Blogger Widgets

ஆடு, கோழியை உண்போம் - தாவரங்களைப் பாதுகாப்போம்! GO GREEN

 எது சைவம்? எது அசைவம்? இதிலேயே நிறைய குழப்பங்கள் இருக்கு. நாம் இதுவரைக்கும் நம்பிக்கொண்டிருப்பது வலியை உணரும் அனைத்து உயிரினங்களும் அசைவம் - அவற்றைக் கொல்லக்கூடாது, அது பாவம்! உதாரணம் கோழி, ஆடு, மாடு, மனிதன்.  வலியை உணராத, சத்தம் போடத்தெரியாத தாவரங்கள் அனைத்தும் சைவம். அவைகளை மட்டுமே நாம் சாப்பிட வேண்டும். சரியா?

 இப்போ நான் கேட்கும் கேள்வி என்னவென்றால் கோழியைக் கொல்வது பாவம், நெல் நாற்றைக் கொல்வது பாவமில்லையா? எப்படி உயிரினங்களில் ஒன்றைக் கொல்வது பாவமாகவும், இன்னொன்றைக் கொல்வது பாவமில்லாமலும் போகும்? தாவரங்களுக்கும் உணர்வுண்டு. என்ன நம்மைப்போல் அவை சத்தம்போட்டு கத்துவதில்லை. அவ்வளவுதான். தாவரங்களைக் கொள்வதும் கொலைதானே? எந்த உயினத்தைக் கொன்றாலும் கொலை கொலைதானே?

 ஆயிரம் நெல் உயிரைக் கொலை செய்து ஒருவேளை உணவு உண்ணுகிறோம், ஆனால் ஒரு கோழியின் உயிர் மூன்று வேளை உணவாய் இருக்குமே? ஒரு உயிர் முக்கியமா? ஆயிரம் உயிர் முக்கியமா?

 ஒரு கோழிமுட்டையிலிருந்து ஒரு வருடத்தில் எத்தனை உயிர்கள் தோன்றும்? (பிள்ளைகள் + பிள்ளைகளின் பிள்ளைகள் எண்ணிக்கை) நூற்றுக்கும் குறைவு. ஆனால் அதே ஒரு நெல் விதை 10000க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொடுக்கும். ஒரு நெல்லைக் உணவிற்காகக் கொல்வதால் இவ்வவளவு உயிர்களும், ஏன் அதன் சந்ததிகளும் மாய்ந்து போகும்!

 மேலும் கோழியை உண்பதால் வளிமண்டலத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை, இன்னும் சொல்லப்போனால் அவைகள் சுவாசிக்கும்போது வெளியிடும் CO2 இருக்காது. இது வளிமண்டலத்தில் உள்ள CO2வைக் குறைக்கும். அதே தாவரங்களை உண்பதால் CO2 அளவு அதிகரித்து சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.

 எனவே இன்றுமுதல் ஆடு, கோழி இவற்றையே உண்போம் - தாவரங்களைப் பாதுகாப்போம்! GO GREEN.

 பத்து வருசமா என் நெஞ்சில இருந்ததை எல்லாம் உங்ககிட்டே சொல்லிட்டேன் இப்போ நீங்களே சொல்லுங்க எது சைவம்? எது அசைவம்?

டிஸ்கி : இது காமெடிப் பதிவுய்யா,  ஆனாலும் இப்போ மூளைல "டன்"னு ஒரு குழப்பம் வந்திருக்குமேவரணுமே....


19 COMMENTS:

 1. நீங்க குழப்பம் என்று சொன்னது தான் குழப்பமாக இருக்கு... ஏன்...?

  ReplyDelete
  Replies
  1. குழப்பம் இருந்தால்தானே அண்ணே அது குழப்பம்?

   Delete
 2. நிலா பெண்ணே ! நான் சைவ உணவை உண்பவன் ,
  நீங்கள் என்னை மிகவும் குழப்பி விட்டிற்கள்,
  இது நகைசுவை யா , உண்மையும் கூட ? உண்ணும் உணவில் கூட ஒரு சந்தேகத்தை ஏற்படுதிவிட்டிர் ?


  நன்று

  ReplyDelete
  Replies
  1. இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது?

   Delete
 3. paddy will be harvested at the stage (almost died condition). the person who is eating rice only killying 1000 lives (according to you) but the person who is eating chicken with rice eating 1001 lives.

  ReplyDelete
 4. seringa ungala mudinja riceha sapidame, only கோழி, ஆடு, மாடு, மனிதன் mattum sapidunga eppadi irukunu sollunga, verum kozhu kulamba mattum kudicha pothuma athu riceoda serum pothu thane rusi, pathau vashma unga moolaila odtitu irunthathu solrenga pathu vashama rice sapidalaya sollunga ????? ezhunthunga athukaga ippadiya neenga enna botany student ha ??

  ReplyDelete
  Replies
  1. சொல்லால் அடிச்ச சுந்தரி... வூவூவூவூ..

   Delete
  2. sundariyum illa onnum illa , practicalha sonnen even i dont eat non veg but i know the other people taste when they share to me, unmai thane ??????

   Delete
  3. வூவூவூவூ.. (அழுகை)

   Delete
 5. ஆடு, மாடுங்களை வெட்டும் போது அது ரத்தம் சிந்துவதையும் துடித்து சாவதையும் பார்த்து அஞ்சாத மனிதன், கத்திரிக்காயை பிடுங்கும் போது, செடிக்கு வலிக்குமே என்று வள்ளலார் ரேஞ்சுக்கு பரிதாபப் படுவதுதான் காமடியாக இருக்கிறது!! உப்பு போடாமல் சமைக்காமல் எதைஎதையெல்லாம் உன்னால் சாப்பிட்டு ஜீரணிக்க முடியுமோ அதெல்லாம் சைவம்தான். அப்படித்தான் சிங்கம், புலி, ஓநாய், ஹையீனா எல்லாமே சாப்பிடுகிறது. கோழியை ஒரு முறை சாப்பிடுவதால் தாவரங்கள் காப்பற்றப் படாது, மாறாக அவன் கோழிப் பண்ணையையே வைத்து இன்னமும் சேர்த்து தாவரங்களை அழிப்பான், உணவுப் பஞ்சம் வரும்.

  ReplyDelete
  Replies
  1. என்னையப்போய் வள்ளலார்னு... (ஆனந்தக்கண்ணீர்! :-)

   Delete
 6. அடுத்தவங்களை குழப்பி விடுவதில் என்ன ஒரு சந்தோசம்!!!!!!!!

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
  Replies
  1. காவாளித்தனம் பண்றமோ நாதரித்தனம் பண்றமோ - ஊர்ல நாலு பேரு நம்மை உத்து பாக்கணும். யாருக்கும் புரியப்படாது. :-)

   Delete
 7. ஆதி மனிதர்கள் அனைவரும் அசைவர்களே. பின்னாளில் உருவானது தான் சைவ/அசைவ பாகுபாடு. பசிக்காக உண்பது எதுவும் தவறு அல்ல அது சைவமோ அல்லது அசைவமோ.

  ReplyDelete
  Replies
  1. பெரியவக நீக என்னமோ சொல்றீக!

   Delete
 8. வாழ நினைத்தால் வாழலாம்! வழியா இல்லை பூமியில்?உணவும் இன்றி உணர்வும் இன்றி சித்தனாக வாழலாம். அதற்கான பயிற்ச்சிளுடன். kpn

  ReplyDelete
  Replies
  1. அதுவரைக்கும் சாப்பிட்டுத்தானே ஆகனும் :-)

   Delete