Blogger Widgets

சேட்டை – டரியல் சினிமா விமர்சனம்.

ஆர்ர்ர்யா – யாருயா இந்தாளு? பிங்க் சொக்காய போட்டுகினு கடசி அஞ்சு படத்திலேயும் அதே பாட்டுக்கு அதே டான்ஸ் ஆடிகினு இருக்காரு?

அஞ்சலி : மாடர்ன் டிரெஸ்ஸ போட்டுகினு வந்தா- ப்பா! யாருடா இந்த பொண்ணு பேய் மாதிரி?

ஹன்சிகா! – டிரெஸ்ஸையும் தொப்பையயும் குறைச்சா மட்டும் பத்தாது, கொஞ்சமாச்சும் நடிக்கனும் கண்ணு. நைனா இந்த பொண்ணு பேசும்போதெல்லாம் எதோ பஞ்சாபி டப்பிங்க் படத்துக்கு வந்தமாதிரியே பீலிங்.

டைரு டக்டர்ர்ர்ரு : ஏப்பா கதைய செலக்ட் பண்ணும்போதே எதுக்கு பண்றோம்னு யோசிக்க வேணாமா? ஹிந்தில டெல்லி பெல்லி ஓடினதே பிட்டுக்காகவும், டபுள் மீனிங்குக்காவும் மட்டும்தான். தமிழ்ல ஒன்னும் இல்லாததற்கே படத்திக்கு சென்சார் கொடுக்க மாட்டனுவள். பின்னே பிட்டை எல்லாம் நீக்கிட்டு எடுத்தா? (ஏமாந்தது நானு). ஹிந்தி படத்தின் மிகப்பெரிய பிளஸ் “கருமி ராஜா, ஐ ஹேட் யூ” பாடல்கள். அதுவும் படத்தில் இல்லை.

படம் பார்த்த ஒரு ஹிந்திவாலா

மூஜிக் – : ட்ரெயின்குள்ளே உக்காந்துகினு பழைய ரேடியோ பொட்டில பாட்டு கேட்கற மாதிரியே ஒரு பீலிங்க். எல்லா பக்கத்திலிருந்தும் சொஈஈஈஈநனு ஒரு சவுண்டு. 40 நிமிஷம் அவ்வ்வ்!

ஆர்யா லிப்டுலிப் கொடுத்திட்டு “இப்ப என்ன தோணுதுனு” கேட்கும்போது பக்கத்து சீட்காரர், “இன்னும் அஞ்சு டேக் கேட்க தோணுது” ஹி ஹி.

செல்போன் நம்பர் 9 டிஜிட் மட்டும் போட்டு கூப்பிட்டா ஹாஸ்பிடலுக்கு போவுது. அட பாவிகளா? எண்ட குருவாயூரப்பா!

படம் ஏதோ சுறா, அலெக்ஸ் பாண்டியனுக்கு வந்தமாதிரி தோணாம இருக்கக்காரணம் சந்தானம் காமெடி, நாசர் நடிப்பு.



மொத்தத்துல சேட்டை Settai  – 3 / 10. (அதுகூட சந்தானத்திற்காக மட்டும்)

டெல்லி பெல்லி கோட்டைனா சேட்டை வெறும் மண்கோட்டை.

                             


டிஸ்கி : டெல்லி பெல்லினு சொல்லி ஆசையா போனா ஒகிட்டியும் லேது! நேனு ஈ ஒரிஜினல் டெல்லி பெல்லி மூவி சூஸ்கிறேன்!


3 COMMENTS:

  1. அஞ்சலிக்காக பாக்கலாம்னு இருக்கேன்

    ReplyDelete
  2. ஹிந்தில பாக்காம தமிழ்ல பாக்கறவங்களுக்கு சந்தானம் காமெடிக்காக பிடிக்கும்..

    ReplyDelete