Blogger Widgets

ஷிஷா புகைபிடித்தல் – ஹோக்கா வரமா? சாபமா? HOOKAH SMOKING

 அக்பர் காலத்தில் 16ம் நூற்றாண்டில் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட முறைதான் ஷிஷா அல்லது ஹோக்கா புகைபிடித்தல். இது குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் அதிகம் காணப்பட்டது. இன்று உலகம் முழுவதும் பரவி, அரேபியா முழுவதும் அவர்களின் கலாச்சாரத்துடன் முழுமையாய் கலந்துவிட்டது. 


 அரேபியாவில் ஒவ்வொரு வீடுகளிலும் ஷிஷா ஸ்மோக்கிங் என்பது சாதாரணமாய்க் காணக்கூடிய ஒன்று. மேலும் சிரியா, ஈரான், பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, அமெரிக்கா மற்றும் கனடாவிலும் ஷிஷா புகைபிடித்தல் பரவியுள்ளது. இன்று ஷிஷா புகைபிடித்தலுக்கான கடைகள் ஐரோப்பா, அமேரிக்கா, அரேபியா என உலகம் முழுவதும் நிரம்பியிருக்கின்றன.

ஷிஷா ஸ்மோக்கிங் என்றால்?

 நீங்கள் புகை பிடிப்பவர் என்றால் நீங்கள் பிடிக்கும் புகையை தண்ணீருக்குள் செலுத்தி திரும்ப அந்த புகையை பிடிக்கும் முறைதான் ஷிஷா அல்லது ஹோக்கா புகைபிடித்தல். முந்திய காலத்தில் இவ்வாறு செய்வதின் மூலம் புகையிலையால் வரக்கூடிய நச்சு தண்ணீரில் கலந்து நீங்கிவிடும் என மக்கள் நம்பினர். இப்போதும்கூட இப்படித்தான் நம்புகின்றனர். அது உண்மையல்ல – கீழே பார்க்கவும்

 ஷிஷா புகைபிடித்தல் என்பது 20 முதல் 40 நிமிடங்கள் வரை நீடிக்கும். இதில் மேலுள்ள பாத்திரத்தில் புகையிலை மற்றும் நிலக்கரியை வேகவிடுவர். நீங்கள் உறிஞ்சும்போது அதில் வரும் புகையானது கீழே சென்று கீழுள்ள நீரினால் வடிகட்டப்பட்டு அங்கு உள்ள குழாய்மூலம் உங்கள் வாயை வந்தடையும்.  

 இதனால் நீங்கள் சுவாசிக்கும் கார்பன் மோனக்ஸ்சைட் மற்றும் பிற நச்சு வாயுக்களின் அளவானது 60 சிகரெட் குடிப்பதற்குச் சமம். எனவே புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

மாற்றுவழி:

 இப்போது புகையிலை கொண்டு ஷிஷா ஸ்மோகிங் செய்வது பெரும்பாலான  நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக இப்போது புகையிலை கலக்கப்படாத பிளேவர்கள் (FLAVOURS) கிடைக்கின்றன.
  • ஆப்பிள்
  • வாழைப்பழம்
  • நாவல்
  • சாக்லேட்
 என ஐம்பதுக்கும் மேற்பட்ட வகைகள் கிடைக்கின்றன

 என்னதான் மாற்றுவழிகள் இருந்தாலும் புகைத்தலில் வரும் கார்பன் மோனக்ஸ்சைடு மற்றும் பிற வாயுக்கள் புற்றுநோயைத் தோற்றுவிக்கும் – சிகரெட் பிடிக்கும்போது என்னென்ன விளைவுகள் உண்டாகுமோ அத்தனை விளைவுகளும் இந்த ஷிஷா புகைபிடித்தலிலும் உண்டாகும், 

 மேலும் அத்துடன் உபயோகிக்கப்படும் நிலக்கரியாலும் பின்விளைவுகள் உண்டாகும் -  எனவே விலகியே இருங்க!

குறிப்பு : குஜராத் மற்றும் பெங்களூரில் இது தடை செய்யப்பட்டுள்ளது.


7 COMMENTS:

  1. அந்த போட்டோல இருக்கறது உங்க ப்ரதர் மார்க் தானே?

    ReplyDelete
    Replies
    1. உங்ககிட்டேயும் கடன் வாங்கிட்டானா அவன்?

      Delete
    2. சுமார் ஒரு கோடி. உங்ககிட்ட வசூலிச்சுக்க சொல்லிட்டார்!

      Delete
    3. இருக்கிற இடத்தை சொல்றேன் - ஆனா நீங்கதான் போய் எடுத்துக்க வேணும்!

      மதன்லால் சேட்ஜி அடகுக்கடை!

      ஒரு பீடி வாங்கவே காசில்லாம சுத்திக்கிட்டுருக்கேன் இதில ஒரு கோடி வேணுமாம்ல!

      Delete
  2. உங்கள் வலைப்பதிவை இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரமிருப்பின் பார்த்து கருத்திடவும்.
    http://blogintamil.blogspot.in/2012/06/5.html

    ReplyDelete