வீட்டில் நுழைந்த பூனைக்கு
வாசம் ஒன்று வீசியது
ஓட்டத்தில் ஓடிச் சென்றுதான்
சொம்பினுள் விட்டது தலையை!
களைப்பே எதுவும் இல்லாமல்
குடித்துக் கொண்டது பசும்பாலை
நுழைத்துவிட்ட சொம்பினுள் இருந்து
எடுக்க முடியவில்லை தன்தலையை!
அறிவே இன்றி செய்த செயலால்
அபாயம் வந்தது என்றெண்ணி
யோசனை செய்யும் நேரத்தில்
காலடி ஓசை கேட்டதுவே!
எதிர் சுவரில்தான் மோதியதே!
என்ன சத்தம் என்றுதான்
எஜமான் அவரும் வந்தாரே!
ஓட்டத்தில் வந்த பூனையோ
அவர் காலின்மீதே மோதியதே
கண்ணும் அதற்கு தெரியாததால்
கலங்கிப் போய்தான் நின்றதே!
எல்லாம் தெரிந்தது எஜமானுக்குத்
திருட்டுப் பூனையின் வேலையனைத்தும்,
கையில் கிடைத்த தடியெடுத்துக்
கணக்காய் நாலு கொடுத்தாரே!
- நிலவன்பன்
- நிலவன்பன்
இது உண்மைச் சம்பவம் – ஒருமுறை
நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தபோது அவர் வீட்டுப்பூனை சொம்பினுள் இருந்த பாலை திருட்டுத்தனமாய்க்
குடித்துவிட்டு, உள்ளிருந்து தலையை எடுக்கமுடியாமல் கண்ணும் தெரியாமல் சுவற்றில்
மோதிக் கொண்டிருந்ததது. நண்பர் வீட்டிற்குள் வந்துவிட்டதை அறிந்து தப்பி ஓட
முயற்சிக்கையில் அவரின்மீதே வந்து மோதியது! அப்போது எழுதிய கவிதை.
Tweet |
நகைச்சுவையாகவும் இருந்தது.!
ReplyDelete//தப்பி ஓட முயற்சிக்கையில் அவரின்மீதே வந்து மோதியது! அப்போது எழுதிய கவிதை.//
ReplyDeleteஅந்த நேரத்துல கவிதை எழுதணும்ன்னு உங்களுக்கு மட்டும் தான் தோணும்.. ;)
லவ் ஊத்திகிட்டாலே கவிதை எழுதறோம்! இதெல்லாம் என்ன பெரிய விஷயம்?
Deleteகருத்துடன் கூடிய குழந்தைகளுக்கான
ReplyDeleteபாடல் அருமை.வாழ்த்துக்கள்
kavidhai super!
ReplyDeleteபாடல் அருமை ! நன்றி சார் !
ReplyDelete