எனக்கும் ட்ராஃபிக் போலீஸுக்கும் உண்டான பந்தம் பூர்வ ஜென்ம
பந்தம் போல! ரோட்ல அவனவன் டிரைவிங் லைசென்ஸ் இல்லாம திருட்டுவண்டிலயே போய்கிட்டுருப்பான், ஆனா அவனையெல்லாம் விட்டுட்டு போலீஸ் நம்மை பிடித்து வண்டிக்கி இன்சூரன்ஸ் இருக்கானு கடுப்பேத்திக்கிட்டுப்பார்!
ஒரு நிமிடம் கூட இல்லை, அவனை மடக்கிவிட்டனர். அவனுடன் நான் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு வந்தனர். அவன் பார்க்க அவ்வளவு குண்டா இருந்தான். அவனிடமிருந்து அதிகாலையிலேயே சரக்குவாசம் மூக்கைபிடுங்கியது! (எனக்கே மூக்கை பிடுங்கும் அளவிற்கு அவன் சரக்கடித்திருக்கிறான் என்றால் பாத்துக்கோங்க, வேறு யாராவதாக இருந்தால் வாந்தி எடுத்திருப்பார்கள்!)
அரசாங்கம் என்னென்ன சட்டம் கொண்டுவருதோ அதற்கெல்லாம் முதலில் ஃபைன் கட்டுவது நானாகத்தானிருப்பேன்! அப்படி அரசாங்கத்தையே வாழ வைத்துக்கொண்டிருந்தேன்! தமிழ்நாடு அரசு
மாதச் சம்பளம் கொடுக்குதோ இல்லையோ நான் கரெக்டா ஒரு மாதத்தில் ஐநூராவது லஞ்சம்
கொடுத்துவிடுவேன்!
ஏன்னா காவல்துறை நம்ம நண்பன்! நண்பனுக்கு நாம கொடுக்காம வேற
யார் கொடுப்பா? – அப்படீன்னு சொல்லி மனசை தேற்றிக்கொள்வேன்! (வேறென்ன பண்ண முடியும்?)
இது பெங்களூரிலும் தொடர்ந்தது! ஆனா பெங்களூர் போலீஸ்
ரொம்ப நல்லவங்க! ஒரு தடவை மாட்டினா ரூ.50 கொடுத்தா
போதும்! நம்ம ஊர் போலீஸ் மட்டும்தான் லஞ்சம் என்றால் ரொம்ப போலீஸ் ஆகிறார்கள் குறைந்தபட்சம் ஆயிரமாவது அழ வேண்டும்!
2009ல் ஒருநாள் அதிஅதிகாலை ஆறுமணி. திருப்பூர் சாலைல இருசக்கர
வாகனத்தில் போய்க்கொண்டிருந்தேன். வழக்கம்போல மாமா வழிமறித்தார்!
‘நிறுத்து நிறுத்து புக் இருக்கா?”
கொடுத்தேன்.
“லைசென்ஸ் எடு”
அதையும் கொடுத்தேன்.
“ஏன் ஹெல்மட் போடலை?”
“நேத்துதான் சார் கட்டாயம் போடணும்னு
சொல்லியிருக்காங்க, இன்னிக்கி காலைல வாங்கிடுவேன்”
“எங்ககிட்டேயும் நேத்தே சொல்லிட்டாங்க, ஹெல்மட்
போடாதவர்களை பிடிக்கச்சொல்லி! சாவியைக் கொடு”
கடுப்புடன் கொடுத்தேன் “சார் நீங்க
புதுசா?”
“ஆமா புதுசா வந்திருக்கிற S.P!”
