Blogger Widgets

சைக்கோ தொடர்கதை - பகுதி 1

     இந்த உண்மைக் கதை யாரையும் புண்படுத்தவோ அல்லது காயப்படுத்தவோ எழுதப்பட்டதல்ல! நிறைய ஆபாசம்/வல்கர் இருந்தால் மன்னிக்கவும்! - அன்புடன் நிலவன்பன்.

     பொதுவா எனக்கு ஒரு குணமுண்டு! யாரைவாவது பார்த்தால் அப்போதே, அடுத்த கணமே என் மனது சொல்லிவிடும், இவன் யார்? எப்படிப்பட்டவன்னு. இது நல்லதுக்குத்தானே! என்றாலும் இதனால் பிரச்சினைகளும் உண்டு. மனது முடிவெடுத்துவிட்டால் பின் ஃபெவிகால் போட்டாலும் அவருடன் ஒட்டி பழக முடியாது. சரி கதைக்கு வருவோம்!

    மழை பெய்து ரோடெல்லாம் குளித்து பிரஷ்ஷா இருந்த சமயம். என் உடம்பெல்லாம் நனைந்து குளிரில் நடுங்கிக்கொண்டே என் ராசியான மொக்கை  CT-100ல் பெங்களூர் லால்பார்க்கின் வழியே கோணப்பன் அக்ரஹாராவிற்குப் போய்க்கொண்டிருந்தேன். சர்ட், பேன்ட், இதர இதர என நனையாத இடமே இல்லை. எனக்கு மழையில் பைக் ஓட்டுவது ரொம்ப பிடிக்கும். அதுவும் ஆபீஸ் டைம் என்றால் ஆஹா!! அப்போது என் ஃபோன் ரிங்கியது.

வேலைக்காக துபாய் செல்வது என்று முடிவாகியிருந்த சமயம். பைக்கை  லால்பார்க்-கின் அருகே நிறுத்திவிட்டு போலீஸ் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு (அதான் ஹெல்மெட் போடலையே? 50-அழ வேண்டுமே?) போனை எடுத்தேன்.

   "Hellow! Nila?" (நா பேரு)

    "Yes speaking"

    "I am Charles Here, I'm going to join as a manager for your company in Dubai. Shall we meet? Can u come to my home? Note down the address ......... "

   ஒரு சனிக்கிழமை மதியம் அவருடைய வீட்டிற்கு ஆட்டோவில் சென்றேன் (பெங்களூர் ரோடு எல்லாமே தெரியுமென்றாலும் சில சமயங்களில் அடுத்த தெருவிற்கு பதிலாக இருபது கிலோமீட்டர் சுற்றியிருக்கிறேன். அதுனாலதான்!). அப்போது அவர் வீட்டு டிவியில் ஒரு ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாண்டுகொண்டிருந்தது. அவர் குழந்தை சாமான்களைத் தூக்கிப்போட்டு விளையாண்டுகொண்டிருந்தது.

"கன்னடா மாட்லாடுவா?" என்றார்.

"கன்னடா கொத்திலா" என்று எனக்குத் தெரிந்த ஒரே வார்த்தையை பெருமையுடன் தெரிவித்துக்கொண்டேன்.

பின்பு தமிழில் உரையாடத் தொடங்கிவிட்டார், பூர்வீகம் பாண்டிச்சேரி என்றும், தாய்மொழி தெலுகு என்றும் தெரிவித்தார். நான் சேர்ந்ததிற்கு பிறகு ஒரு மாதம் கழித்து வருவதாகக் கூறினார். இடையில் ரிசைன் செய்த கம்பனி பங்களாதேஷ்க்கு இடம் மாற்றப்பட்டுவிட்டதாகவும் அதற்காக பங்களாதேஷ் செல்வதாகவும், பின் திருப்பூரில் சில பணிகள் இருப்பதாகவும் கூறினார். வேலையை விட்டபிறகு எதற்கு பங்களாதேஷ் போகவேண்டும்? எதற்காக கம்பனிக்காக உழைக்க வேண்டும்? அப்பொழுதே என் மனதில் ஒரு மின்னல் வந்தது. பாதி கிரிக்கெட் போட்டியைப் பார்த்துவிட்டு, அவர் மனைவி கொடுத்த டீயை குடித்துவிட்டு நன்றி கூறி விடைபெற்றுக் கொண்டேன். (பாதிப்போட்டி இவனால் போயிடுச்சேங்கிற கடுப்புதான்!)

  பின்பு ஒன்று அல்லது இரண்டுமுறை அவருடன் பேசியிருப்பேன்! துபாய்க்கு செல்வதற்கு எனக்கு ஒரு தயக்கம் இருந்தது, ஒரு முஸ்லிம் நாட்டின் வரைமுறைகளை பத்திரிக்கைகளில் படித்ததுதான்! ஆனால் வந்து இறங்கிய பின்புதான் தெரியும், இப்படியும் ஒரு சொர்க்கமா என்று! ஆனால் அந்த சொர்கத்தில் நான் பட்ட/படுகிற இம்சைகள் ஐயையோ!!!

