Blogger Widgets

ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம்! அணிகளே கொடுக்கும் லஞ்சம், கறுப்புப் பணம்!

  INDIA TV வெளியிட்ட ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்களின் SPOT FIXING ஒருபுறம் அதிர்ச்சியைக் கொடுத்தாலும் மறுபுறம் புழங்கும் கறுப்புப்பணமும் அணிகளே கொடுக்கும் லஞ்சமும் அதற்கு கிரிக்கெட் வாரியமே உடந்தையாய் இருப்பதும் நம்மை இன்னும் அதிர்ச்சி அடைய வைக்கிறது..

ஐ.பி.எல் ஸ்பாட் பிக்ஸிங்கால் போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டுள்ள வீரர்கள்:

              

1.   டி.பி சுதிந்திரா - டெக்கன் சார்ஜர்ஸ்
2.   மோனிஷ் மிஷ்ரா - புனே வாரியர்ஸ்
3.   ஷாலப் ஸ்ரீவஸ்தவா - கிங்ஸ் XI பஞ்சாப்
4.   அபினவ் பாலி - கிங்ஸ் XI பஞ்சாப்
5.   அமித் யாதவ் - கிங்ஸ் XI பஞ்சாப்) 

  சுசிந்திரா (டெக்கான்) - கடந்த ஆண்டு நடந்த முதல் தர போட்டியில் (லோக்கல் மேட்ச்) டி.வி. சேனல் நிருபரின் விருப்பதற்கு ஏற்ப நோபால் வீசியுள்ளார். அந்த நோபாலில் தன் காலை 20-INCH தள்ளி வைத்து பந்தை வீசியிருக்கிறார். (உன்னோட கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?) அந்த நிருபரிடம் ரூ.60 லட்சம் கொடுத்தால் அணி மாற தயார் என்று கூறியுள்ளார்.. 

                          

  மோனிஸ் மிஸ்ரா (புனே) -.1.45 கோடி இந்த வருட ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட அணி நிர்வாகத்திடமிருந்து பெற்றிருக்கிறார். இதில் ரூ.1 கோடி வரை கறுப்பு பணம். 

  ஸ்ரீவத்சவா (பஞ்சாப்) – இவர் ஐ.சி.எல். போட்டிகளில் ஆடியிருக்கிறார். ஐ.சி.எல் கடையை மூடிய உடனே இங்கே வந்துவிட்டார். இவர் ஐ.பி.எல். போட்டியில் நோபால் வீச ரூ.10 லட்சம் கேட்டுள்ளார். இவரது சம்பளம் அதிகபட்சம் 30 லட்சம், ஆனால் ஸ்ரீவத்சவாவுக்கு கறுப்பு பணமாக ரூ.70 லட்சம் வரை கொடுக்கப்பட்டுள்ளது.



விதிமுறையின் குறைபாடு:-

  சர்வதேச போட்டியில் பங்கேற்காத உள்ளூர் வீரர்கள் (CATOGORY-3) அதிகபட்சமாக ரூ.30 லட்சம் தான் பெற முடியும். அவர்கள் எவ்வளவு நன்றாக ஆடினாலும் சரி. அவர்களது சம்பளம் அவ்வளவுதான்.

உதாரணம்:-

  கடந்த ஆண்டு அணி வீர்கள் தேர்வின்போது, சென்னை உரிமையாளர் சீனிவாசன் வீரர்களை எடுக்க உத்தேசித்திருந்த வீரர்கள்

1.தோனி, 2.ரெயினா, 3.கம்பீர்.

  ரெயினா சிறந்த T-20 பிளேயர் என்பதால் கம்பீரைவிட அவருக்கே முன்னுரிமை. தோனியையும், ரெயினாவையும் அவர் தக்க வைத்துக்கொண்டதால் விதிமுறைப்படி அவர் ரெயினாவிற்கு கொடுக்கவேண்டிய சம்பளம் 8 கோடி. ஆனால் காம்பீரின் சம்பளம் 11 கோடி. இவ்வளவு குறைவான சம்பளத்தில் ரெயினா விளையாடுவாரா?

  புதிதாய் வந்த ஜடேஜாவின் சம்பளமோ 9 கோடி! இது ரெயினாவைவிட மிக அதிகம்! நிச்சயம் ரெயினா உட்பட அனைத்து அணிவீரர்களுமே தங்களுடைய அணியிடமிருந்து லஞ்சமாக கறுப்புப்பணம் பெறுகிறார்கள்.

  அணித்தலைமை வீரர்களுக்குக் கறுப்புப்பணம் கொடுக்கவில்லை என்றால் மற்ற அணிகள் கொடுத்து வீரர்களை வாங்கிவிடும் அவலமும் நேரலாம்!

                                                    


கிரிக்கெட் வாரியம் என்ன செய்கிறது?

  பல்லாயிரம் கோடிகள் புழங்கும் இடத்தில் எல்லாமே அரசுக்கு தெரிந்து, அரசு விதிமுறைகளின்படி நடந்தால் யாருக்கு என்ன லாபம்?

  மேற்கூறியவை எல்லாம் கிரிக்கெட் வாரியத்திற்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இதனால் பிசிசிஐக்கும் லாபம். அணி உரிமையாளர்களும் தங்களிடமுள்ள கறுப்புப்பணத்தை வீரர்களுக்குக் கொடுத்துவிடலாம்! அணியினால் வரும் அனைத்து லாபமும் நல்ல பணமாகவே கைக்குக் கிடைக்கும்.

வழக்கம்போல் அரசுக்கும், பார்க்கும் மக்களுக்கும் நாமம்!

ஒரு நகைச்சுவை – ஐ.பி.எல் அணிகள் வீரர்களுக்கு லஞ்சம் கொடுக்கலாம்! ஆனால் வீரர்கள் வெளியிலிருந்து லஞ்சம் வாங்கக்கூடாது!


5 COMMENTS:

  1. Match results of all IPL games are planned in advance such as WWE games.

    ReplyDelete
  2. They are making millions out of nothing.

    ReplyDelete
  3. லீக் போட்டியில் பெங்களூர் RCB மிகவும் எளிய DC இடம் தோற்றதே காட்டிக் கொடுத்து விட்டது!!

    ReplyDelete
    Replies
    1. கதைல இன்னும் கிளைமாக்ஸ் முடியல - இன்னும் பாருங்கோ! :)

      Delete