என்னை பிடிக்கறதுக்காடா புதுசா டிரான்ஸ்பர் ஆகி வந்த? என நினைத்துக்கொண்டு,
“சார் போன மாசம் சரக்கடிச்சிட்டு வந்தேன் புடிச்சீங்க ஓகே. போனவாரம் வெயில் சூடா இருக்கேன்னு ஒரு பீர் போட்டுட்டு வந்தேன் புடிச்சீங்க, அதைக்கூட பொருத்துகிட்டேன்; ஆனா இப்போ போடாம வந்ததற்கு புடிக்கிறீங்களே என்ன நியாயம்?”
“சார் போன மாசம் சரக்கடிச்சிட்டு வந்தேன் புடிச்சீங்க ஓகே. போனவாரம் வெயில் சூடா இருக்கேன்னு ஒரு பீர் போட்டுட்டு வந்தேன் புடிச்சீங்க, அதைக்கூட பொருத்துகிட்டேன்; ஆனா இப்போ போடாம வந்ததற்கு புடிக்கிறீங்களே என்ன நியாயம்?”
அப்போது அங்கு வந்த வந்த TVS-50 ஒன்றை
வழிமறித்தார். அவன் நிற்காமல் செல்லவே கான்ஸ்டபிள் ஒருவரை ஏற்றிக்கொண்டு தன்
பல்சரை எடுத்து விரட்டினார்.
மாமா நிற்கிறார் மச்சி - தப்பிச்சிக்கோ! |
ஒரு நிமிடம் கூட இல்லை, அவனை மடக்கிவிட்டனர். அவனுடன் நான் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு வந்தனர். அவன் பார்க்க அவ்வளவு குண்டா இருந்தான். அவனிடமிருந்து அதிகாலையிலேயே சரக்குவாசம் மூக்கைபிடுங்கியது! (எனக்கே மூக்கை பிடுங்கும் அளவிற்கு அவன் சரக்கடித்திருக்கிறான் என்றால் பாத்துக்கோங்க, வேறு யாராவதாக இருந்தால் வாந்தி எடுத்திருப்பார்கள்!)
“டேய் நீ பைக்ல போயிருந்தா கூட விட்டிருப்போம், நீ
போறதே TVS 50! அதுவும் 20 ஸ்பீட்ல! நீ தப்பிச்சு போறியா? எங்கே
ஊது பார்க்கலாம்!” என்றார் எஸ்.பி.
“ப்ப்ப்ப்பூ...”
“கருமம்! கருமம்! என்ன
கருமத்தடா குடிச்ச? இந்த நாத்தம் நாறுது! கொடு சாவிய!”
“சார் சார் சார் சார்!!!”
அப்போது அங்குவந்த இன்னொரு கான்ஸ்டபிள் அவனைப்பார்த்து,“டேய்
பெருமாளு! இப்போ எதுக்குடா மாட்டுன?” என்னமோ அவர் வீட்டு விருந்தாளி போல
கேட்டார்.
“போங்க சார்! நான் இப்போ குடித்ததற்குக் காரணம்
நீங்கதான்! போன வாரம் குடிச்சிட்டு வந்ததற்கு புடிச்சீங்க! நேத்துதான் ஃபைன்
கட்டினேன். ரெண்டாயிரம் போச்சே! இருபது பாட்டில் வந்திருக்குமே?ன்னு கவலைல ராத்திரி
ஒரு குவாட்டர் குடிச்சேன்! காலைல சரியான தலைவலி! சரின்னு ஒரு பெக் போட்டேன்!
அதுக்கு இப்போ புடிச்சிட்டீங்க!”
எஸ்.பி கான்ஸ்டபிளைப் பார்த்தார்.
“சார் நீங்க கணக்கு காட்டனும்கிறதுக்காக என்னையவே
பிடிக்கறது கொஞ்சம்கூட நல்லா இல்லை! இனி ஃபைன் கட்டுவதற்கு காசும் இல்லை”
விட்டால் போலீசிடமே கடன் கேட்பான் போலிருந்தது. (அப்படியே வாங்கினாலும் அது அரசாங்கத்திற்குதான் போகும்!)