  அதிஅதிகாலை மூன்று மணிக்கு கிங்பிஷர் என்னை இறக்கிவிட்டதும் டிரைவர் பர்துபாயின் கெஸ்ட்ஹௌசில் கொண்டுவந்து விட்டுவிட்டான். ஒரு நபர் (முகமது) கதவை நீக்கிவிட்டு ஒரு கட்டிலைக் காட்டி "அங்கு படுத்துக்கொள்" என்று கூறிவிட்டு இன்னொரு அறைக்குத் தூங்கப் போய்விட்டார். அந்த கட்டிலில் மெத்தையோ அல்லது பெட்ஷீட் என எதுவும் இருக்கவில்லை. அடுத்த கட்டிலில் ஒரு நபர் (பிரசாந்த்) உறங்கிக் கொண்டிருந்தார். அந்த அறையின் குளிர் வெறும் 10'Cதான் இருக்கும். ஒரே நிமிடத்தில் சகலமும் விறைத்துவிட்டது (இதில் டபுள் மீனிங் கிடையாது). வெளியே வந்து சமையல் அறையில் விடியும்வரை உலாவிக் கொண்டிருந்தேன்!
 
   காலையில் அந்த நபர் தன்னை பிரசாந்த் (பூர்வீகம் - ராஜஸ்தான்) என அறிமுகப் படுத்திக் கொண்டார். (ஐ ஜாலி! எப்படியாவது கொஞ்சமாவது ஹிந்தி கற்றுக் கொள்ளலாம்!) அவரும் என்னுடைய பணியைத்தான் செய்து கொண்டிருக்கிறார். பின்னர் வந்த நாட்களில் இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டோம்! (பெரும்பாலான சமயங்களில் நான்தான் அவனிடம் ஹிந்தியில் கெட்ட வார்த்தைகளை உபயோகிப்பேன். அவன் ஒருமுறைகூட என்னை பேசியதில்லை!).

   அடுத்த நாள் உறங்குவதற்கு பெட், பெட்ஷீட் என அனைத்தையும் ஏற்பாடு செய்துவிட்டிருந்தனர். இப்போது அந்த கெஸ்ட்ஹௌசில் மொத்தம் தங்கியிருப்பது மூன்று பேர், வாடகை - 70,000 INR/ MONTH இந்திய மதிப்பில்!(கம்பனிதானே கொடுக்குது!) மொத்தம் மூன்று அறைகள், ஒரு ஹால், ஒரு சமையலறை என மிகப் பெரியது.
 
   வெள்ளிக்கிழமை விடுமுறை. மிகவும் கடுப்பான சமயம், "சரக்கு அடிக்கலாமா?" என பிரசந்த்திடம் கேட்டேன். சரியென்று அருகிலிருந்த ஒரு மலையாள பாருக்குச் சென்றோம். ஆளுக்கொரு பியர் சாப்பிட்டோம்! (ஏன்னா! விலை மிக மிக அதிகம் 1beer 500 ml= 350 INR). நம் ஊரை போல வெளியில் வாங்க முடியாது. அப்படி வாங்க லைசென்ஸ் வாங்க வேண்டும், அதற்கு அலுவலகத்தின் முத்திரையும் கையெழுத்தும் வேண்டும். (நடக்கிற காரியமா?)


   அடுத்த வார வெள்ளிக் கிழமையின்போது வந்திறங்கினார் சார்லஸ். வந்து ஒருமணிநேரம் கூட முடிந்திருக்காது ஐந்து சிகரெட்டை முடித்திருந்தார். "அருகில் பார் எங்கிருக்கிறது?" என்றார்.
அன்றைய தினம் மொத்தம் இரண்டு PITURE பீர் முடிந்திருந்தது. மதியம் மூன்று மணியிலிருந்து இரவு எட்டு மணிவரை இதேதான்!

 பார் சர்வர் மலையாளிப் பெண் பிரசாந்தைப் பார்த்து, "என்னை மாதிரியே உனக்கும் நடுப்பல் விலகி இருக்குது" என்றது.

"ஒரு நாள் வச்சு வேண்ணா அளந்து மொத்த அழகையும் பாருங்களேன்" கமண்டினேன்.


சைக்கோ தொடர்கதை முழுதும்


எதுலயும் ஒரு சுவாரஸ்யத்தை எதிர்பார்கிறவன் நான்ஆனா இம்புட்டு சுவாரஸ்யத்தை எதிர்பார்க்கலை!


0 COMMENTS:

Post a Comment