-
கண்ணா வைரஸ் பாதிப்பில்லாத டெஸ்க்டாப் வேணுமா??
- விண்டோஸ விட வேகமான டெஸ்க்டாப் மற்றும் வேகமான இன்டர்நெட் வேணுமா? (இணையம் விண்டோசை விட மிக வேகமாக செயல்படும்)
- அத்தனையும் இலவசமா வேணுமா? (இலவசம்னா ஆட்சியயைவே மாத்திரவங்க, இதைப் பண்ணமாட்டமா?)
கண்ணா
மூணு லட்டு சாப்பிடனுமா?
அப்ப
உடனே உபுண்டுவ டவுன்லோட்
பண்ணு!!!
சிறப்புகள்:
- இலவசமாக டவுன்லோட் செய்து இன்ஸ்டால் பண்ணிக் கொள்ளலாம்.
- உபுண்டு லினக்ஸ்சை விண்டோஸ் உடன் இணைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.. தேவைப்படும்போது எதேனும் ஒரு டெஸ்க்டாப்பில் நுழைந்து உபயோகித்துக்க் கொள்ளலாம்.
- வைரஸ் கிடையவே கிடையாது. (99.99999999%)
- அனைத்து மென்பொருட்களும் பெரும்பாலும் இலவசம். மென்பொருட்களை டவுன்லோட் செய்வது அதைவிட எளிது. Ubuntu Software Centre – இல் உங்களுக்குத் தேவையான சாப்ட்வேரை கிளிக் செய்தால் போதும் தானாகவே இன்ஸ்டால் ஆகிவிடும்.
- மென்பொருட்களில் CHROME, FIREFOX, OPERA, OPEN OFFICE, SKYPE, THUNDERBIRD உட்பட பெரும்பாலான மென்பொருட்களை உபயோகித்துக் கொள்ளலாம்.
- டெஸ்க்டாப், லேப்டாப், நெட்புக் என அனைத்திலும் உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.
- எந்த ஒரு மொபைல் மற்றும் கேமராவை இணைத்தாலும் தனியாக ஒரு சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை. அது தானாகவே செயல்படும்.
- UBUNTU ONE – இது 5 GB இலவச கிளவுட்(CLOUD COMPUTING) வசதியைத் தருகிறது. இலவசமாக பாடல், பைல், சாப்ட்வேர் என எதையும் உங்கள் உபுண்டு, விண்டோஸ், மொபைலிலிருந்து சேமித்துக் கொள்ளலாம்.
- UBUNTU MUSIC STORE உங்கள் மொபைல் மற்றும் கணினியின் பாடல்களை ஒருங்கிணைக்க(SYNC) உதவுகிறது
- பயன்படுத்துவது மிக மிக எளிது. தற்போதைய புதிய பதிப்பு உபுண்டு 11.10 (ஒவ்வொரு ஆறு மதங்களுக்கு ஒருமுறை புதிய பதிப்பு வெளியிடப்படும்- பதிப்பின் பெயர் அந்த மாதம் மற்றும் வருடத்தைக் குறிக்கும்)
- உபுண்டு டெபியன் (DEBIAN) லினக்ஸ் அடிப்படையில் கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் கணினி இயக்க அமைப்பு.. இதை http://www.ubuntu.com/download என்ற முகவரியிலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம், அந்த பைலை ஒரு சிடியில் பதிந்து பின்னர் உங்கள் கணினியில் பதிந்து கொள்ளலாம் அல்லது நீங்கள் விண்டோஸ் உபயோகித்தால் நேரடியாகவே இன்ஸ்டால் செய்யலாம் - http://www.ubuntu.com/download/ubuntu/windows-installer – இந்த பைலை இயக்கவும். அம்புட்டுதேன்! (இதை விண்டோஸிலிருந்து நீக்குவதும் எளிது, ஒரு மென்பொருளை நீக்குவதைப் போலவே நீக்கிக் கொள்ளலாம்)
இதை
டவுன்லோட் செய்யாமலே உபயோத்துப்
பார்க்க -
http://www.ubuntu.com/tour/
உபுண்டுவுக்கு என்றே தமிழில் பல சிறப்பான வலைப்பதிவர்கள் பதிவை நடத்திக் கொண்டுள்ளனர். பார்வையிட-http://ubuntuintamil.blogspot.com (அருள்மொழி அவர்களுடையது).
உபுண்டுவுக்கு என்றே தமிழில் பல சிறப்பான வலைப்பதிவர்கள் பதிவை நடத்திக் கொண்டுள்ளனர். பார்வையிட-http://ubuntuintamil.blogspot.com (அருள்மொழி அவர்களுடையது).
(விண்டோஸ்
மற்றும் மேக்கை விட இது எவ்வளவோ மேலானது.
ஆனால்
ஏன் இது பிரபலமாகவில்லை??
காரணம்
-
விளம்பரமின்மை,
இலவசம்!)
Tweet |
0 COMMENTS:
Post a Comment