“இவனை விட்டுருங்க சார் நேத்துதான் ஃபைன் கட்டினான்” என
பரிந்துரைத்தார் கான்ஸ்டபிள்.
“சரி போ! எப்படியிருந்தாலும் இங்கதானே சுத்துவ! என்கிட்டே மாட்டாமலா போய்டுவ? போ” என்னமோ கண்ணாமூச்சி விளையாடுவதுபோல்
போகச்சொன்னார்.
“ரொம்ப டேங்க்ஸ் சார்” என ஒரு சல்யூட்
அடித்துவிட்டு கிளம்பினான்.
நான் வழக்கம்போல நண்பர்களுக்கு 200
Fine + 100 Tips கொடுத்துவிட்டு
வந்தேன்! (பர்ஸில் அதற்குமேல் பணமில்லை)
டிஸ்கி : இனி கல்யாணம் கட்டுனா டிராபிக் போலீஸ் பொண்ணைத்தான் கட்டுவது என முடிவெடுத்திருக்கிறேன். பின்னே கொடுத்ததை எல்லாம்
எப்படித் திரும்ப வாங்குவது? J
Tweet |
இனி ஃபைன் கட்டுவதற்கு காசும் இல்லை” விட்டால் போலீசிடமே கடன் கேட்பான் போலிருந்தது. (அப்படியே வாங்கினாலும் அது அரசாங்கத்திற்குதான் போகும்!)
ReplyDeleteSuper :-)
ரசித்த ஒரு ட்வீட் - சாலையோரம் கையேந்துபவர்கள் பிச்சைகாரர்களாய் தான் இருக்கவேண்டும் என்பதில்லை; ட்ராபிக் போலீஸ் ஆகவும் இருக்கலாம்!!
ReplyDeleteஒரு முறை தப்பான U-Turn எடுத்ததுக்காக வசூலிஸ்ட் கிட்ட மாட்டியிருக்கேன். என்கிட்டே 50 ரூபா வாங்கிட்டு, பில் போல ஒன்ன வேக வேகமா எழுதினாரு.. (நானும் அப்பாவியா அத தருவாருன்னு நினைச்சேன்). ம்ம்ஹூம்.கடைசி வரைக்கும் தரல.அது எதோ வீட்டு கணக்கு போல. :(
மளிகை சாமான் லிஸ்ட்!
Deleteஇவனுகளுக்கு இதே வேலையா போச்சு பாஸ், வர வர திருப்பூர்ல இருக்கவே பிடிக்கல :-( போன வாரம்தான் 2500 கட்டுனேன் கோர்ட்டுல
ReplyDelete2500-னா ஊத சொல்லி மாட்டியிருப்பீங்க போல :)
Deletehaaaaa haaa nallaa maatuneengalaaaaa!?
ReplyDeleteenakku thaan bike illaiye!
@AROUNA SELVAME - கஷ்டப்பட்டு நீங்க போட்ட கமெண்ட்ஸ Publish கிளிக் பண்ணுவதற்கு பதிலா Delete பண்ணிட்டேன்!
ReplyDeleteஎனவே சிரமம் பார்க்காமல் இன்னொருமுறை இதற்கும் சேர்த்து திட்டி கமெண்ட் போட்டுவிடுமாறு வம்புடன் கேட்டுக்கொள்கிறேன்! :)
நல்லதே செய்தீர்கள் நிலவன்பன்.
Deleteநன்றி.
பதிவின் முடிவில் நல்லதொரு முடிவை எடுத்துள்ளீர்கள் ! உங்கள் எண்ணம் நிறைவேறட்டும் நண்பா...! ஹா ஹா
ReplyDelete///இனி கல்யாணம் கட்டுனா ...///
ReplyDeleteஇதுவரைக்கும் அப்பப்போதான் டிராபிக் போலீசுக்கு பணம் கொடுத்திட்டு இருந்தீங்க... இனிமேல் Lifelong செலவு... என்ஜாய்...
romba comedya irukku pa.....
ReplyDelete