதிலிருந்து அப்படிப் பேசுவதை நிறுத்திக்கொண்டான். அவள் சொன்னது "வாங்க 3 பிள்ளைக்கு அப்பாவே"

  மனோவின் அழகிய பாடல்களும், பென்னியின் பாடல்களுக்கு ரசிகர்களை ஆடவைத்தது ஹைலைட்! இந்நிகழ்ச்சி கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும்போது நீங்கள் பார்த்துக்கொள்ளவும்.


6 COMMENTS:

  1. /// இந்நிகழ்ச்சி கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும்போது ///

    எப்போது வரும் என்று தெரியவில்லை... அப்போது மின்சாரம் இருக்க வேண்டும்...!!!

    ReplyDelete
  2. பார்த்திபன் கொஞ்சம் ஓவரா பேசினாலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் வித்தகர்.

    ReplyDelete
  3. என்னைத் தொடாதே, எனக்கிருப்பது ஒரு அன்பான மனைவி அவளைத் தவிர யாரையும் தொடமாட்டேன் என்னைத்தொடாதே என்று கத்தினேன். அன்றுமுதல் இப்படி மாறிவிட்டாள்.


    eppadithan ponnungaloda weak pointa pidikirangalo onnum purila, vara vara unmaiya solravangala vida, poi solravangala than ponungaluku pidichirku, poi avlo nalla irukku konja nalaiku aanal nirantharam alla, unami therinthavudun poi cheeeee ndru mathiri poidum

    ReplyDelete
  4. ஒரு நாள் அவன் மனைவி ஒருவார்த்தை சொன்னதிலிருந்து அப்படிப் பேசுவதை நிறுத்திக்கொண்டான். அவள் சொன்னது "வாங்க 3 பிள்ளைக்கு அப்பாவே"


    intha kaalathila nalla ponna suzhnilai irukka vida matinrathu :(

    ReplyDelete
  5. romba nalla comedy

    ReplyDelete