Blogger Widgets

தலைவா - திரை விமர்சனம்.

  ஓட்டையான ரோடுகளைச் சரிசெய்ய வக்கில்லை, போகிற கரண்டை சரி செய்ய தெம்பில்லை, இலவசம் கொடுத்தே ஏமாற்றி வரும் அரசாங்கங்களுக்கு மக்கள் பிரச்சினைகளை எண்ணிப்பார்க்கக்கூட நேரமில்லை ஆனால் ஏதாவது சினிமாவை ரிலீஸ் ஆகாமல் முடக்குவதென்றால் அப்படியொரு ஆனந்தம். முதலில் காவலன், விஸ்வரூபம் இப்போது தலைவா.

  இந்தப்படத்துக்கு பாதுகாப்பு வழங்க முடியாதாம். பிறகு எதற்கு அரசாங்கம் நடத்த வேண்டும், ரிசைன் செய்துவிட வேண்டியதுதானே? ஒரு படத்தைக்கூட வெளியிட எங்களுக்கு வக்கில்லை அதனால் ரிசைன் செய்கிறோம் என்று சொல்லிவிட வேண்டியதுதானே?

  அரசாங்கம் தடை செய்யும் அளவுக்கு துளிகூட அரசியலோ, அரசியல் வசனங்களோ இல்லை. சத்தியராஜ் கேரக்டர் பெயர் அண்ணா. ஒருவேளை இதற்குத்தான் தடையோ என்ன எழவோ!



கதை:

  நாயகன், தேவர் மகன் கதைய மிக்ஸ் பண்ணினா அதான் தலைவா கதை. வில்லன்களுடனான மோதலில் மனைவியை இழக்கும் சத்தியராஜ் சிறுவயது மகனை ஆஸ்திரேலியா அனுப்புறார், அவர்தான் விஜய். ஆஸ்திரேலியாவில் “தமிழ் பசங்க” என்ற மியுசிக் ட்ரூப் நடத்துகிறார் விஜய். அமலா பாலை (தீஞ்சுபோன பால்) லவ்வும் விஜய் முதல்முறையாக அப்பாவுக்கு தெரியாமல் அமலாபால், அவர் அப்பாவையும் கூட்டிக்கொண்டு சம்பந்தம் பேச இந்தியா வர்றார்.

  மும்பையில் சத்தியாராஜ் பெரியா டான்னாக இருப்பதைப் பார்த்து அமலாபாலும் அவரது அப்பாவும் ஆஸ்திரேலியா திரும்ப நினைக்கின்றனர். அப்போது சம்பந்தம் பேசவரும் சத்தியராஜை போலீஸ் பிடிக்கிறது, அப்போதே பாம் வெடித்து இறந்துவிடுகிறார். பிறகு விஜய் சத்தியாராஜ் வேலைகளை தானே எடுத்து வில்லன்களை எப்படி அழிக்கிறார் என்பதுதான் கதை..

  படத்தில ரெண்டு ட்விஸ்ட். ஒன்று இடைவேளைக்கு முன்னாடி, இன்னொன்று கிளைமாக்ஸ்சில்.
வழக்கம்போல ஒளிப்பதிவு சூப்பர், பின்னிசை படுகேவலம். பாடல்கள் படு மொக்கை, “வாங்கண்ணா வணக்கங்கண்ணா” சூப்பர்.


  விஜய் நடிப்பு(????), டான்ஸ் அருமை. சந்தானம் கலக்கல் காமெடி. முதல்பாதி முழுவதும் விஜயும், சந்தானமும் அடிக்கும் லூட்டி செம கலக்கல். அதைவிட ஹைலைட் காமெடி என்னவென்றால் படம் முடியும்போது விஜய் சத்தியராஜின் கெட்டப்பில் ஜிப்பாவையும் துண்டையும் போட்டுக்கொண்டு வரும் சீனை ஆபரேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கிறார்.

  அமலாபால் தீஞ்சுபோன பால். பார்த்தாலே கடுப்படிக்கிறது. சத்தியராஜ் நடிப்பு சூப்பர்.

  ஜவ்வு இழு இழுத்து மொத்தம் மூன்று மணிநேர படம். முன்பாதி சிரிப்பு, பின்பாதி வெறுப்பு. (ஆனா டைரக்டர் மொத்தமாய் எடுத்தது 8 மணிநேர படம்மாம், எபிசொட் எபிசாடாய் வெளியிட திட்டமிட்டிருந்தனறாம்.)

தலைவா – 6  / 10

ஒருமுறை பார்க்கலாம். படம் எப்படியும் ஹிட் ஆகிடும்.

பின்குறிப்பு : ஆனால் விஜய்க்கு இந்த நிலைமை ஏற்பட ஒரே காரணம் எஸ்.ஏ.சி.தான். “நான்தான் அண்ணா, என் மகன் எம்.ஜி.ஆர்” என்று மேடைக்குமேடை முழங்கி, போகிற ஓணானை டவுசருக்குள் விட்டுக்கொள்வதே இவரது வேலை.


3 COMMENTS:

  1. vimarsanam miga arumai.... keep it up!!! you saved my money!!!!

    ReplyDelete
  2. ஓட்டையான ரோடுகளைச் சரிசெய்ய வக்கில்லை, போகிற கரண்டை சரி செய்ய தெம்பில்லை, இலவசம் கொடுத்தே ஏமாற்றி வரும் அரசாங்கங்களுக்கு மக்கள் பிரச்சினைகளை எண்ணிப்பார்க்கக்கூட நேரமில்லை \\\\\\

    விஜய்க்கு இந்த நிலைமை ஏற்பட ஒரே காரணம் எஸ்.ஏ.சி.தான். “நான்தான் அண்ணா, என் மகன் எம்.ஜி.ஆர்” என்று மேடைக்குமேடை முழங்கி, போகிற ஓணானை டவுசருக்குள் விட்டுக்கொள்வதே இவரது வேலை\\\\\\\\\\

    சரியாசொன்னீங்க

    ReplyDelete