Blogger Widgets

டாஸ்மாக்கில் அதி நவீன பாராம்!

    நேற்று காலை ஒன்பதரை மணியிருக்கும், சாலையில் போய்க்கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் ஒரு முப்பது பேருக்கும் மேலிருக்கும், எதற்கோ காத்துக் கொண்டிருந்தார்கள். நான் அதை நியாய விலைக்கடை என்றுதான் நினைத்தேன்! சாலையைக் கடக்கும்போது அருகில் சென்றபோதுதான் தெரிந்தது, மேலே டாஸ்மாக் என்றொரு பலகை - கடையை எப்ப சார் நீக்குவீங்க? (இந்த பலகைல மட்டும் பேரை "அரசு டாஸ்மாக்"னு ஏன் வைக்கிறதில்லை? அரசுப் பள்ளி, அரசுப் பேருந்து இவைகளில் மட்டும்தான் அரசு கூட்டணி சேருமோ?)

    அந்த டாஸ்மாக்கை ஒட்டியே "அதிநவீன பார்" என்றொரு பலகை. எனக்கு ஒரு சந்தேகம் ஒருவேளை ரோபோட் ஏதாவது சர்வீஸ் செய்கிறதா? அப்படிப்பட்ட அதிநவீனம் அதுவும் தமிழ்நாட்டு டாஸ்மாக்கிலையா? என்று நினைத்துக்கொண்டு சாலையைக் கடக்கும்போது அருகில்தான் சென்றிருப்பேன்! உள்ளிருந்து வரும் நாற்றம் குடலைப் பிடுங்கியது. (அப்புறம் விட்டுடுச்சானு நுச்சாத்தனமா கேக்கப்படாது)

    ஒருவேளை இதத்தான் அதிநவீனம் என்கிறார்களோ? கழிவு வாடை உட்பட அத்தனை வாடையும் சேர்ந்து வருவதை? இப்படி சுத்தமில்லாத, சுத்தப்படுத்தப்படாத பார்களால் தொற்று நோய் ஏற்படாதா? தமிழ் நாட்டிலுள்ள எத்தனை பார்களில் கழிவறை வசதி உள்ளது? எல்லாமே பார் ஓரத்தில்தான்!


   எந்தனை பார்களில் செய்யப்படும் உணவினை மூடி வைக்கிறார்கள்? (தம்பிக்கு ஆசையைப் பாரு!) யாராவது வாந்தி எடுத்திருந்தால் கூட சுத்தப் படுத்தப்படுவதில்லை, ஒரு வாரம் கழித்து வேறு யாராவது வாந்தி எடுக்கும்போது முன்னது மறைந்துவிடுகிறது!

   இந்த பகுதிகளால் நோய்வாய்ப் படப்போவதேன்னவோ 'குடி' மகன்தான்! அதனால் நஷ்டம் அரசுக்குத்தான் (அடுத்த நாள் குடிக்க வரமாட்டானே!) சென்ற வருட புத்தாண்டு ஒரு நாள் மது விற்பனையைவிட இந்தாண்டு விற்பனை முப்பது கோடி அதிகம் என பீத்திக் கொள்ளும் அரசு இந்த பார்களை கண்டுகொள்ளவே கண்டு கொள்ளாதா?

    எலைட் பார் என்று புதிய கடைகளைத் திறந்து வெளி நாட்டுச் சரக்குகளை விற்பதில் காட்டும் ஆர்வத்தை கொஞ்சமாவது இந்த பார்களின் தரத்தில் காட்டலாம்!



0 COMMENTS:

Post a Comment