Blogger Widgets

யாருடையது கொடூர கதை?

   நூறு ஆண்டுகளுக்குப்பின் (எத்தன நாளைக்குத்தான் முன்னாடி கதையவே சொல்றது?) உலகம் முழுவதும் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டதுஎங்குமே மின்சாரம் இல்லைஅனைத்துக் கட்டிடங்களிலும் லிப்ட் இயங்கவில்லைபத்துமாடிக் கட்டிடம் என்றால் பத்தாவது மாடியை வாங்கவே ஆளில்லைவாடகைக்குக்கூட யாரும் வரவில்லைஏதாவது வேண்டுமென்றாலும் அவர்களேதான் கீழே சென்று எடுத்துவர வேண்டும்.

   பணியின் காரணமாக ஒரு நிறுவனம் மூன்றுபேரை அழைத்திருந்ததுஅவர்களுக்கு ஒரு கட்டிடத்தின் 163ஆவது மாடியைக் கொடுத்ததுமூவருக்கும் சந்தோசம், "ஆஹா இவ்வளவு பெரிய ஹோட்டலில் தங்கப்போகிறோம்!” என்றுஆனால் ஹோட்டலின் ரிசப்ஷனை அடைந்தவுடன்தான் தெரியும், 163மாடியையும் படியில் நடந்துதான் செல்ல வேண்டும் என்றுவேறு வழியில்லாமல் வாழ்கையை நொந்துகொண்டு கடுப்புடன் நடக்க ஆரம்பித்தார்கள்.

   பத்தாவது மாடியைக் கடக்கும்போது ஒருவனுக்கு ஒரு யோசனைஎப்படியும் நமது அறையை அடைய மூன்றுமணி நேரமாகும்அதுவரைக்கும் தங்கள் வாழ்வில் நடந்த ஆளுக்கொரு கொடூர கதையைச் சொல்வது என முடிவெடுத்தார்கள்திடீரென மூன்றாமவன், "நான் முதலில் சொல்கிறேன்இது மிகவும் முக்கியமானதுஎன்றான்

   உடனே முதாலாமவன், "கதை வரிசைப்படிதான் வர வேண்டும்நான் முதலில் சொல்கிறேன்என ஆரம்பித்தான்.

   "ஒருமுறை நான் விமானத்தில் செல்லும்போதுஅதில் கோளாறு ஏற்பட்டு கீழே விழ ஆரம்பித்ததுநான் கண்ணை மூடிக்கொண்டு கீழே குதித்துவிட்டேன்நல்லவேளையாக நான் குதித்தது கடலில்ஆனால் எனக்கு நீச்சல் தெரியாதுஅந்த வழியாக வந்த கடல்கொள்ளையர்களால் காப்பாற்றப்பட்டேன்!” என்றான்.

   மீண்டும் மூன்றாமவன், "நான் இப்போது சொல்கிறேன்இது மிகவும் முக்கியமானது!” என்றான்இரண்டாமவன், "வரிசைப்படிதான் வர வேண்டும்நான் சொல்வதைக் கேள்என்று சொல்ல ஆரம்பித்தான்.

   “ஒருமுறை காட்டிற்கு சுற்றுலா சென்றபோது நான் என்னுடன் வந்தவர்களை விட்டுவிட்டு வெகுதூரம் போய்விட்டேன்ஒரு சிங்கம் என்னைத் துரத்த ஆரம்பித்ததுஓடினேன்ஓடினேன் திடீரென எதோ ஒன்றின்மீது மோதி, கீழே விழுந்துவிட்டேன்அருகில் வந்த சிங்கம் என்னை விட்டுவிட்டு நான் மோதியதால் விழுந்த மானைத் திண்ணத் தொடங்கியதுஎப்படியோ தப்பித்து வந்துவிட்டேன்!”

   அதற்குள் 160-ஆவது மாடியை அடைந்துவிட்டார்கள்முதலாமவனும்இரண்டாமவனும், "இப்போது சொல் உன்னுடைய கதையை?" என்றனர்.

ரிசப்ஷனிலிருந்து நமது அறையின் சாவியை எடுக்க மறந்துவிட்டோம்!”


0 COMMENTS:

Post a Comment