Blogger Widgets

என்ன சொல்வேன்? வார்த்தையின்றி நிலவன்பன்!

அருகில் வந்தவள்
அணைத்துக் கொண்டாள்,
முன்னே வந்தவள்
முத்தமிட்டுச் சொன்னாள்
“பிரிந்துவிடுவோமா?”


கைகள் துடிக்க,
இதயம் துடிக்காமல்
இன்னும் ஞாபகங்களில்,
பிரியும் வேளையில்
உன் கண்ணாடிக்குக் கொடுத்த
கடைசி முத்தம்!


காய்ந்துபோன இதழுக்கு
இன்னும் ஈரம் கொடுத்துக்கொண்டிருக்கின்றன
கண்ணீர்த் துளிகள்!


இன்னும் ஏதேதோ ஞாபகங்கள்
எதற்குமே வார்த்தையில்லை
எதிலுமே கோர்வையில்லை
ஏனெனில் என்னுடன் நீயில்லை!


18 COMMENTS:

  1. கவிதைகளில் ஏன் இந்த சோகம்........

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்வேன்? வார்த்தையின்றி நிலவன்பன்!

      Delete
  2. பிரிவின் துயரம் - யாராலும் மறக்க(வே) முடியாதது...

    ReplyDelete
    Replies
    1. நிறைய அனுபவம் போல :-)

      Delete
  3. //இன்னும் ஏதேதோ ஞாபகங்கள்
    எதற்குமே வார்த்தையில்லை
    எதிலுமே கோர்வையில்லை
    ஏனெனில் என்னுடன் நீயில்லை//

    arumayana varigal

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் லதா ஃபான்ட் அருமையாதான் இருக்கும் :-)

      Delete
    2. vaarthai illamala ivalavu solrenga mudiyalanga

      Delete
    3. முடியலேன்னா உடனே ஹாஸ்பிடல்க்கு கிளம்பவேண்டியதுதானே? :-)

      Delete
  4. ஐயோ.... பாவம்... அந்தப் பெண்.

    ReplyDelete
    Replies
    1. பாவத்துல தீய வைக்க!

      கஷ்டப்படுறது நானு, பாவம் அந்தப்பொண்ணா? :-)

      Delete
  5. உங்களுக்கும் வார்த்தையின்றி போச்சா! :-)

    இதுதான் கவிதையை உள்வாங்கி ரசிக்கனும்ங்கறதா?

    ReplyDelete
  6. என்னுடன் நீயில்லை....

    சோகத்தின் காரணம் பெருசா தான் இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. இப்படிக்கு என்னவள்! - அப்படின்னு கடைசியா ஒரு வரி சேர்த்து முடிச்சிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்ல? :-)

      Delete
  7. என்னுடன் நீயில்லை..

    ungaludaya sogam intha oru varthaiyile therithunga, pavam neenga

    ReplyDelete
    Replies
    1. ithu mathiri neenga blog ezhuthum pothu ungaludaya sogam konjam kuraiumanga nallathu, thodarattum intha payanam

      Delete