Blogger Widgets

துபாயில் கடுப்பேற்றிய A.R ரஹ்மான்

   சார்! உங்களுக்கு சோகப்பாட்டு மட்டும்தான் புடிக்கும்னா உங்கவீட்டு குளியலறையில் போய்ப் பாடுங்கப்பா! லைவ்ஷோ என்பது மக்கள் சந்தோசமாகப் பாடி ஆடுவதற்காக வருவது, அதில் சுமார் மூன்று மணிநேரம் சோகப்பட்டாவே போட்டுக் கடுப்பேற்றிவிட்டார் மை லார்ட்!

   9-ம் தேதி இரவு துபாய் கிரிக்கெட் மைதானத்தில் A.R ரஹ்மான் வழங்கிய இசை நிகழ்ச்சியில்தான் இப்படிக் கடுப்பேற்றினார். "இங்கு என்ன பாட்டுப் போட்டியா நடக்குது??" என நண்பர் ஒருவர் கிண்டல் செய்தார். நான்கு ஹிந்தி பாடலுக்குப் பிறகு, "தமிழ் பாட்டு பாடலாமா?" என்று ரஹ்மான் கேட்டுவிட்டு விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலிருந்து 2 பாடல்கள் பாடினார்கள்.

   காதலன் படத்தின் "பெட்டா ராப்" பாடலுக்கு இசையை ரீமிக்ஸ் செய்து பாடினார்கள். அந்த பாடலுக்கு இனிமையே அந்த எளிமையான இசையும் நடனமும்தான்அதைவிட்டுவிட்டு ஒரு ஆங்கில இசை கொடுத்தால் எப்படியிருக்கும் அதுவும் நடனமில்லாமல்??


   எந்திரன் படத்திலிருந்து "இரும்பிலே ஓர் இருதயம்" பாடலை மெனக்கெட்டு ரோபோக்களாக ஆடியதற்கு பதிலாக "சந்திரலேகா" போட்டிருக்கலாம். அந்தப் பாடலை ஐஸ்வர்யாராய் ஆடினாலே டிவியில் பார்க்க முடியாது, அவ்வளவு கேவலமாக இருக்கும்!

   மிகவும் எதிர்பார்த்துப்போன "தையா தையா", "முஸ்தபா முஸ்தபா", "USE CONTROL (HINDI)" மற்றும் பல ஹிட் பாடல்களைப் போடவில்லை. இரண்டு ஆங்கிலப் பாடல்கள், இவைகள் எந்தப் படத்தில் வருகிறதேன்றே பலருக்குத் தெரியவில்லை (நேக்கும்தான்!)

சிறப்புகள்:

   உண்மையில் லைட்டிங் செய்தவரைப் பாராட்ட வேண்டும் அவ்வளவு அற்புதம்.. ஹாஜா மேரே ஹாஜா என்ற ஹிந்தி பாடலுக்கு 3D லைட்டிங் மிக மிக அருமை (புகைப்படம் இணைப்பு). அந்த பாடலுக்கு இசுலாமிய உடையில் வந்து ரஹ்மான் பாடியது, குரல், இசை என அனைத்தும் அற்புதம்..


   புது வெள்ளைமழை குழந்தைகளின் வீடியோவுடன் கொடுத்தது நன்றாக இருந்தது.

   ஹிந்தி பாடல்களில் "மஸகலி மஸகலி", "கரு ஆஜா", "ரங்குதே பசந்தி" மற்றும் ROCKSTAR படத்தின் மற்ற பாடல்களும் அருமை. "ஜெய் ஹோ" பாடல் நன்றாக இருந்தது.

   மொத்தத்திற்கும் சேர்த்து கடைசி அரை மணிநேரத்தில் கலக்கிவிட்டார். முதல் மூன்றரை மணி நேரத்திற்குப் பிறகு, கிளம்பலாம் என்று எண்ணியபோது "முக்காலா முக்காபுலா" (தமிழில்) என்றதும் அரங்கமே அதிர ஆரம்பித்தது. அனைவரும் எழுந்து ஆட ஆரம்பித்துவிட்டனர். இதைத்தானே எதிர்பார்த்தோம்! இதற்கு இசை, நடனம், ஒளி அமைப்பு என அனைத்தும் அருமை. இன்னும் இந்த பாடல்கள் இவ்வளவு வரவேற்பை பெறுவது அதிசயம்தான்!

   அடுத்து "ஹம்மா ஹம்மா"வை தமிழில் ரஹ்மான் பாடினார். மொழி தெரியாதவர்கள்கூட அரங்கத்தில் ஹம்மா ஹம்மாவை உச்சரித்தனர். கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

   அடுத்து ஓர் ஹிந்தி பாடல் பாடும்போது இடையில் நிறுத்தாமல் ரஹ்மான் இசையமைத்த "வந்தே மாதரம்" பாடலைத் தொடங்கியதும் அனைவரும் எழுந்து நின்றுவிட்டனர். நாம் இன்னும் இந்தியாவை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதற்கு இதுவே சாட்சி. இந்தப் பாடலை முழுமையாகக் கொடுத்திருக்கலாம்!


1 COMMENTS:

  1. \\\ரஹ்மான் இசையமைத்த "வந்தே மாதரம்" பாடலைத் தொடங்கியதும் அனைவரும் எழுந்து நின்றுவிட்டனர். நாம் இன்னும் இந்தியாவை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதற்கு இதுவே சாட்சி.\\\

    நெகிழ்வான விசயம்

    ReplyDelete