Blogger Widgets

காந்திஜியின் நெத்தியடி!!!


ஒருமுறை காந்திஜி அவர்கள் கப்பலில் பயணம் செய்தார். அப்போது அவர் அருகில் அமர்ந்திருந்த வெள்ளையர் ஒருவர் பைப் வைத்து புகைத்துக்கொண்டிருந்தார். அந்தப் புகை காந்திஜியின் முகத்திலேயே வந்து மோதியது! அந்த வெள்ளையரும் அமர்திருப்பது காந்திஜி என்று தெரிந்தும் அவரை வம்புக்கு இழுக்கவேண்டுமென்றே புகையை அவரின் முகத்தில் ஊதினார்.

“நண்பரே புகை என்மீது படுகிறது, சற்று தள்ளிச்சென்று புகை பிடியுங்கள்” என்று அமைதியாகக் கூறினார் காந்திஜி.

“இது என் வாய், பிடிப்பது என்னுடைய சிகரெட், நான் காசு கொடுத்து வாங்கியது இதனால் உனக்கென்ன???” என்று அதட்டினார் வெள்ளையர்,

“அப்போ புகையும் உங்களுடையதுதானே?” என்றார் காந்திஜி.

“ஆமாம்!”

“அப்போ அதையும் நீங்களே வைத்துக் கொள்ள வேண்டியதுதானே! என்மீது ஏன் ஊதுகிறீர்கள்??” என்றார் காந்திஜி.

எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு வெளியேறிய வெள்ளையர் பயணம் முடியும் வரையில் காந்திஜியின் கண்களில் படவே இல்லை!!!


0 COMMENTS:

Post a Comment