Blogger Widgets

காதலியின் அதிர்ஷ்டம் – நகைச்சுவை


காலையில் அவரது நடைபயிற்சியின்போது திடீரென எதிரே வந்த ஒரு பைக் அவர்மீது மோதியது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் இரண்டு நாட்கள் கோமாவில் இருக்கும் நிலை ஏற்பட்டது.  கண்களை திறந்து பார்த்தபோது, அவரது காதலி தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள். 
அவர் “பல்கலைக்கழகத்தில் என் ஆய்வுகள் என போராடிக்கொண்டு இருந்த போது,  நான் மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்தேன்  (கண்களில் கண்ணீர்) அப்போது நீ என்னுடன் இருந்து என் முயற்சியை ஊக்குவித்தாய்"

தொடர்ந்து அவர் "நான் என்னுடைய வேலைக்கான நேர்முகத் தேர்வில் தோல்வியடைந்தபோது,  நீ என்னுடன் இருந்து மற்ற வேலைகளுக்கான விளம்பரங்கள் வெட்டி,  அவைகளுக்கு விண்ணப்பிக்க உதவி செய்தாய்"
தன் காதலியின் கைகளை அழுத்தமாகப் பற்றிக் கொண்டார். பின் "நான் ஒரு சிறிய நிறுவனத்தைத் தொடங்கி இறுதியாக ஒரு பெரிய ஒப்பந்தம் கிடைத்தது. அப்போது நடந்த ஒரு சிறிய தவறால் அது கிடைக்காமல் போனது அப்போதும்கூட நீ எனக்குத் துணையாக இருந்தாய்."

காதலியின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. மேலும் அவர் “இறுதியாக எனது நிறுவனம் மூடப்பட்ட பின் எனக்கு ஒரு வேலை கிடைத்தது ஆனால் அங்கு எனது கடின உழைப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நான் இன்னும் அங்கு சேர்ந்த அதே நிலையில்தான் இப்போதும் இருக்கிறேன், அதேபோல் நீயும் என்னுடன் இருக்கிறாய்" 

அவள் அவனை கவனிக்கக்கூட சக்தியில்லாமல் கீழே பார்த்துக் கொண்டே கூறினாள், "நீங்கள் கூறுவதும் சரிதான், உண்மையில் நீங்கள் சொல்வது போல நமக்குள் ஏதோ இருக்கிறது" என்று புலம்பினாள்.

இறுதியாக அவர் சொன்னார்,

"
உன்னுடைய துரதிர்ஷ்டம்தான் என்னைத் துரத்துகிறது என நான் நினைக்கிறேன்.!


0 COMMENTS:

Post a Comment