Blogger Widgets

நாராயணா இந்த இணையதள கொசுக்களை அடிச்சு கொல்லுப்பா!


    வர வர இந்த இணையதள கொசுக்களின் தொல்லை தாங்க முடியலை! (போக போக சரியாயிடும்!) இவனுக பண்ற இம்சை தாங்க முடியலடா சாமி! எப்புடியல்லாம் கிடா வெட்டுராங்கனு பாருங்க.
 
  1. FACEBOOK-இல் ஒரு 5000பேருக்கு FRIEND REQUESTஅனுப்புவது, ஒரு ஆயிரம் பேராவது நண்பர்களாக ஏற்றுக் கொள்வார்கள். குறைந்த பட்சம் இரண்டு முறையாவது உங்கள் ஐடியை FACEBOOK-பிளாக் செய்துவிட்டிருக்கும்.

  2. FACEBOOK ஒரு GROUP ஆரம்பிக்க வேண்டியது, இருக்கிற எல்லா நண்பர்களையும் அதில் சேர்த்துவிடுவது. பின் அனைவருக்கும் நண்பர்களை சேர்க்க சொல்லி மெசேஜ் அனுப்புவது! கதறக் கதற ஆட்களை பிடித்துக் கொண்டுவந்து அதில் சேர்த்து விடுவது.

  3. இது கூட பரவாயில்லை. இரண்டு மூன்று ஐடி பெண்கள் பெயரில் உருவாக்குவது, பின் அவன் போடும் போஸ்டுக்கு அவனே அந்த பெண்கள் ஐடியில் கமெண்ட் போட்டுக் கொள்வது. எதுக்குடா உங்களுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு?

  4. இன்னும் பல்லு விலக்கவில்லை என்று ஒரு பெண் போஸ்ட் பண்ணினால், 800லைக், 300கமெண்ட் இருக்கும். (இவனுக போய் அந்த பல்லை தேச்சு விடுற மாதிரி!). நான் சாகப்போகிறேன் என்று ஒரு ஆண் போஸ்ட் பண்ணினால் ஒரே ஒரு லைக் இருக்கும் (என்ன கோவமோ?)

  5. இரவு மூன்று மணிவரை கமெண்ட் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள், பிறகு குட் நைட் சொல்லிவிட்டு, நான்கு மணிக்கு குட் மார்னிங் என்று ஸ்டேடஸ்! நீங்கல்லாம் என்ன நைட் வாட்ச்மன் வேலை பண்ணுரீங்களாடா?
     
  6. காலையில் குட் மார்னிங், மதியம் குட் அப்டேர்நூன், இரவு குட் நைட் என்று ஸ்டேடஸ் அப்டேட். இது உலகத்துக்கு தெரியாத அதிசயம், டேய் ஏண்டா? ஏன்?

  7. சில இணைய தளங்கள் இருக்கின்றன. யூடுபில் வரும் பிட்டு வீடியோக்களை அவர்களின் இணைய தளங்களில் போட்டுவிட்டு அதற்கு கதை, திரைக்கதை எழுதுவது. அதனுடைய லிங்கை FACEBOOKஇன் அனைத்து நண்பர்கள், குரூப், பேஜிலும் பட்டியலிடுவது. (பக்கிப் பயலுகளா! படம் பார்க்க வேணும்னா நாங்க யூடுபிலேயே பார்த்து விடுகிறோம், அதை எதுக்குடா உங்க தளத்துக்கு வந்து பார்க்கணும்?)

  8. இதாவது பரவாயில்லை, பல இணையதளங்கள் காப்பி/பேஸ்ட் செய்வதற்கென்றே நடத்துகிறார்கள். பிரபல செய்தி இணையதளங்களில் வரும் அனைத்து செய்திகளையும் காப்பி/பேஸ்ட் செய்து போடுவதைத் தவிர வேறொன்றையும் போடுவதில்லை. இந்த தளங்களைப் பிரபலப்படுத்த இரண்டு மார்க்கெட்டிங் ஆட்கள் வேறு! உங்களுக்கே சலிக்காதா?

  9. இந்த பிளாக்கர்கள் தொல்லை பெரும்தொல்லை. பாதிக்கும் மேற்பட்ட ப்ளாக்குகள் சினிமா பற்றியதாகவே உள்ளது, அதில் பாதி நடிகையின் கவர்ச்சி படங்களை போடுவதே வேலை. இது கூட பரவா இல்லை, தலைப்புகளை பாருங்களேன், "ஜில் ஜில் ராணியின் ஜல்சாப் படம்", "மழை நடிகையின் சுளையான படங்கள்" (எங்கிருந்துடா இந்த தலைப்பெல்லாம் புடிக்கிறீங்க? எதுகை மோனைல டி.ஆர்-யே மிஞ்சுரீங்கப்பா)


  10. சினிமா, இணையம் எல்லாமே பொழுதுபோக்குச் சாதனங்கள், அதுவே இப்போ பொழுதை போக்கும் சாதனைகளா மாறிப் போய்டுச்சு! இணையத்தில எங்கயோ இருக்கிற ஒரு முகம் தெரியாத பொண்ணோட கடலை போடுரதில இருக்கிற ஆர்வம், கூடவே இருக்கிரவங்களோட பேசுறதில இருக்கிறதில்லை.

சரி வந்ததுதான் வந்துட்டீங்க அப்புடியே மேல இருக்கிற JOIN NILAPENUKKU ON FACEBOOK- லைக் பண்ணி இணைஞ்சிடுங்கோ!  (முதல்ல இவனை அடிச்சு கொல்லுங்கப்பா!)


3 COMMENTS:

  1. இதில் பலதும் யாரையோ மனதில் வைத்து சொல்வது போலவே இருக்கிறது. :(
    அது சரி ஒரு ஆண் சாகபோவதாக சொல்வதற்கு எதற்கு like போடவேண்டும்? ஒரு like என்பதே அதிகப்படி!!

    ReplyDelete
    Replies
    1. //இதில் பலதும் யாரையோ மனதில் வைத்து சொல்வது போலவே இருக்கிறது. /// ஹா ஹா ஹா! நிஜம்தான்! ஒரு கடுப்புல எழுதினது

      //ஆண் சாகபோவதாக சொல்வதற்கு எதற்கு like போடவேண்டும்? // அவன் சாவுரதில அம்புட்டு ஆசை! :(

      Delete