Blogger Widgets

தினமலரும் கருகிய செடியும்!


    தாய்க்கும் தாரத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்களை என்ன செய்வது??? பன்னிகளையும் மனிதர்களையும் பிரித்தறியத் தெரியாதவர்களை என்ன செய்வது???

நேற்று தினமலரில் ஒரு கட்டுரை. (சிறப்பு நிருபர் என்ற பெயரில் வழக்கமாய் எழுதும் ஒரு சிரப்பு நிருபர்) எழுதிய கட்டுரை. (Click here  to see)

   தொடக்கம் முதலே தினமலர் திமுகவையும் கலைஞரையும், கனிமொழியையும் விமர்சித்து வருகிறது. ஆனால் அதிமுகவைப் பற்றி ஒரு விமர்சனமும் இருக்காது. விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இருந்தவரை விமர்சிக்காத இது, கூட்டணி முறிந்தவுடன் கிழி, கிழியென கிழித்தது. அதுவும் 2G-வழக்கில் சிறையில் உள்ள கனிமொழியைப் பற்றி பக்கம் பக்கமாய் எழுத்திலும், கார்டூனிலும் வரைந்து குதூகலமடைந்தது. விமர்சனம் செய்யலாமென்றாலும் கனிமொழியைப் பற்றி மட்டுமே விமர்சிக்கும் இது, அம்மாவைப் பற்றி ஒரு எழுத்துகூட விமர்சித்து வராது, ஏன் பெங்களூரு நீதிமன்றத்திற்கு பத்து வருடம் தாமதித்து சென்று வந்ததைக்கூட மொத்த செலவு இத்தனை லட்சம் எனப் பெருமையாய் எழுதினார்கள். இதுதான் உண்மையின் உரைகல்லாம். (இதற்கு நேர்மாறாய் திமுக ஆட்சியின்போது முரசொலியைவிட கலைஞரை புகழ் பாடியது தினத்தந்தி என்பது வேறு விஷயம்)

   இன்றுள்ள தமிழ் இணைய தளங்களில் மிகச் சிறப்பாய் இருப்பது தினமலர்தான். அதிக இணையதள வாசகர்கள் கொண்டதும் அதுதான். ஆனால் முதலில் இருந்தே புலிகளை மிகக் கடுமையாக விமர்சித்து வருவதும் இந்த பத்திரிகைதான். விமர்சனங்கள் தவறில்லை என்றாலும் சில உள்நோக்கத்துடன் எழுதப்படும் கட்டுரைகள் மக்களின் மனதில் விஷத்தையே வளர்க்கும்.

    நேற்று வந்த கட்டுரையில் ஒரு கேரளப் பெண்ணை கற்பழித்துக் கொன்ற ஒருவரையும், ராஜீவைக் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள மூவரையும் ஒப்பிட்டு ஒரு வக்கிர கட்டுரையை வெளியிட்டிருந்தார்கள். ராஜீவைக் கொன்றவர்களின் மரண தண்டனையை எதிர்த்தது போராடுவதைப்போல் ஏன் இவருடைய மரண தண்டனையை எதிர்த்துப் போராடவில்லை, எங்கே சென்றுவிட்டார்கள் தமிழ்க் குடிதாங்கிகள் என்று.


   இவர்களுக்கு நாட்டைக்காக்கும் ராணுவ வீரர்களுக்கும், வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகளுக்கும், கற்பழித்துக் கொலை செய்யும் கொலைகாரர்களுக்கும் வித்தியாசம் தெரியாது. தன் மக்களின் நல்வாழ்க்கைக்காகத் தன் வாழ்க்கையையே இழக்கத் துணிந்து, இழந்து நிற்பவர்கள் அந்த மூன்று பேர். அது தவறென்றாலும் அவர்களுடைய சொந்த மகிழ்ச்சிக்காகவோ, அல்லது பணத்திற்காகவோ செய்யப்பட்டதல்ல அது.

   தன் ஆசைக்காக ஒரு பெண்ணை ரயிலிலிருந்து தள்ளி கற்பழித்துக் கொன்றவர் விருத்தாசலத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி. இப்படிப்பட்டவர்களை ஒப்பிட்டு ஓர் கட்டுரை வெளியாகிறது என்றால், இது நிச்சயம் ஆசிரியரால் பலமுறை படித்து உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை. இதுபோல் பல கட்டுரைகளை வெளியிட்டுவிட்டது. அதற்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் அதை இணைய தளத்தில் இருந்து நீக்கிவிடும்.

இது நம் ஒற்றுமையக் குலைக்க எழுதப்பட்ட ஒன்று. 
  • இதுபோல்தான் இலங்கையில் தமிழுக்காகப் போராடிய ஒருவனுடன், தன்னுயிரையே கொடுத்தவனுடன், மொத்தமிருந்த முப்பது லட்சம் தமிழ்களில், சாகும்வரையில் உடனிருந்து மூன்று லட்சம் பேர்!!! 
  • அந்த மூன்று லட்சம் பேருக்காக ஒருவர் உண்ணாவிரதம் இருந்தது முக்கால் மணி நேரம்
  • இன்னுமொரு தலைவர் அதையும் செய்யவில்லை.

    இப்படி நமக்குள்ளேயே ஒற்றுமை இல்லையென்றால் நம்மை ............................................ (கெட்ட வார்த்தைகளை எழுதுவதில்லை)


இந்தக் கட்டுரைக்கு பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரையிலும், இது போன்று இனி எழுதுவதில்லை என்று உறுதி அளிக்கும் வரையிலும், இனி தினமலரைப் படிப்பதில்லை, இணையதளத்தையும் பார்ப்பதில்லை என நிலாப்பெண் முடிவெடுத்திருக்கிறாள்.

இது முட்டாள்தனமான முடிவாய் தெரியலாம்! ஒவ்வொரு துளியும் சேர்ந்துதான் பெருவெள்ளமாக உருவாகிறது. விஷச்செடியை வீட்டில் வளர்ப்பதைவிட தூக்கிப் போட்டுவிடலாம்! அதுபோல்தான் மனமும்! 


1 COMMENTS:

  1. நான் அந்த மலத்தை திரும்பியே பார்ப்பதில்லை - வாகை

    ReplyDelete